Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கிருஷ்ணர் ஜெயந்திக்கு எந்த கோவிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும் ?

இந்த கிருஷ்ணர் ஜெயந்திக்கு எந்த கோவிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும் ?

கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியன்று தமிழகத்தில் எந்த வழிபாட்டுத் தலத்திற்கு சென்றால் நல்ல வரம் கிடைக்கும் என பார்க்கலாம் வாங்க.

மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண பகாவான் இந்துக் கடவுள்களில் ஒரவராக நாடுமுழுவதும் வழிபடப்படுகிறார். குறிப்பாக, வைணர் சமூகத்தினர் விரும்பி வழிபடக் கூடிய கடவுளான இவர், மஹாவிஷ்ணுவில் இருந்து எட்டாவது அவதாரமாக கிருஷ்ணார் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாபாரதம், பாகவத கீதம் உள்ளிட்ட புராண இலக்கியங்களில் இவர் குறித்தான கதைகள் உள்ளன. தமிழர்களால், கண்ணன், கிருஷ்ணன் என அழைக்கப்படும் கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியன்று தமிழகத்தில் எந்த வழிபாட்டுத் தலத்திற்கு சென்றால் நல்ல வரம் கிடைக்கும் என பார்க்கலாம் வாங்க.

மயிலாடி கிருஷ்ணர்

மயிலாடி கிருஷ்ணர்

ஈரோடு மாவட்டம், மயிலாடி வட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கிருஷ்ணர் கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் விக்ரமம் பன்னெடுங்காலத்திற்கு முன்பே சுயம்புவாகத் தோன்றியது என வரலாறு உண்டு. சிறிய கருவரையில் அருள்பாலிக்கும் இத்தல கிருஷ்ணர் மயிலாடி வட்டத்தில் வசிக்கும் மக்களின் விருப்பக் கடவுளாக உள்ளது. கிருஷ்ணர் ஜெயந்தியன்று இங்கே நடத்தப்படும் சிறப்பு யாகங்களையும், பூஜைகளையும் கண்டு தரிசிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருண்ண பக்தர்கள் வருவது வழக்கம்.

Ssriram mt

திருவானைக்காவல் கோகுல கிருஷ்ணன் கோவில்

திருவானைக்காவல் கோகுல கிருஷ்ணன் கோவில்

திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் அமைந்துள்ள கோகுல கிருஷ்ணன் கோவில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான திருத்தலமாகும். திருவானைக்காவல் அக்ரகாரத்தில் கீழ் திசை நோக்கி அmமைந்துள்ள இவ்வாலயத்தின் உள்ளே நுழைந்ததும் முதலில் நம் கண்ணில் தென்படுவது மகா மண்டபமும், மூலவரின் எதிரே உள்ள பீடமுமே. மகாமண்டபத்தின் இடது புறத்தில் விநாயகரும், சக்கரத்தாழ்வார், நரசிம்மரும் வீற்றுள்ளனர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் கோகுல கிருஷ்ணன் வலது திருப்பாதத்தை மடக்கியபடி கையில் புல்லாங்குழலுடன் நிற்ற கோலத்தில், அவரது இருபுறங்களிலும் சத்தியபாமாவும் ருக்குமணியும் காட்சியளிக்கின்றனர்.

Ssriram mt

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று இத்தல கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்படும். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து வழிபடுவது வழக்கம். இதனைத் தவிர்த்து புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், நவராத்திரி நாட்கள் என மூலவருக்கும், அம்மையாருக்கும் சிறப்பு தரிசனம் நடைபெறும்.

Mohan Krishnan

திப்பிறமலை கிருஷ்ணர் கோவில்

திப்பிறமலை கிருஷ்ணர் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம், திப்பிறமலையில் அமைந்துள்ளது கருமாணித்தாழ்வார் கிருஷ்ணர் கோவில். இத்தலத்தில் வீற்றுள்ள கிருஷ்ணர் சிலையானது தென்னிந்தியாவிலேயே பெரிய கிருஷ்ணர் சிலை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. அதாவது, இங்கே சுமார் 13 அடி உயரத்தில் கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். தாயின் வயிற்றில் இருந்தபடியே தந்தைக்கு காட்சியளித்தால் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்ற பெயர் பெற்றதாக தல வரலாறு.

Ssriram mt

தானாக வளரும் கிருஷ்ணர்

தானாக வளரும் கிருஷ்ணர்

திப்பிறமலை கிருஷ்ணர் சிலையானது, சுயம்புவாகத் தோன்றியது முதல் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது வளர்ச்சிக்கு ஏற்ப இக்கோவில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. கிருஷ்ணர் கோவிலின் அருகிலேயே கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. சிவனை வழிபட்டு விட்டு இங்குள்ள 9 கிளைகளுடன் உள்ள அரசமரத்தை வலம் வந்தால் 9 கிரக தோஷங்களும் நீங்கி நிவர்த்தி பெறலாம் என்பது தொன்நம்பிக்கை.

AngMoKio

மதுரை நவநீதக் கிருஷ்ணர் கோவில்

மதுரை நவநீதக் கிருஷ்ணர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் வடக்கு விதியில் அமைந்துள்ளது நவநீதக் கிருண்ணர் கோவில். சுமார் நூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம். மேலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு நேர்த்திக்கடனுக்காக வேண்டியிருப்போர் அங்கு செல்ல இயலாத நேரத்தில இத்தல நவநீதக் கிருஷ்ணனை வழிபட்டாலேயே பலன்கிடைக்கும் என்கின்னர் பக்தர்கள். கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு நடைபெறும் வழுக்கு மரப் போட்டியும் இக்கோவிலின் சிறப்பாக உள்ளது. நாட்டிலேயே மிக உயரமான வழுக்குமரப் போட்டி இங்கு தான் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

வடசேரி பாலகிருஷ்ணன் ஆலயம்

வடசேரி பாலகிருஷ்ணன் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு பிரசிதிபெற்ற கிருஷ்ணர் கோவில் வடசேரி பாலகிருஷ்ணன் ஆலயம். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் வடசேரி அருகே இத்தலம் உள்ளது. கிருண்ணனுக்கே உரித்தான குழந்தை வடிவில் இத்தல மூலவர் பாலகிருஷ்ணனாக காட்சியளிக்கிறார். கி.பி. 13-ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த ஆதித்தவர்மனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளன. பல நூற்றாண்டு கடந்த இத்தல கிருஷ்ணருக்கு ஜெயந்தி தினத்தில் மாபெரும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

Ajuvignesh

துவாரகை கிருஷ்ணர் கோயில்

துவாரகை கிருஷ்ணர் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் அருகிலேயே அமைந்துள்ளது அருள்மிகு துவாரகை கிருஷ்ணர் கோவில். பழையாறுக்கு நேர் எதிரே கட்டப்பட்டுள்ள இக்காவில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். வருடந்தோறும் கிருஷ்ண ஜெயந்தியன்று துவாரகை கிருஷ்ணரை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள மும்மூர்த்திகளை தரிசித்துவிட்டு துவாரகை கிருஷ்ணனை தரிசித்தால் கூடுதல் சிறப்பு கிடைக்கும் என்பது இத்தல பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X