» »அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒரு கோடைச் சுற்றுலா போகலாமா

அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒரு கோடைச் சுற்றுலா போகலாமா

Written By: Udhaya

தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை. காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த வடகிழக்கு இந்திய மாநிலமானது வடக்கில் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தையும், கிழக்கில் நாகலாந்து மற்றும் மணிப்பூரையும் தெற்கில் மிஜோரத்தையும் தனது அண்டை மாநிலங்களாக கொண்டுள்ளது. அஸ்ஸாம் வழங்கும் காட்டுயிர் சுற்றுலா அஸ்ஸாம் மாநிலம் காட்டுயிர் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவை அஸ்ஸாம் மாநிலத்தின் சுற்றுலா செயல்பாடுகளில் பிரதான இடத்தை வகிக்கின்றன. இங்குள்ள தேசியப்பூங்காக்கள் பல அரியவகை காட்டு உயிரினங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சாகச பொழுது போக்கு அம்சங்களையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன.

வனவிலங்கு சரணாலயம்

வனவிலங்கு சரணாலயம்

கஜிரங்கா வனவிலங்கு சரணாலயம் அஸ்ஸாம் மாநில சுற்றுலா அம்சங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளாவிய அளவில் அருகி வரும் பல உயிரினங்கள் இந்த கஜிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வசிக்கின்றன. இவற்றில் இந்திய காண்டாமிருகம் முக்கியமான ஒரு விலங்காகும். இது தவிர கோல்டன் லாங்குர் குரங்கு, பெங்கால் ஃப்ளோரிகன். பிக்மி ஹாக், வெள்ளைச்சிறகு மர வாத்து போன்றவை இங்கு வசிக்கும் உயிரினங்களில் குறிப்பிடத்தக்கவையாகும். அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிகமான அளவில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியாகவும் இது புகழ் பெற்றுள்ளது.

Talukdar

கோல்ஃப் விளையாட்டுப்பிரியர்கள்

கோல்ஃப் விளையாட்டுப்பிரியர்கள்


கோல்ஃப் விளையாட்டுப்பிரியர்கள் இங்குள்ள கோல்ஃப் மைதானங்களுக்கு விஜயம் செய்து பங்கேற்பு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடலாம். அஸ்ஸாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள் சந்தைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற அம்சங்களையும் அஸ்ஸாம் மாநிலம் அபரிமிதமாக கொண்டுள்ளது. அஸ்ஸாமிய திருவிழாக்கள் யாவும் அவர்களது தனித்தன்மையான பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.

Abdul Wahab

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

பிஹு, ரொங்கேர், பைஷாகு, ஜொன்பில் மேளா மற்றும் பய்கோ போன்றவை இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் குறிப்பிடத்தக்கவை. போக்குவரத்து வசதிகள் அஸ்ஸாம் பிரதேசம் மற்ற மாநிலங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. குவஹாட்டி நகரத்தில் ‘லோகப்பிரியா கோபிநாத் போர்டோலோய் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்' விமானநிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா இந்திய பெருநகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நாட்டின் இதர பகுதிகளுடன் அஸ்ஸாம் மாநிலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

Vikramjit Kakati

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்