» »பணமில்லாமல் பிச்சை எடுத்த வெள்ளைக்காரர் எந்த கோயிலில் தெரியுமா?

பணமில்லாமல் பிச்சை எடுத்த வெள்ளைக்காரர் எந்த கோயிலில் தெரியுமா?

Written By: Udhaya

வறுமையில் வாடுபவர்களில் சிலர் பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறோம். அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பார்கள். நாமும் பரிதாபப்பட்டு சிலருக்கு பிச்சை இடுவோம். அல்லது எதுவும் குடுக்காமலும் செல்கிறோம்.

வழக்கமாக நம்ம ஊர் காரங்க பிச்சை எடுப்பதை பார்த்து பழகிய நம் மக்களுக்கு, வெள்ளைக்காரர் ஒருவர் கோயில் வாசலில் பிச்சை எடுப்பதை பார்த்ததும் பரிதாபமாக இருந்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் கைவிட்டுவிடுமா என்ன?

ரஷ்யாவை சேர்ந்தவர் இவாஞ்சலின். இவர் தமிழகத்தைச் சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது மாமல்லபுரத்தைச் சுற்றி பார்த்த அவர் அங்கிருந்து குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு சென்றார்.

 மாமல்லபுரம்

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் ஏராளமான கண்ணைக் கவரும் சுற்றுலாத் தளங்கள் இருப்பதை அறிந்த அவர் அங்கு பல இடங்களில் பொழுதுபோக்கியுள்ளார். அர்ஜூனன் ஓவியம், முதலைப் பூங்கா, கடற்கரை கோயில், புலிக்குகை, பஞ்சபாண்டவ ரதம் என சுற்றிப்பார்த்துவிட்டு குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

Yoga Balaji

மாமல்லபுரத்தில் இருக்கும் சிறந்த சுற்றுலாத்தளங்கள்

 குமரக் கோட்டம் கோயில்

குமரக் கோட்டம் கோயில்

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில் குமரகோட்டம் கோயில் என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான்.

Rajendran Ganesan

கச்சியப்பர் நூலகம்

கச்சியப்பர் நூலகம்

கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது. அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள் உள்ளன

பழமை

பழமை

இந்த கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு வள்ளி தெய்வானையுடன் காட்சிதருகிறார் சுப்பிரமணியர்.

wiki commons

திருமணம்

திருமணம்

முருகருக்கு இந்த கோயிலில் இரண்டு திருமணங்கள் நடக்கின்றன. வைகாசி மாதத்தில் வள்ளியுடனும், ஐப்பசி மாதத்தில் தெய்வயானையுடனும் திருமணம் நடக்கிறது. இந்த திருமணங்கள் மிகவும் விசேசமானதாகும்.

வருடந்தோறும் எண்ணெய் அபிசேகம்

வருடந்தோறும் எண்ணெய் அபிசேகம்

தீபாவளி நீங்கலாக ஆண்டு முழுவதும் ஒருநாள் விடாமல் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்விக்கப்படுகிறது. இதுவும் இந்த கோயிலின் தனித்தன்மைக்கு உதாரணமாக திகழ்கிறது.

wiki

வள்ளலார்

வள்ளலார்


சமூக சீர்திருத்தவாதிகளுள் முக்கியமான ஒருவரான வள்ளலாருக்கு இங்கு தனிச் சன்னதி வைக்கப்பட்டுள்ளது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மகாபலிபுரத்திலிருந்து 69 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த குமரக்கோட்டம். காஞ்சிபுரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ளது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


இதன் அருகில் திருவளுக்கை கோயில் அமைந்துள்ளது. 6 கிமீ தொலைவில் வரதராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே நாதப்பேட்டை ஏரி ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து அரைமணி நேரத் தொலைவில் ஊத்துக்காடு ஏரி அமைந்துள்ளது.