Search
  • Follow NativePlanet
Share
» »22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி ! தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க காரணம் என்ன ?

22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி ! தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க காரணம் என்ன ?

By Udhay

தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறனை கொண்டு தடுக்கிறார்கள் மத்திய அரசும் அதைச் சார்ந்த கட்சிகளும் என வெகு நாள்களாகவே ஒரு குற்றச்சாட்டு தமிழகத்தில் உள்ளது. தமிழர்களின் வாழ்வியலை அறிய ஏதுவான சில வழிகளில் தொல்பொருள் ஆராய்ச்சியும் ஒன்று. அதிலும் கீழடியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் மிக மிக அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதை வெளியிடும் நிலையில் அதன் நிர்வாகிகள் பலரை வெளி மாநிலங்களுக்கு மாற்றிவிட்டது மத்திய அரசு. இதையெல்லாம் வைத்துதான் மத்திய அரசு தமிழகத்தின் மரபணுவை மாற்ற நினைக்கிறது என்ற பொருளில் கமல்ஹாசன் உட்பட பல அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனரோ என்னவோ. சரி. கீழடியில் அப்படி என்னவெல்லாம் இருக்கு.. சென்று பார்க்கத்தகுந்த இடங்கள், திட்டமிட்டு மத்திய அரசால் மறைக்கப்பட்ட தகவல்கள் என்ன என்பன குறித்து விரிவாக இந்த பதிவில் காண்போம்.

எங்கே இருக்கிறது இந்த கீழடி

எங்கே இருக்கிறது இந்த கீழடி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது கீழடி எனும் ஊர். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். மதுரையிலிருந்து 12கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி, தமிழர்களின் ஆதிகால வாழ்க்கையைப் பற்றி இந்த காலத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆராய்ச்சி தொடக்கம்

ஆராய்ச்சி தொடக்கம்

கீழடி ஆராய்ச்சி தொடங்கியது 2015ம் ஆண்டு. தொடக்கத்தில் இருந்தே பல அரிய தகவல்களை கீழடி ஆராய்ச்சியாளர்களுக்கு தந்தது. இதையெல்லாம் பார்த்து வியந்தே விட்டனர் என்றே சொல்லலாம். காரணம் இந்தியாவில் வேறெங்கும் கிடைக்காத மிக மிக பழமையான பொருள்கள் கீழடியில் கிடைத்திருப்பதுதான்.

அரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..!

வரலாற்றை திரிக்க முதல் காரணம்

வரலாற்றை திரிக்க முதல் காரணம்

மத்திய அரசு பயப்படுவதற்கான முதல் காரணம் தெரிகிறது. ஒருவேளை இந்த முடிவுகள் வெளிவந்தால் தமிழகம் இந்தியாவிலேயே பழமையான பூமி என்பதும், மற்ற இடங்களில் காட்டு வாசிகளாக மனிதன் சுற்றி வரும்போதே தமிழகத்தில் நகரங்கள் உருவாகியிருக்கின்றன என்பதும் வெளி உலகுக்கு தெரிந்துவிடும். அப்படியானால் ஆதி மனிதர்கள் தமிழர்கள்தான் வடநாட்டினர் இல்லை என அறிவிக்க வேண்டி வரும்.

 அரிய வகை பொருள்களின் பழமை என்ன தெரியுமா

அரிய வகை பொருள்களின் பழமை என்ன தெரியுமா

இங்கு கிடைத்த அரிய வகை பொருள்களின் பழமை கிட்டத்தட்ட 2300 ஆண்டுகள் இருக்குமாம். அதாவது கிமு 2ம் நூற்றாண்டிலேயே பல வசதிகளோடு நகரக் கட்டமைப்பில் வாழ்ந்திருக்கின்றனர் என அனுமானிக்கலாம். நிச்சயம் இந்த பொருள்கள் கிமு 2ம் நூற்றாண்டை சேர்ந்தது என கூறுகிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ?

பாரசீகத்துடன் வணிகம்

பாரசீகத்துடன் வணிகம்

இங்கு கிடைக்கப்பெற்ற 6000த்துக்கும் அதிகமான தொல்லியல் பொருள்களில் நிறைய ஓடுகளும் அடக்கம். அவற்றில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சொற்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள நீர் வடிகால் அமைப்பு, தொழிற்கூடங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் ஆகியன இங்கு காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அகழ்வாராய்ச்சி

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அகழ்வாராய்ச்சி

கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவில் குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சி ஆகும். இது தமிழகத்தில் மிகப் பெரிய ஆய்வு. ஆனால் இது தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. 40 குழிகள் வரையே தோண்டப்பட்டது குறிப்பிடத் தக்கது.

முற்றிலும் எலும்புகள்; ஆந்திராவை அலறவிட்ட ஆதிமனிதனின் குகை மர்மங்கள்

இங்கு கிடைத்த பொருள்கள்

இங்கு கிடைத்த பொருள்கள்

முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டைகள், சதுரங்ககாய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் கருவி போன்றவை இங்கு கிடைத்தன. வீடுகள் சுடு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஓடுகள் வேயப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன. பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

Paramatamil

கலிபோர்னியாவுக்கு செல்லும் பொருள்கள்

கலிபோர்னியாவுக்கு செல்லும் பொருள்கள்

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் யாவும் கலிபோர்னியா கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Paramatamil

கோடி கோடியாய் தங்கங்கள்

கோடி கோடியாய் தங்கங்கள்

கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கங்கள் இங்கு கிடைத்திருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. இது சிறு சிறு ஆபரணங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆய்வு செய்தபிறகே அதன் மதிப்பு தெரிய வரும். தோராயமாக சில கோடிகள் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த காலத்திலேயே தமிழன் தங்கத்தை பயன்படுத்தியுள்ளான் என்றால் பாருங்கள்

மெய் சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்!.. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய உலோகம் பிரிக்கும் தொழிற்சாலை.

Paramatamil

 எப்படி அடைவது

எப்படி அடைவது

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் சிலைமான் எனும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது இந்த கீழடி. மதுரையிலிருந்து அரை மணி நேர பயணத் தொலைவில் இந்த இடத்தை அடைய முடியும். மேலும், இங்கு கம்பத்திலிருந்தும், திருப்புவனத்திலிருந்தும் எளிதாக அடைய முடியும்.

Read more about: travel madurai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more