Search
  • Follow NativePlanet
Share
» »மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்கள்

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்கள்

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்கள்

By Udhaya

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மொத்த மாநிலத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. கேரளா மாநிலம் முழுக்க தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சில முக்கியமான இடங்கள், சுற்றுலாப் பகுதிகள் நீரில் மூழ்கி இருக்கிறது. அதேபோல் மாநிலத்தில் பல இடங்களில் இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. மலைப்பகுதி என்பதால், மோசமான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் நிச்சயம் கவனத்துடன் இருக்கவேண்டும். முடிந்தால் சுற்றுலா திட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என தமிழ் நேட்டிவ் பிளானட்டின் சார்பாக பரிந்துரைக்கிறோம்.

பாலக்காடு

பாலக்காடு

பாலக்காடு தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாவட்டமாகும். இதன் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும்.

நீரில் மூழ்கியுள்ள சுற்றுலாத் தளங்கள்

நீரில் மூழ்கியுள்ள சுற்றுலாத் தளங்கள்


பாலக்காடு பகுதியில் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன அவை நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இந்த பகுதிகளின் வழியாக நிறைய இடங்களுக்கு பயணிக்க முடியும். ஆனால் மழை காரணமாக அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன.

பாலக்காடு நகரம்

பாலக்காடு நகரம்

பாலக்காடு நகரமும் வெள்ளப் பாதிப்புக்கு தப்பவில்லை. அதிக மழை நீர் சாலைகளில் ஓடி கப்பல் பயணத்துக்கு ஏற்றதாக மாற்றியுள்ளது.

கொச்சி

கொச்சி

கேரளத்தின் மெட்ரோ சிட்டி என அழைக்கப்படும் கொச்சியும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிஷ்டமானது என மக்கள் நினைக்கின்றனர். மேலும் இங்குள்ள பல சுற்றுலாத் தளங்களில் வெள்ளம் காரணமாக மக்கள் அறைகளிலேயே தங்கியுள்ளனர். சுற்றுலா திட்டம் ஏமாற்றத்தை தந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலப்புரத்தில் சாலையை உடைத்த வெள்ளம்

மலப்புரத்தில் சாலையை உடைத்த வெள்ளம்


கேரளத்தின் இரண்டாம் நிலை சுற்றுலாத் தளங்களில் முக்கியமானது மலப்புரம். இங்கு பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சுற்றுலாப் பிரதேசங்களுக்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோழிக்கோடு

கோழிக்கோடு

கோழிக்கோடு கேரளத்தின் மிகவும் வளமான பகுதியாகும். இதன் இயற்கை வனப்பு மிகவும் சிறப்பானதாகவும், பசுமை நிறைந்ததாகவும் இருக்கும். இது சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பகுதியாகும். இதனிடையே பல சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கோடஞ்சேரி

கோடஞ்சேரி

கோழிக்கோடு அருகிலுள்ள சிறிய நகரம் கோடஞ்சேரி இங்கும் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

 வயநாடு

வயநாடு

வயநாட்டில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெரும் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா செல்லும் பயணிகள் தங்கும் சில தனியார் விடுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கேரள சுற்றுப் பயணத்தை சில வாரங்கள் தள்ளிப் போடலாம் என்று திட்டமிட்டு வருகின்றனர்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X