» »லடாக்கில் பைக் பயணம் போக தோதான வழிகள்!!

லடாக்கில் பைக் பயணம் போக தோதான வழிகள்!!

Written By: Bala Karthik

லடாக்கில் புதுவித வளர்ச்சி காணப்பட, வழியில் காணும் நிலங்களிலும், எல்லை சாலைகள் அமைப்பு (BRO) என உலகிலேயே உயரமான சாலை வழியை கொண்டிருக்க, பயம் தரக்கூடிய 19,300 அடி உயரத்துடன் காணப்படுவதோடு; பாராட்டத்தக்க சாதனைகளுடன் இணைந்தும் காணப்படுகிறது.

"ஹிமாங்க் பணி" என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட இவ்வேலை, 86 கிலோமீட்டர் நெடிய சாலையை கொண்டிருக்க, இதன் மூலமாக உமிங்க்லா உச்சத்தையும் கொண்டிருப்பதோடு, சிசும்லே மற்றும் டெம்சாக் எனப்படும் இரு கிராமங்களையும் இணைத்து காணப்பட, லேஹ்ஹிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்விடமானது காணப்படுகிறது. இறப்பை கடந்து, இந்த சாலையை BRO கட்டமைத்திட, இந்த வேலைக்கு கீழே மற்ற பிற சாலைகளும் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்க, அந்த சாலைகளாக கர்துங்க் லா கணவாய் (17,900 அடி), சங்க்லா கணவாய் (17,965அடி) என பலவும் காணப்படுகிறது.

கனவு இலக்கான லடாக்கிற்கு ஒவ்வொரு பைக் ஆர்வலர்களும் செல்ல, இங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெருமளவிலான சாலையானது பைக் பயணிகளுக்கு கடும் சவாலாக அமையக்கூடும். இந்த பயணத்தை நாம் முழுவதுமாக செயல்படுத்த, வாழ்க்கை அனுபவம் என்பதும் ஒருவருக்கு தேவைப்படுகிறது. நீங்கள் சாலை வழி பயணமாக லடாக்கிற்கு செல்ல ஆசைக்கொண்டால், இங்கே அதற்கான வழிக்காட்டுதல்களையும் நாங்கள் தர தயாராக இருக்கிறோம்.

லடாக்கிற்கு ஒரு பைக் பயணம் செல்ல சிறந்த நேரங்கள்:

லடாக்கிற்கு ஒரு பைக் பயணம் செல்ல சிறந்த நேரங்கள்:

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் லடாக்கை நோக்கி பைக் பயணம் செல்ல ஏதுவாக அமைய, இம்மாதங்கள் இனிமையாகவும் அமைய, இந்த மாதங்களில் குளிரானது குறைவாகவும் நம்மை எட்டி பார்க்கிறது. இருப்பினும், குளிர்காலத்துக்கு ஏதுவான ஆடையையும், சரியான ஜாக்கெட்டுகளையும், தரம் கொண்ட காலணிகளையும், என இமாலயத்தின் குளிர் கால நிலைக்கு நம்மை தயார் செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

PC: Jochen Westermann

அடிப்படை தகவல்கள்:

அடிப்படை தகவல்கள்:

இந்த பயணத்தின் கால அவகாசமாக நீங்கள் பார்க்க போகும் இடமானதை கொண்டு முடிவு செய்யப்பட, எங்கே இந்த பயணத்தை நாம் தொடங்குகிறோம் என்பதும் அவசியமாகிறது. வழக்கமாக, இப்பயணத்திற்கான காலமாக 15 நாட்கள் குறைவாக தேவைப்படுகிறது. நீங்கள் இரு வழிகளை தேர்ந்தெடுக்க அவை ஸ்ரீ நகர் முதல் லேஹ் வரையிலுமெனவும், அல்லது மணலி முதல் லேஹ் வரையிலுமெனவும் தெரியவர, அதே சம காலமானது பயணம் முழுமையடைய தேவைப்படுகிறது.

இந்த பைக் பயணத்தை முடிவுசெய்யும் நாம் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் சில விஷயங்களை மனதில் பதித்துக்கொள்வது நலமாகும்.

சரியான பைக்கை தேர்வு செய்தல்:

சரியான பைக்கை தேர்வு செய்தல்:

உங்களுடைய பயணமானது கடினமான சாலை வழியாக செல்லுமென்பதால் உங்களுடைய பைக்கின் தகுதி என்பது சோதனை செய்யப்பட வேண்டியது அவசியமாக, சரியான பைக்கை நாம் பயணத்துக்கு தேர்வு செய்யவும் வேண்டும். ராயல் என்பீல்ட், ராயல் என்பீல்ட் இமாலயன், KTM ட்யூக் போன்ற வகை பைக்குகளின் மீது நம் பார்வையை வீசலாம். ஒருவேளை யாரிடமாவது பைக்கை நீங்கள் கடன் வாங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்த பைக்கின் உரிமையாளரிடமிருந்து NOCயை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டியது அவசியமாக, லேஹ்ஹிலும் அதனை நாம் காட்ட வேண்டிய சூழல் உருவாகுகிறது.

பைக்கை வாடகைக்கு எடுத்தல்:

பைக்கை வாடகைக்கு எடுத்தல்:

நீங்கள் மணலி வரை விமானத்தில் செல்ல, களைப்பை தவிர்க்கும் பயணமாக வாடகைக்கு பைக்கை எடுப்பது நலம். வாடகை வசதிகள் நிரம்பிய மணலியில், 1200 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரையிலான வாடகை பைக்குகளை ஓர் நாளுக்கு நாம் எடுத்திட, அவற்றுள் 12,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரையிலான தொகையானது திருப்பி தரவும்படுகிறது.

உங்களுடைய அடையாள அட்டையையும், ட்ரைவர் லைசன்சையும் எடுத்த செல்ல ஒருமுறை உறுதி செய்துக்கொள்வதும் சிறப்பாக அமைய, பைக் பற்றின ஆவணங்களையும் எடுத்து வைத்துக்கொள்ள அவற்றுள் மாசு சான்றிதழ், இன்சுரன்ஸ் பேப்பர், என பலவும் அடங்க, அவை வாடகைக்காக தரவும்படுகிறது. மற்றுமோர் விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள, பைக்கில் எந்த கீறலும் விழுந்திருக்கிறதா, எதாவது குறைகள் பைக் சங்கிலியில் இருக்கிறதா?, வண்டியின் டையரை சரி பார்த்துக்கொள்ளுதல் என அனைத்தும் நமக்கு அவசியமாகிறது.

அத்துடன் மெக்கானிக்கை வாடகைக்கு தேடிக்கொள்ளவும் முடிய, அவர்களும் தினசரி பணியின் நிமித்தம் காணப்படுகிறார்கள். வழக்கமாக, பைக் வாடகைக்கு எடுக்கும் இடத்தில் அதோடு இணைந்து மெக்கானிக் காணப்பட, ஒருவேளை இல்லையென்றால் வாடகைக்கு தனியாக அவர்களை நம்மால் அழைத்துக்கொள்ளவும் முடிகிறது.

உயரம் கண்டு பயப்படும் ஒருவரா நீங்கள்:

உயரம் கண்டு பயப்படும் ஒருவரா நீங்கள்:

மலை பாலைவனமான லடாக், இதுவரை நீங்கள் அளவிடாத உயரத்தில் இருக்கிறது. அதனால், உயரம் கண்டு பயப்படும் ஒருவராக நீங்கள் இருப்பின், இதன் உயரத்தினால் தலைவலி, குமட்டல், வாந்தி எடுத்தல், அதீத இதயத்துடிப்பு அல்லது களைப்பையும் உண்டாக்கக்கூடும் என்பதை உணர வேண்டும்.

PC: Sistak

உள் வரி அனுமதி பெறுதல் அவசியம்:

உள் வரி அனுமதி பெறுதல் அவசியம்:


உணர்ச்சிப்பூர்வமான பகுதியாக இருக்கும் ஜம்மு & காஷ்மீரின் சில பகுதிகளான சுஷூல், லோமா, சக்தாங்க் என பலவும் காணப்பட, அரசு அளித்த உள் வரி அனுமதி (ILP) பெறுவது தேவைப்படுகிறது. இந்த வரியானது பாங்காங்க் ஸோ மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கை நாம் காண தேவைப்பட, தற்போது இதற்கு விலக்கு அளிக்கப்பட்டும் இருக்கிறது.

ILPஇன் அடிப்படை விலையாக ஒரு நபருக்கு 200 ரூபாய் காணப்பட, அதன்பின்னர், கூடுதலாக 30 ரூபாயும் தினசரி பாணியில் வாங்கப்பட, அவை தொண்டு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிற்கான தொகையாகவும் செல்கிறது.

Read more about: travel bike ride ladakh

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்