» »இந்தியாவின் அழகிய பெண்கள் பிறக்கும் இடத்துக்கு போலாமா?

இந்தியாவின் அழகிய பெண்கள் பிறக்கும் இடத்துக்கு போலாமா?

Written By:

இந்தியாவின் அழகிய பெண்கள் பிறக்கும் இடம் என்றால், மற்ற மாநிலங்களில் பெண்கள் அழகே இல்லையா என்று கேட்கவேண்டாம். ஒரு ஆய்வின் படி இந்தியாவின் அழகிய பெண்கள் என்று எடுத்துக்கொண்டால் அது கொல்கத்தாவில்தான் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று முடிவு வந்துள்ளது. அப்படி கொல்கத்தாவில் என்னதான் இருக்கு என்று தெரிந்துகொள்ளவேண்டாமா? வாருங்கள் ஒரு சின்ன டிரிப் போய்ட்டு வந்துடலாம்.

 திட்டமிடுங்கள்

திட்டமிடுங்கள்

முதலில் திட்டமிடுங்கள். நண்பர்களே கொல்கத்தாவில் எத்தனை நாள் இருக்கப்போகிறீர்கள் எவ்வளவு பட்ஜெட் என்பதை பொறுத்து நீங்கள் பார்க்கவேண்டிய இடத்தையும் முடிவு செய்யலாம்.

எப்படி செல்வது

நீங்கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்வது சிறப்பாக இருக்கும். அல்லது தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலமாகவும். மற்ற நகரங்களிலிலிருந்து ரயில் மூலமாகவும் செல்ல முடியும்.

கோவை, திருவனந்தபுரம், பெங்களூருவிலிருந்து விமானத்திலும் செல்லமுடியும். வாருங்கள் பயணிக்கலாம்.

Dilip Muralidaran

எங்கெல்லாம் செல்வது.

எங்கெல்லாம் செல்வது.

கொல்கத்தாவில் எங்கெல்லாம் செல்வது என்ற எண்ணம் தோன்றியவுடன் உடனே கூகுளில் பெஸ்ட் பிளேசஸ் இன் கொல்கத்தா என்று டைப் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள் தானே. ஆனால் உங்களுக்கு ஒன்று தோன்றாது.. நேர மேலாண்மை. எப்படி கூகுளில் சிறந்த இடங்கள் பற்றி கிடைக்குமே தவிர.. எப்படி நேர மேலாண்மை செய்வது என்பது இருக்காது. இப்படி நேரத்தை வீணடிப்பதற்கு பதில் நீங்கள் நேரடியா தமிழ் நேட்டிவ் பிளானட்டுக்கு வந்துடுங்க...

கொல்கத்தாவில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் என உங்கள் மனதுக்கு தோன்றியவற்றுக்கெல்லாம் சென்று வந்துவிடுங்கள். முக்கியமாக பலரும் கேள்விபட்ட அவுரா பாலத்துக்கு செல்ல மறவாதீர்கள். பூங்கா தெரு அல்லது பார்க் ட்ரீட், காமக் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களுக்கும் செல்லுங்கள். கிரிக்கெட் பிரியர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும் இந்த கிரிக்கெட் மைதானத்தை. ஈடன் கார்டனுக்கும் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாங்க.

பிர்லா மியூசியம், இந்தியாவின் பெரிய போஸ்ட் ஆபிஸ், இந்தியன் மியூசியம், சால்ட் லேக் ஸ்டேடியம், விக்டோரியா மெமேரியல், அலிபூர் விலங்கியல் பூங்கா, கொல்கத்தா உயர்நீதி மன்றம் ஆகியன நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள்.

Samual Bourne

ஹௌரா பாலம்

ஹௌரா பாலம்

கல்கத்தாவின் முக்கிய அடையாளமான ஹௌரா பாலத்தை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் யாருமே திரும்புவதில்லை. இந்த தொங்குபாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1943ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை இது பல்வேறு பாலிவுட் ஹாலிவுட் சினிமாக்காட்சிகளிலும் இடம்பெற்று வந்துள்ளது

பார்க் ஸ்ட்ரீட் மற்றும் காமக் ஸ்ட்ரீட்

பார்க் ஸ்ட்ரீட் மற்றும் அதை ஒட்டியுள்ள காமக் ஸ்ட்ரீட் ஆகிய இரண்டும் கொல்கத்தா நகரத்தின் நவநாகரிக ஷாப்பிங் பகுதியாகும். இங்கு எல்லா சர்வதேச பிராண்டுகளின் கடைகளும் அமைந்துள்ளன.

இங்குள்ள நடைப்பாதைகளில் பலவிதமான பொருட்களை பேரம் பேசி வாங்கலாம். அலுவல் ரீதியாகவோ சுற்றுலாப்பயணமாகவோ நீங்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும் பட்சத்தில் இந்த மார்க்கெட் பகுதிக்கு ஒரு முறை வருகை தருவது சிறந்தது. இரவு நேரத்தில் பார்க் ஸ்ட்ரீட் பிரதேசம் முழுதும் ஜொலிக்கும் அழகுடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஈடன் காடன் மைதானம்

கொல்கத்தா நகரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானம் இது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடும் களமாகவும் இது தற்போது பயன்படுத்தப்படுகிறது. தீவிர கிரிக்கெட் ஆர்வலர்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது நிச்சயம் இந்த மைதானத்தை பார்த்து விரும்புவர். அப்போது ஏதேனும் விளையாட்டு போட்டி நடந்துகொண்டிருப்பின் பயணிகளுக்கு அதைவிட மகிழ்ச்சி வெறொன்றுமில்லை.

தலைமை தபால் அலுவலகம்

ஜி.போ. ஓ அல்லது ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ் என்று அழைக்கப்படும் தலைமை தபால் அலுவலகக்கட்டிடம் கொல்கத்தா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் பிரசித்தி பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர்கள் விதவிதமாக இதனை படம் பிடித்துள்ளனர். குமிழ் கோபுர அமைப்புடன் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். கொல்கத்தா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இது தற்போது புகழுடன் அறியப்படுகிறது.

இந்திய அருங்காட்சியகம்

உலகத்திலுள்ள பழமையான அருங்காட்சியகங்களின் ஒன்றாகவும் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகமாகவும் இந்த இந்தியன் மியூசியம் புகழ் பெற்று விளங்குகிறது. வெவ்வேறு வரலாற்று யுகங்களை சேர்ந்த அரும்பொருட்கள் முதல் மானுடவியல் ஆதாரங்கள் வரை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை சேர்ந்த பொருட்கள் இங்கு பிரதானமாக இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தவிர திபெத்திய, பர்மிய மற்றும் முகாலாயர் கலாச்சாரத்துக்குரிய அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

சால்ட் லேக் ஸ்டேடியம்

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு சொந்தமான இந்த சால்ட் லேக் ஸ்டேடியம் உலகிலேயே இரண்டாவது பெரிய மைதானமாகும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும் இடமாக இது பயன்படுத்தப்படுகிறது.

நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த பிரபல மைதானம் கொல்கத்தாவில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய அம்சமாகும்.

Rameshng

 மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

வில்லியம் கோட்டை சிட்டி சென்டரிலிருந்து 3கிமீ தொலைவில் அமைந்துள்ளது

பேலூர் மத் சிட்டிசென்டரிலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கிறது.

பிர்லா பிளானட்டோரியம் 3 கிமீ தொலைவிலும், புனித பால் கேத்தரல் 4 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன.

சிட்டி சென்டரிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் அறிவியல் நகரத்தை காணத்தவறாதீர்கள்.

மேலும் கொல்கத்தாவில் காணவேண்டிய இடங்கள்

தாஜ்பூர், மார்பிள் மாளிகை, அன்னை தெரசா இல்லம், ரவீந்திர சரோவர், காளி கோயில் என நிறைய இடங்களுக்கு செல்லவேண்டும்.

Nabarunsadhya

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்