Search
  • Follow NativePlanet
Share
» »ராமேஸ்வரத்தில் இப்படி ஒரு தீவா?...இதுவரை இப்படி ஒரு இடத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க

ராமேஸ்வரத்தில் இப்படி ஒரு தீவா?...இதுவரை இப்படி ஒரு இடத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க

ராமேஸ்வத்தை சுற்றி மொத்தம் 21 தீவுகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளையகுடா பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்ற தான் குருசடை தீவு. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாக தமிழக வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் இது. வனத்துறையின் அனுமதி பெற்று இந்த தீவிற்கு செல்லலாம். இதை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.

unknown tourist spot in Rameshwaram

பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 4 கி.மீ., தூரத்தில் அக்கா மடத்தில் வலது புறமாக செல்லும் சாலையில் சென்றால் விவேகானந்தர் நினைவு இல்லம் அமைந்துள்ளது. மண்டபத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து படகு மூலமாக கருசடை தீவுக்கு செல்ல முடியும். படகில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.300 லிருந்து ரூ.500 வரை கட்டணம் பெறப்படுகிறது. ஒரு படகில் 10 பேர் வரை பயணிக்க முடியும். 10 நபர்கள் சேர்ந்த பிறகு தான் படகை இயக்குவார்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தனியாக படகில் செல்ல வேண்டும் என விரும்பினால் 10 பேருக்கான கட்டணமான ரூ.3000 செலுத்தினால் உங்கள் குடும்பத்தினரை தனியாக தீவுக்கு அழைத்துச் செல்வார்கள்.

ஏறக்குறைய 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவில் பவளப் பாறைகள், டால்பின், கடல் பசு போன்ற அரிய வகை உயிரினங்களும் உள்ளன. இந்த தீவில் கடல் அரிப்பை தடுக்கும் அரிய வகை தாவரங்கள் காணப்படுகிறன. உயிரியல் ஆய்வாளர்களுக்கு விருப்பமான இடமாக இந்த தீவு திகழ்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த தீவில் அமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரின ஆய்வுக்கூடம், உயிரியல் காட்சிக் கூடம், முத்து சிப்பி வளர்ப்பு நிலையம் ஆகிய கட்டிடங்கள் இன்றும் காணப்படுகின்றன.

unknown tourist spot in Rameshwaram

குந்துக்கால் கடற்கரையில் உள்ள படகு இறங்கு தளத்தில் இருந்து இந்த தீவுக்கு அழைத்துச் சென்று, இங்குள்ள விபரங்களை சொல்லி சுற்றிக் காட்டுவதற்கு வனத்துறை சார்பில் ஆட்களும் உள்ளனர். இந்த தீவுக்கு செல்வதற்கு தினமும் காலை 7 மணியில் இருந்து பகல் 2 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன. அந்த சமயத்தில் இந்த தீவிற்கு சென்று சுற்றி பார்த்து விட்டு வரலாம்.

அரியவகை தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்களின் எலும்பு படிவங்கள் உள்ளிட்ட ஆச்சரியமூட்டும் பல விஷயங்கள் இந்த தீவில் உள்ளன. மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்த தீவை சுற்றிலும் புள்ளிவாசல் தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன. படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக லைப் ஜாக்கெட்கள் அளிக்கப்பட்டு, பயிற்சி பெற்ற லைப் கார்டு ஒருவரும் உடன் அனுப்பப்படுகிறார்.

இந்த தீவில் தனித்தன்மை வாய்ந்த பவளப் பாறைகள் உள்ளன. இவைகள் தான் இந்த தீவை பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது. பவளப் பாறைகளுக்கு புகழ்பெற்ற இடம் இதுவாகும். கடற்பஞ்சுகளும் இந்த தீவில் காணப்படுகின்றன. படகில் சென்று, சிறிது தூரம் கடலில் நடந்து சென்று தான் இந்த தீவை அடைய முடியும். படகுக்க அடியில் கண்ணாடிகள் மூலம் மணல் திட்டை சுற்றிலும் வாழ்ந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி, வனத்துறையினர் சுற்றிக் காட்டுகிறார்கள். ராமேஸ்வரம் சென்றால் அவசியம் ஒருமுறை குருசடை தீவுக்கு சென்று விட்டு வாருங்கள். அருமையான மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

More News

    Read more about: rameshwaram
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+