Search
  • Follow NativePlanet
Share
» »தென் தமிழகத்தின் இரண்டு முக்கிய தீவுகளுக்கு எப்படி செல்வது - பயணவழிகாட்டி

தென் தமிழகத்தின் இரண்டு முக்கிய தீவுகளுக்கு எப்படி செல்வது - பயணவழிகாட்டி

By Udhaya

வணக்கம் நண்பர்களே.. மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை தீபகற்பம் என்று அழைக்கலாம். இத நாம ஸ்கூல்லயே படிச்சிருப்போம். அதுமாதிரி தீவுக்கும் வரையறை இருக்குது. ஆனா அது கடலை மட்டும்தான் குறிக்கணும்னு அவசியம் இல்ல. நீர்நிலைகள் எத வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஏன்.. திருவரங்கம் கூட நாலு பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி என்பதால் தீவுனே அழைக்கலாம். அப்படி தென் தமிழகத்தில் இருக்கும் இரண்டு இடங்கள் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு மிகுந்த செறிவுடன், இயற்கை அழகுகளைக் கொண்டு காண்போர் வியக்கும் வண்ணம் இருக்கிறது. அந்த தீவு எங்கே இருக்கிறது, எப்படி செல்வது, அருகில் காணவேண்டிய இடங்கள் யாவை என்பன பற்றி இந்த பதிவில் காண்போம்.

நான்தான் ரமேஷூ.. என் பிரண்டு சுரேஷூம் நானும் உங்களுக்கு இந்த ரெண்டு தீவுகளயும் சுத்திக்காட்டலாம்னுதான் இருந்தோம். இன்னா பண்றது.. டைம் கம்மியா க்கீதே நம்க்கு வேற அத்த பத்தி தெரிஞ்சிக்கணும். அத்தனாலதா நா சுரேஷ தூத்துக்குடிக்கி போவச்சொல்லிட்டேன். தூத்துக்குடியான்ட ஒரு தீவுருக்குதாம்பா.. அத்தபத்தி தெரிஞ்சிக்கலாம்னு அவ்ர போச்சொல்லிட்டேன். நாம இப்ப ராமேஸ்வரத்தான்ட இருக்குற குருசட ஐலண்ட்ட பாக்கபோவோம்.

 குருசடை தீவு

குருசடை தீவு

இந்தாண்ட ஒரு சாரு வந்தாருபா.. அவரு நம்ம கையில சில சமாஜ்சாரங்கல சொன்னாப்பல.. அது என்ன தெர்மா?

குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவிற்கு வருபவர்களில பெரும்பாலோர் கடலுயிர் பற்றிய சிறப்பு வல்லுநர்களாகவோ அல்லது நீர் சம்மந்தமான உயிர்களை ஆராய்ச்சி செய்பவர்களாகவோ இருந்து கடலுயிர் வாழ்க்கை முறையை தீவிரமாக கவனித்து, கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவர்களாகவே இருப்பார்கள். எனினும், இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.

எப்படி செல்வது

ஹக்காம்பா.. அத்த மறண்டேன் பாத்தியா.. ஸோக்கா கேட்டியே.. சரி இந்தாண்ட யார்னா வந்தா.. அவராண்ட கேட்டுனு போலாம்.. தோப்பார்ர்ரா.. இங்கக்கீதே வழி..

மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவுகள், மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. ஆனாலும் பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரத்தின் முகப்பு தங்கச்சிமடம் பகுதியிலிருந்து பார்க்கும்போது இது இன்னும் அருகில் இருக்கிறது. அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் இந்த தீவுக்கு செல்லமுடியாது என்றாலும், இது மிகவும் அழகான தீவு. இங்கு நிறைய விசயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

தீவில் என்னென்ன இருக்கிறது

தீவில் என்னென்ன இருக்கிறது

அப்பால.. தீவுல இன்னாலாம்கீது..

மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் உங்களால் காண முடியும். இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது. இந்த தீவின் மற்றுமொரு கடல் சூழலிற்கான சொத்து இங்கு காணப்படும் கடற்பஞ்சுகளாகும். இந்த கடற்பஞ்சு உயிரினத்திற்கு அருகில் வேறு ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபாவைப் போன்று இது உருமாறி விடும்.

இந்த தீவில் 500 வகையான மீன்கள், 117 வகை பவளப் பாறைகள், 90வகை நண்டுகள், 200 வகை பூஞ்சைகள், 100 வகை முட்தோலிகள், 5 வகை ஆமைகள், 500 வகை மெல்லுடலிகள், 14 வகை கடல் பாலூட்டிகள், 12 வகை கடற்புற்கள், 13 வகை சதுப்புநிலங்கள் என மிகவும் பல்லுயிர்தன்மையுடன் காணப்படுகிறது.

நினைவூட்டல் : கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமான இந்த தீவுக்கு செல்லும் முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

ஹக்கம்பா,... இத்த மறந்திராதீங்கோ.. சரி நம்ம சுரேஷூக்கு ஒரு போன்ன போட்டு என்னலாம் பாத்தனு விசாரிச்சினு வந்துடலாம்.. அதுக்குள்ள இந்தாண்ட பக்கத்துல இன்னாலாம் பாக்கணும்னு பாத்துனு வந்துருங்கோ..

Anders Poulse

அருகில் காணவேண்டிய இடங்கள்

அருகில் காணவேண்டிய இடங்கள்

ராமேஸ்வரத்தில் நிறைய கோயில்களும், புனித தலங்களும் காணப்படுகின்றன. காந்தமதனா மலை, மலைக்கோயில், ஆஞ்சநேயர் கோயில், அரியமான் கடற்கரை, அக்னி தீர்த்தம், நீர் பறவை சரணாலயம், பாம்பன் பாலம், பஞ்சமுக அனுமன் கோயில், உத்திரகோசமங்கை என அருகில் காணத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.

நீர்ப் பறவை சரணாலயம்

இராமநாதபுரத்தில் உள்ள நீர்ப் பறவை சரணாலயம் எல்லா பறவை பிரியர்களையும் கவரும் சரணாலயமாகும். இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வழக்கமாக அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெருவாரியான பறவைகள் வந்து குவியும். இந்த சரணாலயத்தில் உள்ளூர் மற்றும் இடம் பெயரும் வகை பறவைகள் பலவற்றையும் காண முடியும். இங்கு காணப்படும் உள்ளூர் பறவைகள் வருடம் முழுவதுமே உணவிற்காக இந்த சரணாலயத்திற்கு வருகை தரும்.

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயரும் பறவைகள் பெருமளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. வழக்கமாக இந்த பறவைகள் வடகிழக்கு பருவக்காற்று காலத்திலேயே இங்கு வருகை தருகின்றன. எனவே இந்த சரணாலயத்தில் அரியவகை மற்றும் தனித்தன்மையான பறவைகளை நீங்கள் காண முடியும். உலகம் முழுவதும் உள்ள பறவை பிரியர்கள் குறிப்பிட்ட காலங்களில் இங்கு வந்து தங்கி இங்கிருக்கும் பறவைகளின் குணாதிசயங்களை கவனித்து செல்கின்றனர்.

பறவைகள் தங்களுக்கு பிடித்தமான இடங்களை குறிப்பிட்டு வைத்திருக்கும், அந்த இடங்களை இங்குள்ள அதிகாரிகளும் சுற்றுலா வசதிக்காக குறிப்பிட்டு வைத்திருப்பார்கள். இந்த இடங்களில் தான் பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும்.

.

உத்திரகோசமங்கை

இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் சிவ பெருமானுக்கான கோவிலான உத்திரகோசமங்கை ஒவ்வொரு வருடமும் சைவப்பிரிவினை சேர்ந்தவர்களை பெருமளவில் வரவழைக்கும் சுற்றுலா தலமாகும். மாணிக்கவாசகரின் வரிகளில் இந்த புகழ் பெற்ற கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த கோவிலை பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து எளிதில் அடைய முடியும்.

சேது மாதவ தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் மற்றும் இராமநாதபுரம் போலவே இந்த புனிதத்தலமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த கோவில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களால் மிகவும் போற்றப்படும் இடமாக விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தில் மிகவும் பழமையான மரகத நடராஜர் சிலையொன்றும் உள்ளது. இந்த நடராஜர் சிலையின் சிறப்பு அது முழுமையும் மரகதத்தால் செய்யப்பட்டிருப்பது தான்.

ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் ஆருத்ரா திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலான சிவ பக்தர்கள் இங்கு வந்திருந்து, கடவுளின் அருள் பெற்று வருகிறார்கள். மேலும், சுற்றுலாப் பயணிகளும் கூட இந்த காலகட்டங்களில் நடக்கும் விழாக்கோலத்தை அனுபவிக்க இங்கு வருவார்கள்.

இன்னும் நெறிய எடம்கீது.. ஒவ்வொரு தபா வரும்போதும் புத்சாக்கீதுபா ராமேஸ்வரம். நெறிய பேரு இங்கவரச்சொல்ல குப்பையெல்லாம் இட்டுனு போய்டுதுங்கோப்பா.. அத்தல்லாம் எவ்ளோ தப்பு.. நாலபின்ன வந்துபோயி இருக்கணும்ல கண்ணு.. குப்பைகள போடவோணாம்.. சுற்றுசூழல கெடுக்கவோணாம்.. இன்னா சரியாப்பா..

Ssriram mt

தூத்துக்குடி தீவு

தூத்துக்குடி தீவு

ஏலே மக்கா.. போதும்லே.. நா பாத்துக்கிடுதேன்.. வணக்கம் நண்பர்களே நான் சுரேஷ். உங்களுக்கு இந்த தீவ சுத்திக்காமிக்க போறேன். இங்கன ஏகப்பட்ட தீவுக இருக்குதுல்லா.. ஆனா பூரா எடத்துக்கும் போகலாம் முடியாது. இப்ப நாம போகப்போற தீவு பேரு ஹரே தீவு..

எங்கே இருக்கு

ஹரே தீவு தூத்துக்குடி நகரத்தின் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் இருக்கிறது, அது துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த தீவில் இரண்டு கலங்கரை விளக்கமும் கடல் கரையில் கணக்கற்ற கடல் ஓடுகளும் உள்ளன. இந்த தீவில் மயில்களும் காணப்படுகின்றன. உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த தீவு ஒரு பொழுது போக்கு தலமாக விளங்குகிறது. பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த தீவிற்கு படை எடுக்கின்றனர். இந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நகரில் இருந்து இந்த தீவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அன்னாச்சி, அக்கா, தம்பி எல்லாருக்கும் வணக்கம்.. நம்ம ஊரு என்ன வேணா கூச்சப்படாம கேளுங்க.. நம்ம ஊருலதான உப்பும் பேமஸு, பனைல இருந்து வர்ற கருப்பட்டி, பயனி, கள்ளு எல்லாம் பேமஸு.

பொங்கல் வந்துட்டா போதும்லா.. எல்லா பயலுவலும் இங்கதா கெடப்பானுவ.. ஊரே சும்மா அதிரும். கொண்டாட்டம்னா நம்ம ஊருதான.. தூத்துக்குடியில இருந்து ரொம்ப பக்கம்னு தெரியும்..

இங்கனக்குள்ளயே பாண்டியன் தீவு, முயல் தீவுனு நெறய கெடக்குலா.. அட ஹரே தீவத்தான் முயல்தீவுனு சொல்லுதேன்.. அட எங்கூர்லலாம் அப்டித்தான அண்ணாச்சி கூப்டுவோம்.

இந்த தீவு 1.29சகிமீ பரப்பளவு கொண்டிருக்கு.. இது ஒன்னும் அவ்ளோ பெரிய தீவு கெடயாது பாத்துக்கிடுங்க.. ஆனாலும் சும்மா செமய்யா என்ஜாய் பண்லாம்.. வாரியலா.. பக்கத்துல ஒரு எட்டு என்ன லாம் எடம் கெடக்குதுனு பாத்துடுவோம். இதையும் சொல்லிப்புடுதேன்.. இங்க இருந்து ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, திருநெல்வேலி எல்லாம் பக்கம்தான்..

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

நவ திருப்பதி கோயில்கள்

நவ திருப்பதி கோயில்கள் என்பவை 9 கோயில்கள். இவை விஷ்னு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும். இக்கோயில்கள் தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன. இந்த கோயில்கள் 108 திவ்ய தேசங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த 9 கோவில்களுக்கான பயணம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து ஆழ்வார்திரு நகரில் நிறைவு பெறுகிறது. இந்த ஒன்பது கோயில்களின் பெயர்களாவன. ஸ்ரீ வைகுண்டம், திருவரகுணமங்கை, திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, துளைவில்லி மங்களம், திருகுழந்தை, தென் திருப்பதி, திருக்கோலூர்-வித்தம்மானிதி மற்றும் ஆழ்வார் திரு நகரி - நம்மாழ்வார். சமீபத்தில் டிவிஎஸ் குழுமம் இக்கோயில்களின் மராமத்தி பணிகளுக்கு நிதி உதவி செய்ததின மூலம் இக்கோயில்கள் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.

பனி மாதா தேவாலயம்

பனி மாதா தேவாலயம் 'பெஸிலிக்கா ஆப் லேடி ஆப் ஸ்னோ' என்று அறியப்படுகிறது. இந்த இடம் 1542 இல் தூய பிரான்சிஸ் வருகை மூலம் புனிதம் பெற்றது என்று கூறப்படுகிறது. பின்னர் 1711ம் ஆண்டு போர்த்துகீசியர் மூலம் இதன் குன்றின் மீது ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இது 1713 இல் திறக்கப்பட்டது. இந்த தேவாலயமானது மேரி மாதாவிற்கு அர்ப்பணித்து கட்டப்பட்டது. 1555 ல் "சாண்டலினா" என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி கொண்டுவரப்பட்ட மாதாவின் சிலை இந்த தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது. 1982ம் ஆண்டு இந்த சிற்றாலயமானது தேவாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆகஸ்டு மாத்ம் 5 ம் தேதி கொண்டாடப்படும் ஆண்டு திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் ஆண்டு தோறும் அலை மோதுகிறது.

கொற்கை

கொற்கை திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி இடையே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் கொற்கை குளமானது அமைந்துள்ளது. பாண்டிய பரம்பரையின் ஆட்சியின் போது கொற்கை கிராமமானது மிகவும் பிரபலமான துறைமுகமாக இருந்தது. கொற்கையில் பழங்கால கோயிலான வெற்றிவேளம்மன் கோயிலும் அமைந்துள்ளது. 1838ம் ஆண்டு படையெடுப்பின் போது கி.மு மூன்றாம் நூற்றாண்டு மற்றும் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கலை வடிவங்கள் இக்கிராமத்தில் இருந்து கொள்ளை போயின. கொற்கையை பற்றின குறிப்பை பழங்கால மேற்கத்திய மற்றும் சங்க கால நூல்களில் காண முடிகிறது. பிரபல கிரேக்க புவியியல் வல்லுநர் தாலமியால் இந்த இடமானது கோல்கை என்று குறிப்படப்படுகிறது. அதாவது முத்து குளித்தலின் மையமாக கருதப்பட்டது.

இன்னும் ரொம்ப எடம் கெடக்குவு.. அடுத்தவாட்டி வரும்போ நெறய சுத்தலாம்.. சரியா மக்கா.. மறக்காம இதுபோல பதிவுகள பெறனும்னா மேல இருக்குற பெல் பட்டண அமுக்கு நோட்டிபிகேசன ஆன் பண்ணிகிடுங்க.. அவ்ளோதான் சொல்லுதேன்..

thoothukudi.tn.nic.in

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X