Search
  • Follow NativePlanet
Share
» »கனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?

கனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?

முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது.. இதனால் கரையோர மக்களுக்கு ஆபத்து என்ற தகவல்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. அப்படி பேசப்படுவதற்கான அறிவியல் காரணங்களும், தமிழக பொறுப்பில் இருக்கும் இந்த அணைய

By Udhaya

முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது.. இதனால் கரையோர மக்களுக்கு ஆபத்து என்ற தகவல்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. அப்படி பேசப்படுவதற்கான அறிவியல் காரணங்களும், தமிழக பொறுப்பில் இருக்கும் இந்த அணையின் கொள்ளளவு, பலம், இதன் அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். மேலும் முல்லை பெரியாறு மழையின் காரணமாக பாதிக்கப்படுமா அதன் அருகிலுள்ள மிக முக்கிய சுற்றுலாத் தளங்களான தேக்கடி, காவி, சபரிமலை, பெரியார் தேசியப் பூங்கா பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

 அணையின் பின்னணியும் வரலாறும்

அணையின் பின்னணியும் வரலாறும்

முல்லை பெரியாறு அணை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி பாயும் கேரளத்தின் பெரியாற்றின் மேல் கட்டப்பட்ட அணை ஆகும். இது தமிழக கேரள எல்லை யில் அமை ந்துள்ளது. இந்த இடம் கேரள மாநிலத்துக்கு சொந்தமானது என்றாலும், இந்த அணை தமிழகத்துக்கு சொந்தம். தமிழக பொதுப் பணித் துறை தான் இந்த அணையை பராமரித்து வருகிறது. 1895ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அணை இதுவாகும். இதன் மொத்த கொள்ளளவு 15.5 டிஎம்சி , உயரம் 155 அடி. இந்த அணையின் நீர்ப் பிடி ப்பு பகுதியில் ஏகப்பட்ட சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

Jayeshj

 999 வருட கதை இதுதான்

999 வருட கதை இதுதான்

முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்பு, கருங்கல் கலவையில் கட்டப்பட்ட அணை என்பதும் மிகப் பழமையானது என்பதும் பிரம்மிப்பான விசயம்தான் என்றாலும் இதன் பலத்தை அவ்வப்போது பலர் சந்தேகித்து வருகின்றனர்.

999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்ட இந்த அணையை 1886ம் ஆண்டுமுதல் மதராஸ் மாகாணம், ஒரு ஏக்கர் நிலத்துக்கு வருடத்துக்கு 5 ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் பராமரித்து வரவேண்டும் என்பது திட்டம். தற்போது இது தமிழக அரசின் கீழ் இருந்து வருகிறது.

Periyar dam

 முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை என்ற பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா.. பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் இது பெரியாறு அணை என்றும் முல்லை ஆறு பெரியாறு இரண்டும் இங்கு கூடுவதால் முல்லைப் பெரியாறு என்றும் பெயர் ஏற்பட்டது.

இது மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.

Wouter Hagens

 மதுரைக்கு நீர் தர பலே திட்டம்

மதுரைக்கு நீர் தர பலே திட்டம்

ஆங்கிலேயர்களின் காலத்தில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வைகை நதி மட்டுமே இருந்தது. அது அப்பகுதியின் நீர்த் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கூடுதலாக நீர் தேவைப்பட்டபோது ஆங்கிலேயர்களின் உதவியுன் இந்த அணை கட்ட திட்டமிடப்பட்டது. வீணாக கடலில் கலக்கும் நீர் ஏன் மக்களுக்கு பயன்படக்கூடாது என்பதுதான் அந்த திட்டம்.

அதன்படி கட்டப்பட்ட அணையில் உருவான தேக்கடி நீர்த் தேக்கம் கிழக்கு திசையில் நீரை அனுப்பியது. இதனால் வைகையில் நீர் சேர்ந்தது.

முன்னதாக சுருளி ஆறு என்ற ஒன்றும் பயன்பெறுகிறது. பின் அங்கிருந்து வைகைக்கு நீர் வருகிறது.

3.5 லட்சம் ஏக்கர் கொண்ட இதன் நீர் தேக் கப்பரப்பில் 2.5 லட்சம் ஏக்கர் கிட்டத்தட்ட பயன்பாட்டில் உள்ளது.

Rameshng

 பயன்பெறும் இடங்கள்

பயன்பெறும் இடங்கள்


இந்த அணையிலிருந்து வரும் நீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. இந்த மாவட்டங்களில் இருக்கும் பாசன பகுதிகள் நீர் பெறுவதுடன், இங்கு பல ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது இந்த அணை நீர்.

 அணை பாதிப்பு

அணை பாதிப்பு

1979ம் ஆண்டு ஒரு மலையாள நாளிதழ் அணைக்கு ஆபத்து என செய்தி வெளியிட இது அப்பகுதி மக்களை அச்சுறுத்தியது. இதனால் கேரள அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அது கேரள மக்களின் அச்சத்தை போக்க எனவும் கூறியது. 152 அடி யாக இருந்த நீர் மட்டத்தை குறைத்து 136 அடியாக மாற்றிவிட்டது. இதனால் தமிழக அரசின் சார்பாக நீதிமன்றப் படி ஏறப்பட்டது. இதனால் 142அடி திரும்ப ஏற்றப்பட்டது. இப்படி அவர்கள் காரணமாக கூறியது இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள பாதிப்பைதான் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Bipinkdas

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்


பெரியாறு தேசியப் பூங்கா

வண்டிப்பெரியார்

பீர்மேடு

மஞ்சுமலை

சபரிமலை

காவி

குமுளி

தேக்கடி

Bipinkdas

 தேக்கடி

தேக்கடி

தேக்கடி கேரளாவில் மிகவும் விரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு சிறப்பான இயற்கைச் சுற்றுலாத்தலமாகும். பெரியார் காட்டுயிர் சரணாலயம் என்ற பெயராலும் அறியப்படும் அழகு நிறைந்த இந்த சுற்றுலா மையமானது நடைபயணிகள், இயற்கை ரசிகர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள், சாகச விரும்பிகள், யாத்ரீகர்கள் மற்றும் குடும்பச்சுற்றுலா செல்வோர் என்று பலவகைப்பட்ட பயணிகளை ஈர்க்கிறது.

கேரளா - தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தேக்கடி காட்சியளிக்கிறது. இங்குள்ள தேக்கடி காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு புகழ் பெற்றிருப்பது பெருமைக்குரிய தகவலாகும்.

அற்புதமான காட்டுயிர் அம்சங்களும் தாவர இனங்களும் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளதே தேக்கடியின் அடையாள விசேஷமாகும். எஸ்டேட், காடு, விலங்கு, யானை, புலி ... என்று சொன்னாலே ‘தேக்கடி!' என்று முடிக்கும் அளவுக்கு இந்த சரணாலயம் தமிழ்நாட்டு மக்களிடையே வெகு பிரசித்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pratheesh mishra

 முரிக்கடி

முரிக்கடி

முரிக்கடி எனும் இந்த அற்புத இயற்கை எழில் ஸ்தலமானது தேக்கடி பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு அலையலையாக பரந்து விரிந்திருக்கும் மலைத்தோட்டங்கள் வண்ண ஓவியம் போன்று பசுமையாக காட்சியளிக்கின்றன. பெரியார் காட்டுயிர் சரணாலயத்திற்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் கூட பார்த்து ரசிக்கலாம்.
காப்பி, தேயிலை, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற வாசனைப்பயிர்கள் இந்த முரிக்கடி மலைத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களின் வாசனை பிரதேசமெங்கும் வியாபித்திருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் இயற்கைச்சூழலாக இந்த முரிக்கடி மலைப்பகுதி பிரசித்தி பெற்றுள்ளது. மலைத்தோட்டப்பகுதிகளை சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றிக்காட்டுவதற்காக இங்கு உள்ளூர் சுற்றுலா சேவைகளும் நடத்தப்படுகின்றன.

குடும்பத்துடன் சிற்றுலா செல்லவும் மலையேற்றத்துக்கும் இந்த முரிக்கடி பிரதேசம் மிகவும் ஏற்றதாக காட்சியளிக்கிறது. வசியப்படுத்தும் மிளகுக்கொடிகள், கண்ணுக்கு குளுமையான மலைத்தோட்ட சரிவுகள், நறுமணம் கமழும் தென்றல், பனி படர்ந்த மலைகள், பச்சை விரிப்பை விரித்தாற்போன்ற பள்ளத்தாக்குகள் போன்ற எழில் அம்சங்கள் நிரம்பியுள்ள இந்த முரிக்கடி ஸ்தலம் விடுமுறை சுற்றுலாவுக்கு பிரசித்தமான இடமாக பெயர் பெற்றுள்ளது.

இயற்கை ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் இங்கே வருகை தந்தால் உடனே அவர்கள் ஊர் திரும்புவது சந்தேகமே. அந்த அளவுக்கு வசியப்படுத்தும் எழிற்காட்சிகளுடன் முரிக்கடி அமைதியாக வீற்றுள்ளது

keralatourism.org

கவி

கவி

கவி, பந்தனம்திட்டா மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான குமிளியில் இருந்து 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. குமிளியில் இருந்து வண்டிப்பெரியாரை வந்தடைந்து அங்கிருந்து 27.5கி.மீ தொலைவிலிருக்கும் கவியை சென்றடையலாம். கவி பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதனை வண்டிபெரியாரில் இருந்து கார் மூலமே வந்தடைய முடியும். இதற்கு நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு ₹25யும், வாகனத்திற்கு ₹50 வசூலிக்கப்படுகிறது. இயற்கைக்கு தீங்குவிளைவிக்காத வகையில் செல்லும் சுற்றுலாவான 'eco-tourism' எனப்படும் சூழல் சுற்றுலா கவியில் நடைமுறையில் உள்ளது. கேரள வனத்துறையால் கவியில் சூழல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் இங்கே இருக்கின்றன.

Read more about: travel kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X