Search
  • Follow NativePlanet
Share
» »கண்ணூர் - தெய்யம் ஆட்டத்தைக் கொஞ்சம் ரசிப்போம்!!!

கண்ணூர் - தெய்யம் ஆட்டத்தைக் கொஞ்சம் ரசிப்போம்!!!

By

மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும், அரபிக்கடலுக்கும் இடையில் பொதிந்துள்ள கண்ணூர் பிரதேசமானது நிரம்பி வழியும் இயற்கை எழிலையும், தனித்தன்மையான பாரம்பரிய கலாச்சார இயல்பையும் கொண்டு விளங்குகிறது.

கேரளாவின் வடக்குப் பகுதியிலுள்ள கண்ணூர், ‘தறிகளையும் கதைகளையும் கொண்ட நாடு' எனும் பிரசித்தமான மலையாள வாக்கியத்தின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது.

மேலும் தெய்யம் அல்லது தெய்யாட்டம் எனும் புகழ்பெற்ற நாட்டுப்புற கூத்து வடிவம் இப்பகுதியின் முக்கிய நிகழ்த்துக் கலை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

கண்ணூர் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

தர்மதம் ஐலேண்ட், முழுப்பிளாங்காட் பீச், ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்செலோ, கொட்டியூர் சிவன் கோயில், பரசினிக்கடவு ஸ்னேக் பார்க், பேரளசேரி ஆகியவை கண்ணூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

கண்ணூரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Stefanie Härtwig

முழுப்பிளாங்காட் பீச், கண்ணூர்

முழுப்பிளாங்காட் பீச், கண்ணூர்

இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது. மேலும் தர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டி 200 மீட்டர் தூரத்தில் இருப்பதால் பயணிகள் அங்கு சென்று அமைதியாக ஓய்வெடுக்கலாம்.

படம் : Riju K

பைக் சவாரி

பைக் சவாரி

முழுப்பிளாங்காட் பீச்சில் பைக் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Neon

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

முழுப்பிளாங்காட் பீச் சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காக மிகவும் புகழ்பெற்றது. எனவே நீங்கள் முழுப்பிளாங்காட் பீச் செல்லும்போது சூரிய அஸ்த்தமனத்தை ரசிக்க தவறவிடாதீர்கள்.

பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க்

பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க்

கேரளாவின் மிகப்பெரிய பாம்புப் பூங்காவாக கருதப்படும் பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க் கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள பரிஷினக்கடவு எனும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு ராஜநாகம், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், மலைப்பாம்பு, குழி விரியன் போன்ற பாம்பு வகைகளை காணலாம். இவற்றோடு விலங்குகள், பறவைகள், ஊர்வன வகைகளும் இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன. 150 வகையான ஊர்வன ஜந்துக்கள் இங்குள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பாம்புகள் குறித்து மக்களுக்கு இருக்கும் பயத்தையும், மூடநம்பிக்கையையும் போக்குவதற்காக இங்கு சில காட்சி விளக்கங்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்படுகின்றன.

படம் : Michael Allen Smith

கொட்டியூர் சிவன் கோயில்

கொட்டியூர் சிவன் கோயில்

வட கேரளத்தின் முக்கிய ஆன்மீகத்தலங்களாக விளங்கும் அக்கரே கொட்டியூர் கோயில் மற்றும் இக்கர கொட்டியூர் கோயில் இரண்டும் கொட்டியூர் சிவன் கோயில் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்கள் கண்ணூரிலிருந்து 70 கி.மீ தொலைவில் கொட்டியூர் எனும் சிறுகிராமத்தில் அமைந்துள்ளன.

படம் : Satheesan.vn

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

மே மற்றும் ஜூன் மாதத்தில் வைசாகத் திருநாள் கொட்டியூர் சிவன் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 28 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் இந்தத் திருவிழாவின் சடங்குகளிலும் பூஜைகளிலும் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

படம் : Sivavkm

சடங்குகள்

சடங்குகள்

கொட்டியூர் சிவன் கோயிலில் வைசாகத் திருநாள் விழா கொண்டாடப்படும் போது இளநீர் வெப்பு மற்றும் இளநீராட்டு சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. அப்போது கோயிலை நோக்கி இளநீரை சுமந்து செல்லும் பக்தர்கள்.

படம் : Satheesan.vn

பய்யம்பலம் பீச்

பய்யம்பலம் பீச்

முழுப்பிளாங்காட் பீச் போலவே சூரிய அஸ்த்தமனத்தை ரசிக்க பய்யம்பலம் பீச்சும் மிகவும் ஏற்ற இடம். இந்தக் கடற்கரை கண்ணூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

படம் : Ajeeshcphilip

படனத்தோடு

படனத்தோடு

படனத்தோடு எனும் அழகிய சிற்றோடை பய்யம்பலம் பீச் பகுதியில் கடலுடன் கலக்கின்ற காட்சி.

படம் : Nisheedh

பேரளசேரி படிக்கிணறு, கண்ணூர்

பேரளசேரி படிக்கிணறு, கண்ணூர்

கண்ணூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் கண்ணூர்-கூத்துபரம்பா நெடுஞ்சாலையில் உள்ள பேரளசேரி எனும் சிறு நகரில் இந்தப் படிக்கிணறு அமைந்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் கிணற்றின் தோற்றம் ராஜஸ்தானிய படிக்கிணறுகளை ஒத்திருக்கிறது.

தர்மதம் ஐலேண்ட்

தர்மதம் ஐலேண்ட்

கண்ணூர் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் தர்மதம் ஐலேண்ட் அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திட்டு தென்னை மரங்கள் மற்றும் பசுமையான தாவரச்செழிப்புடன் காட்சியளிக்கிறது.

படம் : ShajiA

பைதல் மலா

பைதல் மலா

பைதல் மலா அல்லது வைதல் மலா என்று அழைக்கப்படும் இந்த மலைவாசஸ்தலம் கண்ணூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் கேரள-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது.

படம் : Rawbin

டிரெக்கிங்

டிரெக்கிங்

பைதல் மலாவில் டிரெக்கிங் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Rawbin

பழசி அணை

பழசி அணை

ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வரலாற்றில் இடம்பெற்றுள்ள கீர்த்தி பெற்ற ராஜாவான பழசிராஜாவின் பெயர் இந்த அணைக்கு வைக்கபட்டுள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் இந்த அணைத்தேக்கத்தில் படகுச்சவாரி சேவைகளை பயணிகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அணையை ஒட்டியே உள்ள ஒரு தோட்டப்பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்காக கொண்டுள்ளது.

படம் : Vinayaraj

ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்செலோ

ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்செலோ

கண்ணூர் கோட்டை என்று பிரபலமாக அறியப்படும் ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்சலோ கண்ணூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பார்வை நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, நுழைவுக்கட்டணம் : இலவச அனுமதி

படம் : Sayuj Nambiar O G

பீரங்கிகள்

பீரங்கிகள்

கண்ணூர் கோட்டையில் உள்ள பீரங்கிகள்.

படம் : Priya Sivaraman

குதிரைகள் அடைக்கும் இடம்

குதிரைகள் அடைக்கும் இடம்

கண்ணூர் கோட்டையில் அந்தக் காலத்தில் குதிரைகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடம்.

படம் : Satish Sankar

அழிக்கல் மீன்பிடி துறைமுகம்

அழிக்கல் மீன்பிடி துறைமுகம்

கண்ணூர் கோட்டைக்கு அருகிலுள்ள அழிக்கல் மீன்பிடி துறைமுகம்.

படம் : Jogesh S

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

கண்ணூர் ஹோட்டல் டீல்கள் : http://bit.ly/YgUewV

படம் : Sandeep Gangadharan

கண்ணூரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

கண்ணூரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Dhruvaraj S

Read more about: கண்ணூர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X