Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச்! போலாமா?

கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச்! போலாமா?

கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச் இருக்கு தெரியுமா?

தலைப்ப பாத்தவுடனே, நமக்கு எப்படி இந்த விசயம் தெரியாம தெரியாம போச்சினு பீல் பண்றீங்களா? உண்மைதானுங்க. கோவாவைப் போல கன்னியாக்குமரி அருகிலேயே ஒரு பீச் இருக்குது. அதே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அதே வெளிநாட்டு பயணிகள் அதே உல்லாசம். அதே சந்தோசம் எல்லாமே நம்ம ஊர்லயே கிடைக்குது.

கோவா போகணும்னு ஆசப்பட்டு, நிறைவேறாத பலர் இருப்பீங்க. நீங்களாம் ஏன் இந்த பீச் வந்து பாக்கக்கூடாது. அப்போ நேரா கன்னியாகுமரிக்கு வந்துடுங்களேன்.

கோவளம் கடற்கரை

கோவளம் கடற்கரை

இந்த பேரைக் கேட்டவுடனே இதே பேர்ல எங்க ஊர் பக்கமும் கடற்கரை ஒன்னு இருக்குதேனு நீங்க யோசிக்கலாம். பெரும்பாலும் நிறைய கடற்கரைகள் இதே பேர்ல இருக்கு. அதேமாதிரி கன்னியாகுமரி பக்கத்துலயும் இப்படி ஒரு பீச் இருக்கு. கோவாவுக்கு போகணும்னு நினைக்குறவங்க நேரா கன்னியாகுமரிக்கு வந்துட்டீங்கன்னா அங்கிருந்து எளிதா போயிடலாம் கோவளம் பீச்சுக்கு.


PC:mehul.antani

நீங்கள் எதிர்பார்ப்பது

நீங்கள் எதிர்பார்ப்பது

கோவாவில் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று இங்கேயும் வெளிநாட்டு, வடஇந்திய சுற்றுலாப்பயணிகள் அதிகம்பேர் வருகைத் தருகிறார்கள். இன்னொன்று தெரியுமா? இது மிகவும் மலிவான கோவா என்றால் நம்புவீர்களா? கோவா போனா எவ்வளவு செலவாகும் பாருங்க... ஆனா அதுல பாதி செலவுகூட வைக்காம இப்படி ஒரு பீச்சுக்கு இன்னுமா போகாம இருக்கீங்க. கன்னியாகுமரி பயணத்தைப் பற்றி இந்த பதிவில் பாருங்கள். இவ்ளோ மலிவான விலையில் கன்னியாகுமரி டிரிப் போகமுடியுமா?

கன்னியாகுமரி - கோவளம்

கன்னியாகுமரி - கோவளம்

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் செல்லும் வழித்தடத்தில் தமிழகம் மற்றும் கேரளத்திலும் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அதனால் நாம் கன்னியாகுமரியிலிருந்து கடற்கரை மார்க்கமாகவே செல்லப்போகிறோம். கன்னியாகுமரி - சொத்தவிளை , சொத்தவிளை - பெரியகாடு, பெரியகாடு - குளச்சல், குளச்சல் - பூவார், பூவார் - கோவளம் என இத்தனை வழிகளாக பிரிக்கலாம்.

 கன்னியாகுமரி - சொத்தவிளை

கன்னியாகுமரி - சொத்தவிளை

கன்னியாகுமரியிலிருந்து சொத்தவிளை 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடற்கரை மார்க்கமாக பயணிக்கும்போது கிட்டத்தட்ட 20நிமிடங்கள் ஆகலாம். இந்த வழித்தடத்தில் ஜெய்ன் கோயில், பேவாட்ச் அம்யூஸ்மன்ட் பார்க், ஆரோக்யநாதர் ஆலயம், குமரிக் கோவளம் கடற்கரை, கோவளம் சன்செட் வியூ பாயின்ட், வேளாங்கன்னி ஆலயம், நாராயணசுவாமி கோயில், பால்குளம் கழிமுகம், தங்கவிநாயகர் கோயில், வெங்கலராஜன் கோட்டை, மாங்குடி ஏரி கழிமுகம், உப்பளம் ஆகியன அமைந்துள்ளன.

சொத்தவிளை - பெரியகாடு

சொத்தவிளை - பெரியகாடு


சொத்தவிளை பீச் கன்னியாகுமரியில் சிறந்த சுற்றுலாத் தளமாகும். இங்கிருந்து 20 நிமிடம் பயணித்தால் பெரியகாடு எனும் இடம் உள்ளது. இதற்கிடையில், அண்ணாநகர் பீச், பள்ளம் கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, நிறைய தேவாலயங்கள் காணமுடியும். இவையனைத்தும் இப்பகுதியின் சுற்றுலாத் தளங்களாகும்.

பெரியகாடு - குளச்சல்

பெரியகாடு - குளச்சல்

பெரியகாட்டிலிருந்து அரை மணி நேர பயணத்தில் குளச்சலை அடைந்துவிடலாம். குளச்சல் மீன்பிடி துறைமுகப்பகுதியாகும். இதற்கிடையில் பார்க்கவேண்டிய இடங்களாக சின்னத்துறை பீச், மண்டைக்காடு அம்மன் கோயில் ஆகியவை உள்ளன. இந்த அம்மன் கோயில் விசேசத்தின்போது மீன் சமைத்து சாப்பிடுவது விசேசமாக உள்ளது.

குளச்சல் - பூவார்

குளச்சல் - பூவார்

இங்கிருந்து பூவார் தீவு 37கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்கிடையில் இணயம், குரும்பனை, பூத்துறை, ஏழுதேசம், வல்லவிளை, கொல்லம்கோடு, பூவார் ஆகிய இடங்கள் வருகின்றன . இவை அனைத்தும் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களாகும்.

 பூவார் - கோவளம்

பூவார் - கோவளம்

தென்னகத்தின் கோவா உங்களை அன்புடன் வரவேற்கிறது. பூவாரிலிருந்து கோவளம் அரைமணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 15கிமீ தொலைவுதான் என்றாலும் வரும்வழியில் பார்வையிட நிறைய இடங்கள் அமைந்துள்ளன. பூவார் கடற்கரை, வேளாங்கன்னி மாதா கோயில், ஆழிமலை சிவன் கோயில், விழிஞ்சம் கடற்கரை, பாறை குடைவரைக் கோயில் ஆகியன உள்ளன.

 கடற்கரை சுற்றுலாத்தலம்

கடற்கரை சுற்றுலாத்தலம்

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்' ஆகும். பல வரலாற்று பயணங்களின் சாட்சியாய் பரந்து விரிந்திருக்கும் அரபிக்கடலை ஒட்டி இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 16கி.மீ தூரத்தில் உள்ள, எழில் நிறைந்த இந்த சுற்றுலாத்தலத்துக்கு மிக சுலபமாக சென்றடையலாம்.


PC:BishkekRocks

தென்னந்தோப்பு பகுதி

தென்னந்தோப்பு பகுதி

கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் ‘தென்னந்தோப்பு பகுதி' என்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன. எப்படி காஷ்மீர் பகுதியானது ஒரு சொர்க்கபூமியென்று அழைக்கப்படுகிறதோ அதைப்போலவே இந்த கோவளம் கடற்கரையும் தெற்கிலுள்ள ஒரு ‘சொர்க்கபுரி'யாக புகழ்பெற்றுள்ளது.

பாரம்பரிய பின்னணி

பாரம்பரிய பின்னணி

கோவளத்தின் பாரம்பரிய பின்னணி கோவளத்தின் சுவாரசியமான வரலாற்றுப்பின்னணி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இங்கு அதிக அளவில் வரலாற்று ஆர்வலர்கள் விஜயம் செய்கின்றனர். 1920ம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தான ராணியான சேது லட்சுமி பாய் இங்கு தனக்காக ஒரு பிரத்யேக ஓய்வு மாளிகையை நிர்மாணித்த பிறகே இது வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. ‘ஹால்சியோன் கேஸ்சில்' என்று அழைக்கப்படும் அந்த ஓய்வு மாளிகையை இன்றும் கோவளத்தில் பயணிகள் பார்க்கலாம்.


PC:Shishirdasika -

ஹிப்பி

ஹிப்பி

ஸ்ரீலங்கா வரை நீண்ட ஹிப்பி பயணிகளின் பாதையில் இந்த கோவளம் ஒரு முக்கிய இருப்பு ஸ்தலமாக அமைந்துவிட்டது. ஆகவே, இது போன்ற வெளிப்பயணிகளின் ஆக்கிரமிப்பானது ஒரு மௌனமான கடற்கரை கிராமத்தை திடீரென்று ‘திருவிழா நகரம்' போன்று மாற்றிவிட்டது. வருடாந்திரமாக நிறைவேற்றவேண்டிய ஒரு சடங்கு போன்று கோவளம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய பயணிகளை இன்றும் கோவளத்தில் பார்க்கலாம்.

PC:Aamir Khan

 கவர்ச்சி

கவர்ச்சி

கோவளம் நகரத்தின் பிரதான கவர்ச்சி அம்சம் அதன் அழகிய கடற்கரைகளாகும். அலைகள் வீசும் கடலை ரசித்தபடியே இதமான மணற்பகுதியில் நடக்கும் அனுபவம் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.


PC:pexels

அபூர்வ அழகு

அபூர்வ அழகு

‘அபூர்வ அழகின் தரிசனம் ஆயுள் வரை ஆனந்தம்' எனும் பழமொழியின் பொருளை கோவளம் சென்று திரும்பும்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். கோவளத்தின் பசுமையும், மணற்பரப்பும், நீலக்கடலின் சாந்தமும் உங்கள் கவலைகளை எல்லாம் மறக்க வைத்து விவரிக்க முடியா பரவசத்தில் மிதக்க வைக்கும்.


pc: kerala tourism

 மூன்று முக்கியமான கடற்கரைகள்

மூன்று முக்கியமான கடற்கரைகள்

கோவளத்தில் மூன்று முக்கியமான கடற்கரைகள் (பீச்சுகள்) உள்ளன. இவற்றின் அழகை ரசிப்பதற்கு காலை நேரம் மற்றும் மாலை நேரம் இரண்டும் ஏற்ற நேரங்களாகும். இச்சமயங்களில் சூரியன் எழும்பி வரும் காட்சி மற்றும் சூரிய அஸ்தமனம் போன்றவற்றின் அற்புத தரிசனங்கள் காணக்கிடைக்கின்றன.

PC: Youtube

 கருப்பு

கருப்பு

கோவளம் கடற்கரையின் மற்றொரு சுவாரசியமான அம்சம் இங்குள்ள மணல் சற்றே கருப்பு நிறத்தில் காணப்படுவதாகும். மோனசைட் மற்றும் லைம்னைட் எனும் கனிமப்பொருட்கள் இம்மணலில் நிறைந்திருப்பதே இதற்கு காரணம்.

PC: Volkdahl

ஆபத்தானவை

ஆபத்தானவை

இங்குள்ள மூன்று முக்கியமான கடற்கரைகளும் அடுத்தடுத்து 17கி.மீ நீளத்துக்கு கடலை ஒட்டி காணப்படுகின்றன. கடினமான பாறை அமைப்புகள் இம்மூன்று கடற்கரைகளையும் பிரிப்பதுபோல் அமைந்துள்ளன. இந்த பாறை அமைப்புளைக் கடந்து அடுத்த கடற்கரைக்கு செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. இவை வழுக்கும் தன்மையை கொண்டுள்ளதால் மிகுந்த ஆபத்தானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 குரும்கல்

குரும்கல்

லைட் ஹவுஸ் பீச், ஹவா பீச் மற்றும் சமுத்ரா பீச் என்று இந்த மூன்று கடற்கரைகளும் அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தன்மையான அழகுடன் காட்சியளிப்பதால் கோவளம் வரும்போது ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி திட்டமிட்டு விஜயம் செய்வது அவசியம். கோவளத்திலுள்ள மூன்று கடற்கரைகளில் பெரியது லைட் ஹவுஸ் பீச் என்றழைக்கப்படும் கடற்கரையாகும். இங்குள்ள குரும்கல் எனும் குன்றின்மீது 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லைட் ஹவுஸ் காரணமாக இக்கடற்கரைக்கு இந்த பெயர் வந்துள்ளது.

PC: Kerala Tourism

ஹவா பீச்

ஹவா பீச்

இரண்டாவது பெரிய கடற்கரையான ஹவா பீச் பகுதியில் ஒருகாலத்தில் பெண் பயணிகள் மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் ‘ஹவா பீச்' என்ற பெயரைப் பெற்றுள்ளது. பொதுவாக ஐரோப்பிய பெண்பயணிகள் மட்டுமே இது போன்ற சூரியக்குளியலில் ஈடுபடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு சுவாரசியமான தகவலாக இந்தியாவிலேயே முதன்முதலாக இதுபோன்ற சூரியக்குளியல் கலாச்சாரம் கோவளத்தில் மட்டுமே காணப்பட்டது என்பதை சொல்லலாம்.

PC: P.K.Niyogi

 சூரியக்குளியல்கள்

சூரியக்குளியல்கள்

இருப்பினும் தற்போது இத்தகைய மேலாடையற்ற சூரியக்குளியல்கள் கோவளம் கடற்கரைகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், தனியார் ரிசார்ட் நிறுவனங்கள் இத்தகைய சூரியக்குளியல் மற்றும் பீச் குளியல்களில் பயணிகள் ஈடுபடுவதை அனுமதிக்கின்றன.

PC:Edwin549

சமுத்ரா

சமுத்ரா

கோவளம் சுற்றுலாத்தலத்தின் வடக்கு திசையில் சமுத்ரா பீச் அமைந்துள்ளது. எளிமையான சமுத்ரா எனும் பெயர் ஆரம்ப நாட்களில் இந்த கடற்கரைக்கு விஜயம் செய்த பயணிகளால் வைக்கப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது.

ரிசார்ட்

ரிசார்ட்

ரிசார்ட் வளாகங்களில் பொது மக்களுக்கு அனுமதியில்லை. குறிப்பாக, லைட் ஹவுஸ் பீச் மற்றும் ஹவா பீச் ஆகிய இரண்டு மட்டுமே அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன.

PC:Akhilan

 அஷோகா பீச்

அஷோகா பீச்

இந்த மூன்று கடற்கரைகளைத் தவிர்த்து மற்றொரு கடற்கரையையும் கோவளம் சுற்றுலாத்தலம் கொண்டுள்ளது. அது அஷோகா பீச் என்றழைக்கப்படும் கடற்கரையாகும். இங்கு அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை. தனிமையை நாடி வரும் தேனிலவுத்தம்பதியினர் இக்கடற்கரைப் பகுதிக்கு வந்து உலாவுவதை விரும்புகின்றனர்.

PC:Theapu

 பீச்

பீச்

பீச்


சமுத்ரா பீச் போன்றே இங்கும் அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை. தனிமையை நாடி வரும் தேனிலவுத்தம்பதியினர் இக்கடற்கரைப் பகுதிக்கு வந்து உலாவுவதை விரும்புகின்றனர்.

 சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்


அருவிக்கரை, மாதா ஆலயம், கலங்கரைவிளக்கம், ஜம்மா மசூதி, பரசுராம கோயில், ஹவா பீச் மசாஜ், கலங்கரை பீச் , சௌரா, வெள்ளயானி ஏரி, விழிஞ்சம் பாறைக்கோயில், போட் பிஷ்ஷிங் ஹார்பர், வலியத்துறை கடற்பாலம் ஆகியன சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்களாகும்.

Read more about: travel beach goa kanyakumari
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X