Search
  • Follow NativePlanet
Share
» »நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோயில்கள்.. கோடி கோடியாக புதையல்கள்!

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோயில்கள்.. கோடி கோடியாக புதையல்கள்!

By Udhaya

கோட்டைகள் அரண்மனைகள் நம் முந்தைய தலைமுறை மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையை எடுத்துரைக்கும்படி இருக்கும். அவ்வளவு செல்வ செழிப்போடு, படை பலத்தோடு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையே இவை எடுத்துரைக்கும். அப்படி பட்ட கோட்டைகள் இந்தியாவில் எக்கச்சக்கம் இருக்கின்றன. கோட்டைகளில் புதையல்களும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் இருப்பதை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அதுமாதிரியே இதுவரை கண்டெடுக்கப்படாத புதையல்கள் நிறைந்த கோட்டை இமாச்சல பிரதேசத்தில் இருக்கிறது. இந்த கோட்டையில் புதையலைத் தேடிச் சென்ற போதுதான் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு இரண்டு கோயில்கள் தரைமட்டமாகியுள்ளன. மிச்சமிருக்கும் இடங்கள் சுற்றுலாத் தளமாகியுள்ளன. வாருங்கள் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம்.

நாகர் கோட்

நாகர் கோட்

நாகர் கோட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த காங்க்ரா கோட்டை காங்க்ரா ராஜவம்சத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 350 அடி உயரத்தில் 4 கி.மீ பரப்பளவில் இந்த கோட்டை வளாகம் அமைந்துள்ளது. காங்க்ரா நகரப்பகுதியிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள இந்த கோட்டை ஸ்தலமானது முன்னர் புராணா காங்க்ரா என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.

Aleksandr Zykov

புராணம்

புராணம்

இந்த கோட்டை ஸ்தலம் மஹாபாரத புராணத்திலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டருடைய பயணக்குறிப்புகளிலும் இடம் பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பங்கங்கா மற்றும் மஞ்சி ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை உறுதியான கோட்டைச்சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோட்டையின் உள்ளே நுழைவதற்கு இரண்டு வாயிற்கதவுகளுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள முற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

Aleksandr Zykov

 ரஞ்சித் சிங் கேட்

ரஞ்சித் சிங் கேட்

பழங்காலத்திய சீக்கிய குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள இந்த வாயில் அமைப்பு ‘பதக்' அல்லது ரஞ்சித் சிங் கேட் என்று அழைக்கப்படுகிறது. நுழைவாயில் பகுதியிலிருந்து ஒரு சரிவான பாதையை கடந்து அஹானி மற்றும் அமீரி தர்வாஸா எனும் வாசல்களின் வழியாக பார்வையாளர்கள் கோட்டையின் உச்சியை அடையலாம். காங்க்ரா பகுதியின் முதல் கவர்னரான நவாப் அலிஃப் கான் இந்த கோட்டை வாசல்களை கட்டியுள்ளார். பன்முக காவல் கோபுரம், லட்சுமி நாராயணன் கோயில் மற்றும் ஆதிநாத் கோயில் போன்றவையும் இந்த கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளன.

Mario Micklisch

 புதையல்கள்

புதையல்கள்

இந்த கோட்டையில் பல கோடி மதிப்பிலான புதையல்கள் இருப்பதாகவும், அவற்றை எடுக்க முடியாது அப்படி மீறி போனால் மரணம் நிச்சயம் என்று உள்ளூரில் நம்பிக்கை உள்ளது. உள்ளூர் மக்கள் பலர் இந்த கோட்டைக்கு செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை அதிகம் விரும்புகின்றனர். மேலும் இந்த கோட்டைக்கு அருகே நிறைய சுற்றுலா அம்சங்களும் அமைந்துள்ளன.

உள்ளூர் மக்களின் நம்பிக்கை படி, இங்கு இடிந்து போன ரெண்டு கோயில்களுக்கு அருகில்தான் புதையல் இருப்பதாகவும், அந்த கோயிலுக்கு அருகில் சென்றாலே மரணம் நிச்சயம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதையெல்லாம் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் நம்புவதில்லை.

Aleksandr Zykov

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

தௌலாதார் மலைத்தொடர்

காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த தௌலாதார் மலைத்தொடர் ஆகும். இமயமலையின் தெற்குப்பகுதி விளிம்பில் எழும்பியுள்ள இம்மலைகள் காங்க்ரா மற்றும் மண்டி போன்ற இடங்களுக்கு வடக்கில் காணப்படுகின்றன.

பிரமிப்பூட்டும் அழகுடன் வீற்றிருக்கும் இந்த மலைத்தொடர்களில் சுற்றுலாப்பயணிகள் சாகச மலையேற்ற பயணங்களிலும் ஈடுபடலாம். ஹனுமான் கா திபா அல்லது வெள்ளை மலை என்றழைக்கப்படும் மலைச்சிகரம் இந்த மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமாக அறியப்படுகிறது.

Ashish Gupta

 தௌலாதார்

தௌலாதார்

வெளிப்புற இமயமலை அல்லது சின்ன இமயமலை என்று அழைக்கப்படும் இந்த தௌலாதார் மலைத்தொடர்கள் இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் டல்ஹௌசி பிரதேசத்தில் ஆரம்பித்து ஹிமாசலப்பிரதேசத்தில் பியாஸ் ஆற்றின் கரையிலுள்ள குல்லு மாவட்டம் வரை நீள்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து 3500 மீ முதல் 6000மீ வரையான உயரத்தில் இந்த தௌலாதார் மலைத்தொடர்கள் வானத்தை தொடுவதுபோன்று பிரம்மாண்டமாக வெள்ளை நிறத்தில் உயர்ந்து நிற்கின்றன.

Ashish Gupta

வெண்பளிங்குப்பாறை

வெண்பளிங்குப்பாறை

இவை பெரும்பாலும் வெண்பளிங்குப்பாறைகளால் ஆனவையாக உருவாகியுள்ளன. சிலேட் பாறைகள் மற்றும் சுண்ணாம்புப்பாறைகளும் இம்மலைகளில் காணப்படுகின்றன.

சிலேட்டுப்பாறைகளை சிறு வீடுகளின் கூரையாக இம்மலைப்பகுதி மக்கள் பயன்படுத்துவது ஒரு சுவாரசியமான அம்சமாகும். காங்க்ரா வேலி எனப்படும் பள்ளத்தாக்குப்பகுதியிலிருந்து தௌலாதார் மலையின் அழகை சுற்றுலாப்பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

Ashish Gupta

மஸ்ரூர் கோயில்

மஸ்ரூர் கோயில்

காங்க்ராவின் தென்பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த மஸ்ரூர் கோயில் மிக முக்கியமான தனித்தன்மையான சுற்றுலா அம்சமாகும். மஸ்ரூர் கோயில் வளாகம் என்றழைக்கப்படும் இந்த கோயில் ஸ்தலத்தில் 15 பாறைக்குடைவு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தியாவிலுள்ள கோயில்களிலேயே மிக வித்தியாசமான வடிவமைப்பை பெற்றுள்ள பெருமையை இந்த கோயில் வளாகம் கொண்டுள்ளது. அதிகம் பிரசித்தம் பெறாமல் வீற்றிருக்கும் இந்த அற்புத கலைச்சின்னங்கள் இந்திய மண்ணில் இடம் பெற்றுள்ள மற்றொரு முக்கியமான கலைப்படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது.

ஒரு ஒற்றை மலைக்குன்றை குறுக்கும் நெடுக்குமாக வெட்டி, குடைந்து, செதுக்கி நுணுக்கமான முறையில் சிற்பக்கலை அம்சங்களுடன் இந்த பாறைக்கோயில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கல்லை வெட்டி எடுத்து, இடம் பெயர்த்து கோயிலை உருவாக்குவதற்கு பதிலாக கல்லிருக்கும் மலையையே கோயில்களாக உருமாற்றியிருக்கும் இந்த மஹோன்னத மானுட முயற்சியை என்னவென்று சொல்வது. அற்புதமான இந்த வரலாற்று ஸ்தலத்தை நீங்கள் வந்து பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

மற்ற தெய்வங்கள்

மற்ற தெய்வங்கள்

இந்த வளாகத்திலுள்ள 15 கோயில்களில் பிரதான கோயிலில் சிவபெருமான் மற்றும் ராமர், லட்சுமணர் சிலைகள் காணப்படுகின்றன. சிவன் சிலையானது மையத்தில் பிரதானமாக வீற்றுள்ளது. சதுரவடிவ கர்ப்பகிருகம், அந்தரலா எனப்படும் கர்ப்பகிருஹ நடை, நான்கு பெரிய தூண்களைக்கொண்ட செவ்வக வடிவ மண்டபம் மற்றும் துணை சன்னதிகளை கொண்ட நான்கு முக மண்டபங்கள் போன்றவை இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர ஏராளமான சிற்பங்களும் சன்னதி அமைப்புகளும் இந்த கோயில் வளாகத்தில் பரவலாக காணப்படுகின்றன.

அமைப்பு

இந்தோ-ஆரிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் தொகுப்பு வளாகம் 10 நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அஜந்தா எல்லோரா கோயில்களை இது ஒத்திருப்பதாகவும் நிபுணர்களிடையே கருத்துகள் நிலவுகின்றன. சிவபெருமானுக்காக படைக்கப்பட்டுள்ள இந்த கோயில் வளாகத்தில் காணப்படும் கட்டிடக்கலை அம்சங்கள் 8 ம் நூற்றாண்டு அல்லது 9ம் நூற்றாண்டுக்குரியவை என்று வரலாற்றாசிரியர்களால் ஊகிக்கப்படுகிறது.

Akashdeep83

 சுஜன்பூர் கோட்டை

சுஜன்பூர் கோட்டை

காங்க்ரா ராஜ்ஜியத்தின அரசரானா அபய சந்த் என்பவரால் இந்த சுஜன்பூர் கோட்டை 1758ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த அழகிய மாளிகையானது ஹமிர்பூர் நகரத்தில் உள்ள சுஜன்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பல அழகிய ஓவியங்களுக்கும் இந்த கோட்டை புகழ் பெற்றுள்ளது. பஹாரி ஓவிய பாணி மற்றும் கலையம்சங்களின் ரசிகராக திகழ்ந்த காங்க்ரா மன்னரான சன்சார் சந்த் என்பவர் 19ம் நூற்றாண்டில் முற்பகுதியில் இங்கு வாழ்ந்துள்ளார். காங்க்ரா ராஜ்ஜியத்தை ஆங்கிலேயரிடம் இழந்த பின்னர் அவரும் ராஜ குடும்பமும் இந்த கோட்டையில் ஒதுங்கி வாழ்ந்துள்ளனர்.

Naveen001231

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X