» »பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த பிரம்மபுரி எங்குள்ளது தெரியுமா?

பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த பிரம்மபுரி எங்குள்ளது தெரியுமா?

Posted By: Udhaya

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் ஒரு சிவ தலமாகும். இது அப்பரால் பாடல் பெற்ற இடம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியான இது காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது.

சீதா தேவியின் மீது கடும்கோபம் கொண்டு ஆஞ்சநேயர் கும்பிட்ட தலம் எது தெரியுமா?

இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ள 36வது தலம். இது மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும்.

பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த பிரம்மபுரி எங்குள்ளது தெரியுமா?

 

PC: Wikipedia

வெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்

மேலும் இது கஞ்சமாற நாயனார் அவதரித்த தலம் என்று போற்றப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை .பலாசவனம் என்றும்,அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது.

சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்கள்

இந்த கோயிலில் இருக்கும் நடராச சபையில் நடராசர் மற்றும் சிவகாமி ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில் ,இது சுக்கிரனுடைய தலமாகும்.

அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள் தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார்.

பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த பிரம்மபுரி எங்குள்ளது தெரியுமா?

PC: Wikipedia

சாபம் பெற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார்.தேவர்களும் அவ்வாறே வழிபட்டு சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர். மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் நீங்க வழிபட்டார்.

பெங்களுருவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நந்தியை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால் 'பாண்டு ரோகம்' நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்ந்தார். இதனால் இத்தல இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.

கூரையே இல்லாமல் வெட்டவெளியில் அதிசய அம்மன் கோயில்... எங்கே இருக்குனு தெரியுமா?

அக்னிதேவனின் நோயால் ஆரம்பித்த யாகம் தடைபட்டதால், படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்மதேவரும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவர் அருளால் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு 'பிரம்ம தீர்த்தம்' என்ற பெயர் ஏற்பட்டது. மாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின் 'மாத்ருஹத்தி' தோஷத்தை போக்கிய தலம்

எப்படி செல்லலாம்?

பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த பிரம்மபுரி எங்குள்ளது தெரியுமா?

கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்