» »கைலாசநாதர் கோவில் - கட்டுமான கலையின் உச்சம்

கைலாசநாதர் கோவில் - கட்டுமான கலையின் உச்சம்

Written By: Staff

விலங்குகளால் முடியாத ஒன்று மனிதர்களுக்கு இயற்கையாய் இருப்பது - புதிதாய் ஒன்றை கண்டுபிடிக்கும் அல்லது உருவாக்கும் திறன். அதோடு நிற்காமல், ஏற்கனவே உருவாக்கிய படைப்பை இன்னும் செம்மைப்படுத்தி மெருகேற்றுவது. இவ்வாறாகவே, மனிதர்கள் காலம் காலமாக முன்னேறியிருக்கின்றனர். சுற்றுலா தளத்தில், ஏன், விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று குழம்ப வேண்டாம். மனிதனின் திறன் எப்படி அவனை காலத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன என்பதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவே இதைச் சொன்னோம்.

Entrance_Door

Photo Courtesy : Satz007

ஒரு காலத்தில், பாறைகளை குடைந்தும், மரக்கட்டைகளாலும் கோவில்களை கட்டிய‌போது , ஒரு மனிதன், புதிய வடிவமைப்பில், கற்களைக் கொண்டு உருவாக்கிய கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில். இன்றும், காஞ்சியில், கைலாச‌நாதர் கோவிலுக்கு நிகரான ஒன்று அது மட்டுமே.

பல்லவ வம்சத்தில் வந்த ராஜசிம்மாவின் கனவு படைப்பான இந்தக் கோவில் சிற்பக்கலையின் போக்கையே மாற்றியது. இந்தப் பெரும் கோவிலின் ஒவ்வொரு மூலையும் ராஜசிம்மாவிற்கு, கட்டிட கலையின் மேல் எந்தளவிற்கு காதல் இருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. கோவில் கட்டுமானத்தில் மணற்கற்களை உபயோகப்படுத்தும் வழக்கம் பிரபலமடைந்தது கைலாசநாதர் கோவில் வந்த‌ பின்னர்தான்.

58 Cellular Temples Forms the Outer Wall

Photo Courtesy : Sivakumar1248

புராணக் குறிப்புகள், கைலாசமலை சிவனின் மாளிகையை சித்தரித்தது போல, அந்த‌ வடிவில் இருக்க வேண்டுமென்ற யோசனையில் கட்டிய கோவில் இது. தென்னிந்தியாவில் தோன்றிய முதல் கட்டுமான கோவில் கைலாசநாதர் கோவில். கோபுரம், கோவில் வாசல், வெளிப்புறம், கோவில் மண்டபம், மூலஸ்தானம் என்று அனைத்தும் ஒருங்கே கொண்ட முழுமையான கோவிலும்கூட.

தனித்தன்மை :

மற்ற கோவில்களைப் போல இக்கோவிலின் வெளிப்புறம் வெறும் சுவரல்ல; சிறு சன்னதிகள் நிரம்பியிருக்கும் வெளிப்புறச் சுவர்! இதனால், கோவிலுக்கு நுழையும் முன்னரே, நீங்கள், உங்கள் கண்களை அகல திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெளிப்புற சன்னதியிலும், சோமஸ்கந்த புராணக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.

interiorsofkailasanathartemple

Photo Courtesy : Kannan Muthuraman

மூலஸ்தானம் :

எல்லா சிவாலயங்களைப் போலவே இங்கும், மூலஸ்தானத்தில், (கிரானைட் கல்லால் செய்யப்பட்ட) சிவலிங்கம் நந்திக்கு நேரெதிராய் வீற்றிருக்கிறது. ராஜசிம்மா, சிவனின் பெரும் பக்தனின் காரணத்தால், நாம் கோவிலின் பல கற்களில், சிவனின் சிற்பத்தை காணலாம்.

மேலும், பல நந்தி, சிங்கச் சிற்பங்களையும் நாம் காணலாம். புராணக் குறிப்புகள், நந்தியை பல்லவ சாம்ராஜ்யத்தின் சின்னமாக சித்தரிக்கிறது. இதனால், நந்திக்கு, இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதே போல, நாம் காணும் சிங்கத்தின் சிற்பச்செதுக்கல்களுக்கு காரணம் : அரசர் அல்லது அந்த சிற்பத்தை வடிவமைத்த கலைஞன் ஒரு குறிப்பிட்ட மிருகத்தின்மீது அளவு கடந்த நேசத்தின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

இதோடு, இன்னும் பிற தெய்வங்களான, விஷ்ணு, பிரம்மா, விநாயக, துர்கா ஆகியவற்றின் சிற்பங்கள் கோவிலின் உள்ளே இருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, ராஜசிம்மாவால் கோவிலின் முழு கட்டுமானத்தையும் பார்க்க முடியவில்லை. அவரது மகன், மகேந்திர வர்மன், அப்பாவின் பெரும் படைப்பை, தன் காலத்தில் முடித்து வைத்தான். அக்காலத்தில், கைலாசநாதர் கோவில், கட்டுமானத்தில் ஒரு மைல்கல். இப்படி ஒரு தலைசிறந்த கோவிலை பார்க்கும் ஆவல் யாருக்குத்தான் இருக்காது ?

lioncarvedpillars

Photo Courtesymckaysavage

கைலாசநாதர் கோவிலின் சிறப்பம்சங்கள்:

கோவிலுக்குள்ளே இருக்கும் சுற்றுப் பாதை வட்ட வடிவு கொண்டது. அதனூடே ஊர்ந்து சென்று, பல படிகள் ஏறித்தான் வெளியே வர முடியும். இந்த‌ப் பாதை, வாழ்வுக்கும், மரணத்திற்கும் ஒரு அடையாளமாக நம்பப்படுகிறது.

பிரசித்திபெற்ற தஞ்சை பிரகதீஸ்வர கோவில் இதன் பாதிப்பில் கட்டப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கைலாசநாதர் கோவில், காஞ்சியில், மிகப் பழமை வாய்ந்த கோவிலாக இருந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள மற்ற கோவில்களைப் போல இது அத்தனை பிரசித்திபெற்றது இல்லை.

கைலாசநாதர் கோவிலை அடைய :

காஞ்சிபுரம், சென்னையிலிந்து 68 கி.மீ. தொலைவு.

பல பேருந்துகள் சென்னைக்கும் காஞ்சிக்கும் இடையே இயக்கப்படுகின்றன.

காஞ்சி ரயில் நிலையம்தான், கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு ரயில் நிலையம்.

சென்னை விமான நிலையம், இக்கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு விமான நிலையம்.

காஞ்சிக்குச் செல்ல சிறந்த பருவ காலம்:

அக்டோபரிலிருந்து மார்ச் வரை.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்