Search
  • Follow NativePlanet
Share
» »பிரபலங்கள் கொண்டாடும் கோவில்! இந்த கோவிலுக்கு போனவங்கள்லாம் இன்னிக்கு ஓஹோனு வாழ்றாங்க!

பிரபலங்கள் கொண்டாடும் கோவில்! இந்த கோவிலுக்கு போனவங்கள்லாம் இன்னிக்கு ஓஹோனு வாழ்றாங்க!

பிரபலங்கள் கொண்டாடும் கோவில்! இந்த கோவிலுக்கு போனவங்கள்லாம் இன்னிக்கு ஓஹோனு வாழ்றாங்க!

By IamUD

கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து செய்தால் உங்கள் தொழில் விருத்தியடைந்து, உங்கள் தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறிவிடுவீர்கள் என்றால், அது எந்த கோவில் என்று கேட்பீர்கள் தானே..

இருங்கள்.. இந்த கோவிலுக்கு சென்றால், உங்கள் தொழில் மட்டுமல்ல, குடும்பமும் சேர்ந்தே வளமான பாதைக்கு திரும்பும், சச்சரவுகள் தீர்ந்து, கல்வியும் செல்வமும் நிலைப் பெறும். திருமணம், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் சில வருடங்களிலேயே முற்றிலும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் வீசும் என்று இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடித்து கூறுகிறார்கள்.

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க.. சொல்லுங்க அது எந்த கோவில்னுதான கேட்குறீங்க. வாங்க முகவரியில இருந்து எப்படி போறது உள்ளிட்ட பல தகவல்களுடன் கோவிலின் மற்ற அருமை பெருமைகளையும் சொல்றோம் கேட்டுக்கோங்க.

எங்கு அமைந்துள்ளது

எங்கு அமைந்துள்ளது


அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது.

பிள்ளையார் பட்டி கிராமம் திருப்பத்தூரில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள் மிகு கற்பக விநாயகர் கோவிலுக்கு செல்ல வாடகை வாகனங்கள், பேருந்து வசதிகள் உள்ளன.

Sai DHananjayan

நன்மைகள்

நன்மைகள்

மனம்போல் வேண்டுபவனவற்றை தருவதால் இவருக்கு கற்பகவிநாயகர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

அறிவு ஒளி தரும் விநாயகராக இவர் இருக்கிறார். இவரை மனதார தொழுதால் கல்வியும், ஞானமும் ஒரு வருக்கு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

திருமணத் தடையும், மற்ற தோஷங்களும் விநாயகரை வேண்டினால் தாமாக விலகும் என்பது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வெகு உறுதியான நம்பிக்கை.

KARTY JazZ

கோடி கோடியாய் சொத்து சேர்க்க

கோடி கோடியாய் சொத்து சேர்க்க

திருணமத் தடை, குழந்தையின்மை, குடும்ப நலம் உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்த விநாயகரை வழிபட்டு பின் அதற்குரிய வேலைகளைத் தொடங்கினால் நிச்சயம் உறுதியாக வெற்றியடையுமாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது தமிழகத்தின் பெரும் பணக்காரர்களாக திகழும் தொழிலதிபர்கள் பலர் இந்த கற்பக விநாயகர் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றவர்கள்தான் என்று கூறி ஆச்சர்யப் படுத்துக்கிறார் இந்த கோவிலின் பக்தர் ஒருவர்.

KARTY JazZ

 வரலாறு

வரலாறு

கல்வெட்டுக்களை நோக்கினால் இந்த கோவிலின் வரலாறு தெரியவரும். அதாவது இதன் பழமை என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இந்த கோவிலின் கல்வெட்டுக்களில் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நடைபெற்ற கல்வெட்டியியல் ஆய்வுகளின் மூலம் சில அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் 1600 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது என்பது கூறப்பட்டுள்ளது.

KARTY JazZ

வேறு பெயர்கள்

வேறு பெயர்கள்


புராண காலப் பெயர்கள் என சில பெயர்கள் கல்வெட்டியியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்று நாம் அழைக்கும் இந்த கோவிலின் புராண கால பெயர்களாக எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராச நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் ஆகிய அந்த பெயர்கள்.

 காரைக்குடி செட்டிநட்டார்

காரைக்குடி செட்டிநட்டார்

கிபி 12ம் நூற்றாண்டில் இருந்து இந்த கோவிலில் செட்டிநாட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் தெய்வ திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவில் அமைப்பு

கோவில் அமைப்பு

குன்றைக் குடைந்து சிறிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் விநாயகர் வலது கையில் லிங்கம் ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார்.

வலம்புரியாக சுழித்த தும்பிக்கையுடன் இவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவிலின் உட்பகுதிகள் பாண்டிய மன்னர்களால் குடைவரைக் கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நிர்மாணித்துள்ளனர்.

நீங்களும் அம்பானி ஆகவேண்டுமா?

நீங்களும் அம்பானி ஆகவேண்டுமா?


உங்கள் தொழில் வளர்ச்சியடைந்து நீங்களும் உங்கள் தொழிலில் பெரிய நபராக ஆக வேண்டுமென்றால் இந்த கோவிலுக்கு செல்ல சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி, விநாயகருக்கு ஒரு கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் செய்தாலே போதும் என்று கூறுகிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

கோவிலுக்குள் செல்லும் முறை

கோவிலுக்குள் செல்லும் முறை

விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாக சென்று வழிபட்டு முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் இருக்கும் ராஜகோபுர வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.

வேண்டுதல்களும் படையல்களும்

வேண்டுதல்களும் படையல்களும்

கோவிலுக்குள் நுழைந்ததும் கற்பக விநாயகர் ஆறு அடி உயரத்தில் காட்சி தருகிறார்.

இவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த சமயத்தில் விநாயகரை தரிசிப்பது நல்லது என்கிறார்கள் பக்தர்கள்.

முக்குறுணி மோதகம் எனும் கொழுக்கட்டை இங்கு சிறப்பானது.

நடை திறப்பு

நடை திறப்பு

கற்பக விநாயகர் கோவில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும்.

தைப் பூச தினத்தில் மட்டும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பூசைகள்

பூசைகள்

ஐந்து கால பூசை நடைபெறுகிறது.

அதிகாலை
காலை
மதியம்
மாலை
இரவு

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள் நடக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் திருவிழாவாகும். இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தங்குமிடங்கள் மற்றும் அருகிலுள்ள கோவில்கள்

தங்குமிடங்கள் மற்றும் அருகிலுள்ள கோவில்கள்

அருகிலேயே தங்குவதற்கு வசதியான விடுதிகள் இருக்கின்றன.

கூத்தடைப்பட்டி, செஞ்சை, செக்காலை, அறியாக்குடி பகுதிகளில் குறைந்த விலையில் சராசரி வசதிகளுடன் விடுதிகள் கிடைக்கின்றன.

காரைக்குடி அம்மன் கோவில், குன்றக்குடி முருகன் கோவில், வைரவன்பட்டி கோவில், திருப்பத்தூர் கோவில், சௌம்ய நாராயண பெருமாள் கோவில் ஆகியன அருகாமையில் இருக்கும் கோவில்கள் ஆகும்.

 எப்படி செல்வது

எப்படி செல்வது

காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் பிள்ளையார் பட்டி கோவில் அமைந்துள்ளது.

திருப்பத்தூர் - குன்றக்குடி பேருந்துகளில் பயணித்தால் பிள்ளையார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலை எளிதில் அடையலாம்.

Read more about: temples of tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X