Search
  • Follow NativePlanet
Share
» »ஜல்பய்குரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஜல்பய்குரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஜல்பய்குரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஜல்பய் என்பது ஹிந்தி மொழியில் ஆலிவ் மரத்தை குறிக்கிறது. 1900ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஜல்பய்குரி பகுதியில் ஏராளமான ஆலிவ் மரங்கள் நிறைந்திருந்தன. ஜல்பய்குரி மாவட்டம் வடக்கில் பூடான் நாடு மற்றும் கிழக்கில் பங்களாதேஷ் நாடு போன்றவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. டார்ஜிலிங் மலைப்பகுதி இந்த ஜல்பய்குரிக்கு அருகில் உள்ளதால் ஜல்பய்குரியிலிருந்து ஒரு நாள் பயணமாக அங்கும் சென்று வரலாம். சிலிகுரி மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதி நகரங்களுக்கு விஜயம் செய்யும் பயணிகளை இந்த ஜல்பய்குரி நகரமும் வெகுவாக ஈர்க்கிறது.

ஜல்பய்குரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Raikut

சுற்றுலா அம்சங்கள்

ஜுபிளி பார்க், டவுன் கிளப் ஸ்டேடியம் மற்றும் புகழ்பெற்ற டீஸ்டா ஆறு போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். குழந்தைகளுக்கான பிரத்யேக பொழுதுபோக்கு அம்சமாக கரலா ஆற்றினை ஒட்டி டீஸ்டா பார்க் எனும் பூங்கா அமைந்துள்ளது.

இந்நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ஜல்பேஷ் கோயில் எனும் ஆலயம் ஒன்றும் உள்ளது. இது தவிர ஒரு சிவன் கோயிலும் இந்த பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து 80 கி.மீ தூரத்திலுள்ள ஒரு தேசியப்பூங்கா ஒன்றுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

கலாச்சாரம்

இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நாகரிகமான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். தேயிலைத்தோட்டங்கள் மற்றும் காட்டு கிராமங்கள் போன்றவற்றில் தனிமையான இருப்பிடங்களில் வசிக்கும் இவர்கள் இயற்கைச்சூழலின் நடுவே தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.

பூர்வ குடி மக்கள், ஹிந்துக்கள் மற்றும் பங்களாதேஷ் மக்கள் ஆகியோர் இப்பகுதியில் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். பெரிய மாவட்டமான ஜல்பய்குரியில் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா அம்சங்கள் உள்ளதால் முன் கூட்டியே வாடகை வாகனத்தை அமர்த்திக்கொள்வது சிறந்தது.

இந்த ஒட்டுமொத்த சுற்றுலா மாவட்டத்தையும் சுற்றிப்பார்த்து ரசிக்க 4 நாட்கள் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more about: west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X