» »நிலா வடிவத்துல இருக்கும் ஒரு அழகான கிராமம் நம்ம இந்தியால எங்கிருக்கு?

நிலா வடிவத்துல இருக்கும் ஒரு அழகான கிராமம் நம்ம இந்தியால எங்கிருக்கு?

Written By: Balakarthik Balasubramanian

ஸ்ரீநகர் மற்றும் லேஹ் இணையும் தேசிய நெடுஞ்சாலை வழி ஒன்றினை (NH1) ஒட்டி அமைந்திருக்கும் ஒரு கிராமம் தான் இந்த லமயுரு. நிலா வடிவத்தில் அமைந்திருக்கும் இதன் நிலப்பரப்பின் அழகு, தொலைதூரம் என்ற போதிலும்... எண்ணற்ற பார்வையாளர்களை வரவழைத்து, மதிமயங்கும் அழகால் கண்களை கவர்கிறது.

இந்த நிலப்பரப்பின் அழகை வர்ணிக்க வார்த்தையற்று நாம் தவிக்க, முழு நிலவு இரவின் காட்சிகளால், தவிப்பானது அதிகரித்து அழகால் மனம் நெருடுகிறது. இந்த நிலப்பரப்பு அழகை கடந்த மற்ற சில முக்கிய ஈர்ப்புகளாக, லமயுரு மடமானது நிலாவடிவ மேற்பரப்பிலிருந்து சுமார் 3510 மீட்டர்கள் உயரத்தில் காணப்படுகிறது. இந்த நிலத்தின் பரப்பை, ஆச்சரியம் ததும்ப நாம் பார்க்க, இங்கே காணப்படும் ஒற்றை புவியியல் வடிவங்களானது இந்த இடத்திற்கு மட்டுமே தரும் சிறப்பையும் உணர்த்துகிறது.

நிலா வடிவத்துல இருக்கும் ஒரு அழகான கிராமம் நம்ம இந்தியால எங்கிருக்கு?

a minha menina

இந்த லமயுரு மடமானது 11ஆம் நூற்றாண்டில் மஹாசித்தாச்சார்யா நரோபா என்பவரால் நிறுவப்பட்டதாகும். இந்த மடமானது குகை வடிவத்தில் காட்சியளிக்க, அந்த காட்சிக்கான புகழ் அனைத்தும் நிலா வடிவ நிலப்பரப்பை பொறுத்தே அமைகிறது. இந்த மடத்தில் ஐந்து கட்டிடங்கள் இருக்க, அவை அனைத்தும் இன்று இடிப்பட்ட நிலையில் காணப்படுகிறது..

இந்த மடத்தை 'யங்க் டங்க்' என அழைக்க, அது 150 ஒற்றைப்படை துறவிகளுக்கு வீடாகவும் விளங்குகிறது. இந்த மடத்தில்...அற்புதமான படைப்புகளின் திரளாக., கலைப்பொருட்கள், சுவரோவியங்கள், தங்கச் சிலைகள், கம்பளங்கள் மற்றும் 11 கைகள், 1000 கண்கள் கொண்ட சென்சிங்கின் படங்களும் அங்கே காணப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மீண்டு வந்த இந்த லமயுரு மடத்தை, இந்திய அறிஞர் மஹாசித்தாச்சார்யா நரோபா என்பவர் அந்த பகுதி முழுவதிற்கும் நீர் ஆதாரத்தை தந்துகொண்டிருந்த ஒரு ஏரியை வற்ற செய்து, அந்த இடத்தில் லமயுரு மடத்தை நிறுவியதாகவும் வரலாற்றின் வாயிலாக நமக்கு தெரிய வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் காணப்படும் பெரிய மடமும் இதுவே! பழைமையான மடமும் இதுவேயாகும். அத்துடன், லேஹ்ஹிலிருந்து சுமார் 127 கிலோமீட்டர் தொலைவில் போத்கர்பூவுக்கும், கா-லா-செக்கும் நடுவில் செங்குத்தான மலையும் அமைந்துள்ளது.

நிலா வடிவத்துல இருக்கும் ஒரு அழகான கிராமம் நம்ம இந்தியால எங்கிருக்கு?

victor Despons

இந்த இடம் அனைவராலும் அறியப்பட்ட, இரண்டு ஆண்டு விழாவின் பெருமையுடன் சிறப்பாக கொண்டாடப்பட, அவை யூரு கப் க்யாட் மற்றும் ஹேமிஸ் சே சூ என்றும் நமக்கு தெரியவருகிறது.

இந்த திருவிழாக்களானது, இரண்டாம் மற்றும் ஐந்தாம் மாதத்தில் கொண்டாடப்பட, அதுவும் திபெத்திய சந்திர நாட்காட்டியின்படி கொண்டாடப்படுவதாகவும் சொல்கின்றனர். இந்த ஹேமிஸ் சே சூ, இரண்டு நாட்கள் கொண்டாடப்பட, அது லடாக்கில் துறவியர்களுக்கான பெரிய திருவிழாவாகவும் அமைகிறது.

குரு பத்மசம்பவா என்பவருக்கு செலுத்தும் மரியாதை நிமித்தமாக இந்த விழா நடைபெற, இவர் தான் தந்திர புத்த மதத்தை நிறுவியவர் என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இந்த விழாவின் நோக்கமாக பழக்கி மற்றும் போன் போ கடவுளுக்கும் பேய்களுக்கு இடைப்பட்ட உரையாடல் இருக்க, இவர்கள் தான் புத்த கோவிலின் காவல் தெய்வங்கள் என்பதையும் நாம் அறிகிறோம்.

நிலா வடிவத்துல இருக்கும் ஒரு அழகான கிராமம் நம்ம இந்தியால எங்கிருக்கு?

Steve Hicks

இரண்டாவதாக அப்பகுதி மக்கள் கொண்டாடும் விழாவாக யூரு கப் க்யாட் விளங்குகிறது. இந்த இரண்டு நாள் திருவிழாவில், தியாக நடனங்களும், சம்பிரதாயங்களும் நடைபெற...அவை, முகம் மூடப்பட்ட துறவிகளால் அரங்கேறுகிறது. ஆம், அவர்கள் தான் இந்த இடத்தின் காவல் தெய்வமாக விளங்குபவர்கள்.

லமயுருவை நாம் அடைய வேண்டுமென்றால், லேஹ்ஹிலிருந்து 107 கிலோமீட்டர்கள் மேற்கில் நாம் பயணிக்க வேண்டியதாய் உள்ளது. இல்லையென்றால், ஸ்ரீ நகரிலிருந்து லேஹ் சாலை வழியாக பைபாஸ் சாலையின் குறுக்கிலும், ப்ரிகிட்டி லா வழியாக...அதாவது ஷான்ஸ்கர் பள்ளத்தாக்கின் நுழைவாயில் வழியாகவும் நாம் செல்லலாம்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், சாலை போக்குவரத்து வசதியானது மிகவும் சிறப்பாக இருக்க, அதன்பிறகு பனிகளால் சூழ்ந்தே காணப்படுகிறது.

Read more about: travel hills