Search
  • Follow NativePlanet
Share
» »கார்வார் நகரத்துக்கு ஒரு கார்மேகப் பயணம்

கார்வார் நகரத்துக்கு ஒரு கார்மேகப் பயணம்

கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட மாவட்டத்துக்கு தலைநகரமாக இருக்கு

By Udhaya

கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட மாவட்டத்துக்கு தலைநகரமாக இருக்கும் இந்த நகரம் 15ம் நூற்றாண்டு முதற்கொண்டே பரபரப்பாக இயங்கி வரும் ஒரு வியாபார கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. வாசனைப்பொருட்களை அதிக அளவில் விளைவிக்கும் கேரளாவிற்கு அருகிலுள்ள இது ஒரு இயற்கைத் துறைமுகம் என்பதால், வரலாற்றுக்காலத்தில் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள், அரேபியர்கள் போன்ற கடலோடிகளுக்கும் தற்சயம் இந்திய அரசாங்கத்தின் கடற்படைக்கும் இந்த துறைமுகம் மிக முக்கிய இடமாக திகழ்கிறது. கார்வாருக்கு மிக அருகில் காளி ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் பாலத்துக்கருகில் பிரசித்தி பெற்ற சதாசிவகுட் கோட்டை அமைந்துள்ளது. இங்குள்ள ஆறும், அதன் பாலமும், அருகில் கோட்டையும் பின்னணியில் அசைந்தாடும் தென்னை மரங்களும் மறக்கவே முடியாத ஒரு அற்புத காட்சியை சுற்றுலாப்பயணிகள் மனதில் ஓவியமாக தீட்டுகின்றன.

 கார்வாரில் காணவேண்டிய இடங்கள்

கார்வாரில் காணவேண்டிய இடங்கள்


ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை, தேவ்பக் கடற்கரை, தில்மட்டி கடற்கரை, மஜாலி கடற்கரை, துர்க்கா பவனி கோவில், அஞ்சாதீவு, கோடுபக் கடற்கரை, தேவ்கார் நீர்வீழ்ச்சி, நாகர்மடி நீர்வீழ்ச்சி, கப்பல் அருங்காட்சியகம், மாருதி கோவில், ஜெய் சந்தோஷி மாதா கோவில், சதாசிவகட் மலைக்கோட்டை, குருமகாட் தீவு, தேவ்காட் கலங்கரைவிளக்கம், கத்ரா அணை, குடாலி சிகரம், கோகர்ணா, போலோலெம் கடற்கரை என எக்கச்சக்க இடங்கள் கார்வாரில் இருக்கின்றன. வாருங்கள் செல்வோம்.

Vinay Revankar

 குரும்காட் தீவு

குரும்காட் தீவு

அருகிலுள்ள நகரம் - கார்வார்

தொலைவு - 9 கிமீ

பயண நேரம் - அதிக பட்சம் 30 நிமிடங்கள்

குரும்காட் தீவு பற்றிய சில தகவல்கள்

ஆமை வடிவத்தை ஒத்து காணப்படும் இந்த தீவின் நிலப்பரப்பு, அழகாக இருக்கும்.

இந்த தீவில் மலையேற்றம் செய்வது சிறப்பாக இருக்கும். இங்கு கலங்கரை விளக்கம் ஒரு காட்சிப் பகுதியாகும்.

எப்போது செல்வது

அக்டோபர் முதல் மே மாதங்கள் இந்த தீவுக்கு சுற்றுலா செல்லலாம்.

எப்படி செல்வது

தேவ் பக் பீச்சுக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் இந்த தீவை அடையமுடியும். இந்த தீவில் நிறைய விசயங்கள் இருக்கின்றன.

என்னென்ன செய்யலாம்

டால்பின் வேடிக்கை, பீச் வாலிபால், புதையல் வேட்டை போன்ற சுவாரசியமான பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. இங்குள்ள நரசிம்மர் கோயில் ஒரு பிரசித்த ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக அறியப்பட்டுள்ளது. வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் இந்த கோயிலில் நடைபெறும் உற்சவத்திற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

DeepakBerwal12

கார்வார் கடற்கரை

கார்வார் கடற்கரை

அருகிலுள்ள நகரம் - கார்வார்

தொலைவு - 4 கிமீ

பயண நேரம் - அதிக பட்சம் 15 நிமிடங்கள்

கடற்கரை பற்றிய சில தகவல்கள்

கார்வார் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகிலேயே இந்த கடற்கரை அமைந்துள்ளது. அமைதியான அற்புதமான கடற்கரையை தேடும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு இது மிக பொருத்தமான இடமாகும்.

எப்போது செல்வது

அக்டோபர் முதல் மே மாதங்கள் இந்த கடற்கரைக்கு சுற்றுலா செல்லலாம்.

எப்படி செல்வது

கார்வார் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு கட்டண வாகனங்கள், வாடகை வண்டிகள் மூலமாக செல்லலாம். நடந்து சென்றாலும் எளிதில் அடையமுடியும்.

என்னென்ன செய்யலாம்

பயணிகள் சூரியக்குளியல் மீன் பிடித்தல் மற்றும் இதர நீர் விளையாட்டு பொழுதுபோக்குகளில் இங்கு ஈடுபடலாம்.இங்கு வரும் பயணிகளுக்கு உள்ளூர் உணவை சுவைக்கும் அனுபவத்தை தரும் வகையில் இங்கு உணவகங்கள் உள்ளன.

தேங்காய் சேர்த்து செய்யப்பட்ட காரமான கடல் உணவு வகைகள் இங்கு பயணிகள் மத்தியில் பிரசித்தம்.


Noronha3

 குட்டலி சிகரம்

குட்டலி சிகரம்

எங்குள்ளது

கார்வாருக்கு விஜயம் செய்யும்போது பயணிகள் கார்வாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள குட்டலி சிகரத்தை சென்று பார்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் அமைந்துள்ளது மட்டுமன்றி .

எப்போது செல்வது

இது மேற்கில் பெல்கேரி ஆற்றினாலும் கிழக்கில் காளி ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. பயணிகள் ஹைதர்காட் மலைத்தொடரின் இந்த உயரமான சிகரத்தை வருடத்தின் எப்பருவத்திலும் சென்று பார்க்கலாம்.

எப்படி செல்வது

பயணிகள் 500 மீட்டர் தூரத்துக்கு காட்டு வழியாக மலையேற்றம் செய்து இந்த சிகரத்தை அடைய வேண்டியுள்ளதால் ஏறும் வழியில் மலைமீதிருந்து கீழேயுள்ள கடற்கரை மற்றும் நகரம் போன்றவற்றை மேலிருந்து தரிசிக்கும் அற்புத அனுபவத்தை பெறலாம்.

 தேவ்கர் நீர்வீழ்ச்சி

தேவ்கர் நீர்வீழ்ச்சி

கார்வார் நகருக்கருகிலேயே அமைந்துள்ள தேவ்கர் நீர்வீழ்ச்சியும் பயணிகள் முடிந்தால் பார்க்க வேண்டிய மற்றொரு சுற்றுலா அம்சமாகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு போவதற்கு பயணிகள் கத்ரா நீர்த்தேக்கத்தை கடந்து செல்லவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

அருகிலுள்ள இடம் - பசல்

தொலைவு - 5 கிமீ

நேரம் - 10 நிமிடங்கள்

எப்படி செல்வது

கார்வார் பேருந்து நிலையத்திலிருந்து 2 மணி நேரம் பயணித்தால் தேவ்கர் நீர்வீழ்ச்சியை எளிதில் அடையலாம்.

எப்போது செல்லலாம்?

வருடத்தின் எல்லா நாட்களிலும் செல்லலாம். என்றாலும் குளிர் மற்றும் மழைக்காலங்களில் செழிப்பாக நீர் இருக்கும்.

என்னென்ன செய்யலாம்

நீர்வீழ்ச்சியில் குதூகலிக்கலாம். மழையை ரசிக்கலாம். புகைப்படங்கள் எடுக்கலாம்.


Zakwan Ahmed

 மற்ற சுற்றுலாத் தளங்கள்

மற்ற சுற்றுலாத் தளங்கள்

கார்வாருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ரசிக்க வேண்டிய இதர கடற்கரைகளாக பினாகா கடற்கரை, மஜலி கடற்கரை, கூடி கடற்கரை போன்றவை உள்ளன. காளி ஆறு அரபிக்கடலில் கலக்கும் முகத்துவாரம் அருகே உள்ள கடற்கரை கூடி கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. இங்கு பனானா போட் ரைடிங், தோணிச்சவாரி, பரிசல் சவாரி பலவிதமான பொழுதுபோக்குகளில் பயணிகள் மற்றும் சாகசப்பிரியர்கள் ஈடுபடலாம்.

கார்வாரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பினாகா கடற்கரை அமைந்துள்ளது. இங்குள்ள பரந்த மணற்பரப்பு மற்றும் சுற்றிலும் உள்ள இயற்கை எழில் போன்றவற்றுக்கு இந்த கடற்கரை புகழ் பெற்றுள்ளது. இந்த கடற்கரைக்கு அருகிலேயே ‘செயிண்ட் ஆன் சர்ச்', ஆர்கா கடற்கரை மற்றும் தேவ்பாக் கடற்கரை போன்ற கார்வாரின் இதர சுற்றுலா ஸ்தலங்கள் காணப்படுகின்றன. இந்த கடற்கரையிலிருந்து மங்களூர் மற்றும் கோவா போன்ற சுற்றுலாத்தலங்கள் அருகில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஜலி கடற்கரைக்கு வரும் பயணிகள் இங்குள்ள ரிசார்ட் மையத்திலிருந்து - மீன்பிடி கருவிகள், பறவைகளை வேடிக்கை பார்ப்பதற்கான தொலை நோக்கிகள், அருகில் உள்ள ஏரியில் சவாரி செய்வதற்கான பரிசல்கள் போன்றவற்றை - வாடகைக்கு எடுத்து தங்கள் விருப்பப்படி பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். இங்குள்ள அழகான சுற்றுலா குடில்களுக்கும் (காட்டேஜ்) பொழுதுபோக்கு விடுதிகளுக்கும் (ரிசார்ட்) இந்த கடற்கரை மிகப்பிரசித்தமாக உள்ளது.


Ayan Mukherjee

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X