» »ராமனே நேரில் வந்து வழிபட்ட சனி கோயில் எங்க இருக்கு தெரியுமா?

ராமனே நேரில் வந்து வழிபட்ட சனி கோயில் எங்க இருக்கு தெரியுமா?

Posted By: Udhaya

நீங்க கட்டாயம் போகவேண்டிய கோவில்களில் ஒன்று இது.

திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.

சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் வேதேஸ்வரர் என்றும் சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என அழைக்கபடுகிறது.

சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் திருநரையூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் துருவாச முனிவரால் பறவை உருவச் சாபம் பெற்ற நரன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. அதனால் நரபுரம் எனவும் அழைக்கப்படுகிறது

ராமர் செய்த லிங்கம் தமிழகத்தில் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

கோவிலின் சிறப்பு

கோவிலின் சிறப்பு


சனிபகவான் குடும்ப சகிதம் காட்சியளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

மூலவருக்கே இல்லாத கொடிகம்பம் சனி பகவானுக்கு இருப்பது சிறப்பு.

தமன்னா விரும்பும் அந்த இடம் எது தெரியுமா?

PC: Vaikoovery

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

காலை 7 மணிக்கு திறக்கும் நடை மதியம் 1 மணி வரையும், பின்பு மாலை 4 மணிக்கு திறந்து இரவு 9 மணி வரையும் இருக்கும்.

அமலாபாலுடன் நடுக்காட்டில் ஒரு பயணம்

PC: Sa.Balamurugan

தல சிறப்பு

தல சிறப்பு

பிரம்மன், குபேரன், மார்க்கண்டேயன், முருகன் ஆகியோர் வழிபட்ட தலம். கோரக்கரும், வேறு பல சித்தர்களும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம்.

PC: எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி

தல அஜித் செய்யும் பிரியாணி

தல வரலாறு

தல வரலாறு

தசரத சக்ரவர்த்தி தன் பிணி தீர இக்கோயிலின் பிரகாரத்தில் வலம்வந்து நீராடி சனிபகவானை வழிபட்டிருக்கிறான்

ராமன் இலங்கையிலிருந்து திரும்பும்போது இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு சிவனை லிங்கமாக உருவாக்கியுள்ளான்.

Pc: Yosarian

முற்பிறவி பாவங்கள் உங்களை பாடாய்படுத்துகிறதா அப்போ இந்த கோவிலுக்கு போங்க

வழிபாடு

வழிபாடு

சனி தோஷம் நீங்கவும், வருங்காலம் சிறக்கவும் இங்கு வந்து வழிபாடு நடத்துகிறார்கள்.

PC: E.A.Rodrigues

மனச்சோர்வினால் வேலை பாதிக்கப்படுகிறதா போக வேண்டிய கோவிலகள்

காலம்

காலம்

சோழர்கள் காலத்தில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இவை கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

PC: Wiki

எண்ணெய் மசாஜ் செய்ய விருப்பமா?

வேறு பெயர்கள்

வேறு பெயர்கள்

நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம்,திருநறையூர்ச்சித்தீச்சரம்

Pc: Arunankapilan

என்ன! கடலுக்கு கீழ விவசாயமா?

எப்படி செல்வது

எப்படி செல்வது

தஞ்சாவூர் மாவட்டம், திருநரையூரில் அமைந்துள்ளது இந்த கோவில்.

எப்படி செல்வது என்பது பற்றி அறிய

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றிய தகவல்களுக்கு

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்