» » கிபி 1438ம் ஆண்டு கட்டப்பட்ட குரும்பெரா கோட்டை - தாஜ்மஹாலுக்கு மாற்றா?

கிபி 1438ம் ஆண்டு கட்டப்பட்ட குரும்பெரா கோட்டை - தாஜ்மஹாலுக்கு மாற்றா?

Posted By: Udhaya

இந்தியாவில் ஆன்மீகத்துக்கும், போருக்கும், கோட்டைகளுக்கும் காடுகளுக்கும் அதன் மர்மங்களுக்குமா பஞ்சம். எந்த திசையில் பயணித்தாலும், இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கும் ஒரு மர்மக்கதை சொல்லும்,

பெரும்பாலும் பிரபலமான இடங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு கதை இருக்கும். அப்படி ஒரு இடம்தான் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள குரும்பெரா கோட்டை. இந்த கோட்டை பற்றியும், அதன் மர்மங்கள் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்

இருப்பிடம்

இருப்பிடம்

மேற்கு வங்க மாநிலம் மிதுனாப்பூரின் ககனேஸ்வர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த குரும்பேரா கோட்டை. இது கொல்கத்தாவிலிருந்து 160கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Tirthatanay

வரலாற்று சிறப்பு மிக்கது

வரலாற்று சிறப்பு மிக்கது

இந்த கோட்டை ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்திய தொல்லியல்துறையின் கீழ் உள்ள இந்த இடம் புராதான சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.

Tirthatanay

அமைப்பு

அமைப்பு

தூண்களால் தாங்கப்பட்ட, மூன்று நீள்வட்டமான அமைப்புகளைக் கொண்ட ஒரு வட்ட வடிவ கோட்டையாக இது அமைக்கப்பட்டுள்ளது.

பழமை

பழமை


மிகவும் பழமையான கோட்டையாக கருதப்பட்டாலும், இதன் கட்டுமான சான்று (கிடைக்கப்பட்ட தகவலின்படி) இது கட்டப்பட்ட ஆண்டு கிபி 1438 லிருந்து 1469வரை இருக்கலாம் என்று கூறுகிறது. மேலும், அவ்ரங்கசீப் காலத்திலும் முகமது தாகிர் என்பவரால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மர்மங்கள்

மர்மங்கள்

தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகானின் மகன் இந்த இடத்தில் இன்னொரு தாஜ்மஹாலை கட்டவிரும்பியதாகவும், அது நிறைவேறாமல் போய்விட்டதாகவும் செவி வழிச் செய்திகள் உள்ளன.

தாஜ்மஹாலுக்கும் இந்த கோட்டைக்கும் நிறைய ஒற்றுமைகளைக் கூறுகின்றனர் இவர்கள்.

தாஜ்மஹால் - குரும்பேரா

தாஜ்மஹால் - குரும்பேரா


இரண்டும் முகலாய பேரரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும். இரண்டிற்கும் பல சர்ச்சைகள் நிறைந்துள்ளன.

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்றும், இந்த குரும்பேரா பழங்காலத்தில் சிவனுக்காக கட்டப்பட்ட இடம் என்றும் கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Udayadittya

 கட்டிடக்கலை

கட்டிடக்கலை

இந்த கட்டிடம் இரண்டு வகையான கட்டிடக்கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. அதுதான் இங்குள்ள மர்மத்துக்கு காரணமாகிறது. ஒன்று மெடிவேல் கட்டிடக்கலை, இன்னொன்று முகலாய கட்டிடக்கலை.

உருக்குலைந்து வரும் கோட்டை

உருக்குலைந்து வரும் கோட்டை

வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படும் இந்த கோட்டை, தொய்மையின் காரணமாக சிதைந்து வருகிறது. இந்திய தொல்லியல்துறை செப்பனிட்டு பாதுகாத்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

கொல்கத்தாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அநேகமாக இந்த இடத்துக்கு செல்ல மறப்பதில்லை. மேலும் இங்கு சுற்றுலா வசதிகளை மேற்கு வங்க அரசு செய்திருந்தாலும், இன்னும் மேம்படுத்தவேண்டியுள்ளது என்பது சுற்றுலாப் பயணிகளின் கருத்து.

சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்


திக்கா பீச், தாஜ்பூர் பீச், ஜார்கிராம் ராஜ் அரண்மனை, சங்கர்பூர் பீச், ஜன்னத் கோயில், பர்காபீமா கோயில், கனகதுர்கா கோயில் என பல சுற்றுலாத் தளங்கள் அருகாமையில் உள்ளன.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

ககனேஸ்வரா கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு தனியாக பேருந்து, ரயில் வசதிகள் எதுவுமில்லை.

கரக்பூரிலிருந்து 27கிமீ தொலைவில், கேசரி மாநில நெடுஞ்சாலையை அடைந்தால், அங்கிருந்து இடதுபுறமாக திரும்பி, பெல்டாவை நோக்கி செல்லவேண்டும்.

குக்காய் சந்திப்பை அடைந்தவுடன், அங்கிருந்து வலதுபுறம் இரண்டு கிமீ சென்றடைந்தால் இந்த கோட்டை அமைந்துள்ள ககனேஸ்வரை அடையலாம்.

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

மிதுனாபூருக்கு செல்ல அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சிறந்த காலமாக அமையும்.