Search
  • Follow NativePlanet
Share
» »கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்!!!

கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்!!!

By

கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கொல்லம் நகரின் பங்கு மிக முக்கியமானதாகவும் அறியப்படுகிறது.

சீனா, ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் பண்டைய காலத்திலேயே வலிமையான வியாபாரத்தொடர்புகளை கொல்லம் நகரம் பெற்றிருந்ததாக வரலாற்றுச்சான்றுகள் தெரிவிக்கின்றன.

‘கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்' என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி தன்னுடைய வீட்டுக்கு திரும்ப மனமில்லாமல் கொல்லம் நகரிலேயே தங்கி விடுவாராம்.

"என்னடா இது?!, அப்படி என்ன இந்த நகரத்துல இருக்குன்னுதானே" யோசிக்கிறீங்க? அப்ப வாங்க அப்படியே கொல்லம் மாவட்டம் முழுக்க ஒரு ரவுண்ட் சுத்திப்பாத்துட்டு வந்துடுவோம்!!!

கொல்லம் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

அஷ்டமுடி உப்பங்கழி, கொல்லம் பீச், மன்ரோ ஐலேண்ட், தேவல்லி அரண்மனை ஆகியவை கொல்லம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

கொல்லம் சுற்றுலாத் தலங்கள்

படம் : Arun Bharhath

அஷ்டமுடி

அஷ்டமுடி

அஷ்டமுடி எனும் நன்னீர் ஏரியின் நீட்சியாக இந்த உப்பங்கழி தோன்றியுள்ளது. இது கேரளாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இந்த ஏரித்தேக்கத்தில் படகு வீடுகளில் பயணம் செய்தபடியே சுற்றிலுமுள்ள தென்னந்தோப்புகளையும், பனந்தோப்புகளையும், பசுமையான இயற்கை வனப்பையும் ஏகாந்தமாக பார்த்து ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.

படம் : Kerala Tourism

படகு இல்லங்கள்

படகு இல்லங்கள்

கேரளாவின் தனிமைபடுத்தப்பட்ட சில கிராமங்களிலிருந்து நகர்ப் பகுதிகளை அடைவதற்கு 'கெட்டுவல்லம்' என்று அழைக்கப்படும் இந்த படகு இல்லங்கள்தான் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு படகுப் பிரயாணம் செல்லும் ஆர்வத்தில் இங்கு பயணிகள் வரத் தொடங்கினர். இதன் காரணமாக இன்று படகு இல்லங்கள் கேரள சுற்றுலாத் துறைக்கு பெரும் வருமானம் ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது. இந்தப் படகு இல்லங்கள் பல்வேறு வடிவங்களுடனும், வெவ்வேறு வசதிகளுடனும் காணப்படுகின்றன. எனவே உங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தார் போல உங்களால் படகு இல்லங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இங்கு பொதுவாக சுண்டன், வெப்பு வல்லம், இருட்டுகுட்டி, சுருலன் போன்ற படகு இல்லங்களை நீங்கள் பார்க்கலாம். அதோடு ரெயின்போ குரூசஸ், ரிவர் எஸ்கேப்ஸ், தி லேக்ஸ் அண்ட் லகூன்ஸ், தி ரிவர் அண்ட் கண்ட்ரி, தி டிரீம் போட்ஸ் உள்ளிட்ட படகு இல்ல அமைப்புகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.

படம் : Bernard Oh

கொல்லம் பீச்

கொல்லம் பீச்

கொல்லம் பீச் அல்லது மஹாத்மா காந்தி பீச் என்று அழைக்கப்படுகிற இந்த கடற்கரையானது கொல்லம் நகர மையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் கொச்சுபிலாமூடு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரைக்கு அருகிலேயே உள்ள மஹாத்மா காந்தி பார்க் அமைதியாக நடை பழகவும், இளைப்பாறவும் ஏற்ற இடமாக இருக்கிறது.

படம் : Arunvrparavur

கடற்கன்னி

கடற்கன்னி

கொல்லம் கடற்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கடற்கன்னி சிலை.

படம் : Rajeev Nair

முன்புறத் தோற்றம்

முன்புறத் தோற்றம்

கடற்கன்னி சிலையில் முன்புறத் தோற்றம்.

படம் : Akhilan

பரிசுத்தம்

பரிசுத்தம்

கொல்லம் கடற்கரையின் பரிசுத்தமான தோற்றம்.

படம் : Surajram Kumaravel

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

கொல்லம் கடற்கரையில் இருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிக்கும் அனுபவம் அற்புதமானது.

படம் : Thangaraj Kumaravel

மன்ரோ ஐலேண்ட்

மன்ரோ ஐலேண்ட்

மன்ரோ துருத் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மன்ரோ தீவுப்பகுதி எட்டு குட்டி தீவுகளை உள்ளடக்கியுள்ளது. கொல்லம் நகரிலிருந்து 27 கி.மீ தூரத்தில் அஷ்டமுடி நீர்த்தேக்கம், கல்லடா ஆற்றோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.

படம் : DhanushSKB

கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில்

கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில்

கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அதன் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளைடைவில் இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியின் புகழ் காரணமாக விநாயகர் கோயில் என்ற அளவிலே பிரபலமாக தொடங்கியது. இங்கு சிவன், விநாயகரை தவிர பார்வதி, முருகன் மற்றும் ஐயப்பாவின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தங்கசேரி பீச்

தங்கசேரி பீச்

கொல்லம் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தங்கசேரி பீச் எனும் கடற்கரைப்பகுதி ஒரு அற்புதமான பிக்னிக் ஸ்தலமாகும். மணற்பாங்கான இந்த கடற்கரைப்பகுதியில் புராதனமான போர்த்துகீசிய கோட்டையின் சிதிலங்கள் காணப்படுவதால் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் அறியப்படுகிறது.

படம் : Pratheesh Prakash

கலங்கரை விளக்கு

கலங்கரை விளக்கு

தங்கசேரி பீச்சில் உள்ள கலங்கரை விளக்கு.

படம் : Joachim Specht

மீனவப் படகுகள்

மீனவப் படகுகள்

தங்கசேரி பகுதியில் காணப்படும் மீனவப் படகுகள்.

படம் : Arunvrparavur

கொல்லம் துறைமுகம்

கொல்லம் துறைமுகம்

ஒரு காலத்தில் இந்தியாவின் முக்கிய துறைமுக நகரமாக அறியப்பட்ட கொல்லம் நகரின் துறைமுகம்.

படம் : Arunvrparavur

தெக்கும்பாகம் முகத்துவாரம்

தெக்கும்பாகம் முகத்துவாரம்

கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூரில் உள்ள தெக்கும்பாகம் முகத்துவாரம் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

படம் : Arunvrparavur

தேன்மலா அணை

தேன்மலா அணை

கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேன்மலாவில் கல்லடா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள தேன்மலா அணை.

படம் : Sailesh

பாலருவி

பாலருவி

தேன்மலாவிலிருந்து 15 கி.மீ தொலைவில் பாலருவி அமைந்துள்ளது.

படம் : Satheesan.vn

சாஸ்தாம்கொட்டா ஏரி

சாஸ்தாம்கொட்டா ஏரி

சாஸ்தாம்கொட்டா ஏரி எனும் இந்த பிரம்மாண்ட நன்னீர் ஏரியானது தன் இயற்கை எழில் மற்றும் படகுவீடு வசதிகள் போன்றவற்றுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ஏரியின் கரையில் அமைந்துள்ள பிரசித்தமான சாஸ்தா கோயிலின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. கொல்லம் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்திலுள்ள இந்த ஏரியை சாலை மார்க்கமாக அல்லது ஃபெர்ரி (சொகுசு மோட்டார் படகு) மூலமாக வந்தடையலாம்.

படம் : Soman

தளவாபுரம் பாலம்

தளவாபுரம் பாலம்

கொல்லம் நகரையும், தளவாபுரம் எனும் சிறிய நகரையும் இணைக்கும் தளவாபுரம் பாலம்.

படம் : Fotokannan

மோட்டார் மீன்பிடி படகு

மோட்டார் மீன்பிடி படகு

அஷ்டமுடி உப்பங்கழியில் செல்லும் மோட்டார் மீன்பிடி படகு.

படம் : Thangaraj Kumaravel

அட்வெஞ்சர் பார்க்

அட்வெஞ்சர் பார்க்

கொல்லம் நகரின் மையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த அட்வெஞ்சர் பார்க் எனப்படும் பிக்னிக் ஸ்பாட் அமைந்துள்ளது. அஷ்டமுடி ஏரிக்கரையில் உள்ள இந்த சிற்றுலாத்தலம் உல்லாசமாக பொழுதுபோக்குவதற்கும் ஏற்ற இடமாக காணப்படுகிறது.

படம் : Arunvrparavur

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

கொல்லம் ஹோட்டல் டீல்கள்

படம் : Thangaraj Kumaravel

கொல்லம் நகரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

கொல்லம் நகரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Vinoth Chandar

Read more about: கொல்லம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X