Search
  • Follow NativePlanet
Share
» »மேற்கு வங்க காட்டுக்குள்ள அழகான ஒரு பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 11

மேற்கு வங்க காட்டுக்குள்ள அழகான ஒரு பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 11

By Udhaya

பழமையும் நவீனமும் கலந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களுடன் மேற்கு வங்காள மாநிலம் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. சுந்தர்பன்ஸ் காடுகள், பக்காலி, முர்த்தி, பிர்பூம், தாராபீத் போன்ற சுற்றுலாத்தலங்கள் இம்மாநிலத்தில் அவசியம் விஜயம் செய்து மகிழ வேண்டியவையாகும். இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பிய டார்ஜிலீங் மற்றும் மோங்பாங், பாரம்பரியம் நிரம்பி வழியும் கொல்கத்தா, முர்ஷிதாபாத் மற்றும் உன்னதமான சாந்திநிகேதன் வளாகம் போன்றவையும் இம்மாநிலத்தில் பயணிகளை உற்சாகப்படுத்த காத்திருக்கின்றன. இந்த மாதிரியான புவியியல் அமைப்பு கொண்ட ஒரு மாநிலத்துக்கு அதுவும் காடுகளில் நாம் பயணம் செய்யும்போது, மிகுந்த தன்னிறைவையும், மனதுக்கு புத்துணர்வையும் தரும். வாருங்கள் பயணத்தை தொடங்கலாம்..

பீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா? # காட்டுயிர்சுற்றுலா 10

மோங்போங்

மோங்போங்

பறவைகள் மற்றும் விலங்குகளை விரும்புபவர்களை மோங்போங் ஏமாற்றாது. இங்கே வருபவர்கள் ப்ராமினி மற்றும் ஊசிவால் வாத்துக்கள், பார்-ஹெட்டட் வாத்துக்கள், போச்சர்ட் வாத்துக்கள் மற்றும் மல்லார்ட் வாத்துக்களை கண்டு ரசிக்கலாம். லடாக் மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்து குளிர் காலத்தின் போது சில பறவைகள் இங்கே புலம் பெயரும். அதோடு இங்கே பல குரங்குகளையும் காணலாம்.

M.a.a.Diyan

சிலிகுரி

சிலிகுரி

சிலிகுரி வட மாவட்டங்களின் சுற்றுலாத் துறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. சுற்றியுள்ள மற்ற சிறிய ஊர்களுக்கும், சிலிகுரிக்கு அருகில் இருப்பதால் ஏராளமான பயணிகள் செல்கிறார்கள். சிலிகுரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இஸ்கான் கோவில், மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், விஞ்ஞான நகரம், கரொனேஷன் பாலம், சலுகரா மொனாஸ்ட்ரி, மதுபான் பூங்கா, உம்ரோ சிங் படகு முகாம் என பலவகையான இடங்கள் உள்ளன.

V Malik

சல்ஸா

சல்ஸா

மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் இமயமலைத்தொடர்களின் அடிவார மலைகளில் இந்த சல்ஸா எனும் அழகிய நகரம் அமைந்திருக்கிறது. இது சிலிகுரி சுற்றுலா நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் ரம்மியமான தேயிலைத்தோட்டங்கள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் பிரமிக்க வைக்கும் ஆறுகள் போன்றவற்றை கொண்டுள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் காண்டாமிருகங்கள் மற்றும் யானைகள் அதிகம் வசிக்கின்றன. உள்ளூர் வழிகாட்டிகளின் துணையுடன் பயணிகள் இங்கு காட்டுச்சுற்றுலாவில் ஈடுபடலாம். சல்ஸாவுக்கு அருகிலுள்ள துவார் வனச்சரகத்தில் சம்பார் மான், புள்ளி மான் மற்றும் குரைக்கும் மான் இனங்கள் காணப்படுகின்றன.

Altaipanther

சம்சிங்

சம்சிங்

மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் தேயிலைத்தோட்டங்கள் நிறைந்த பூமியில் இந்த சம்சிங் நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள எல்லா நகரங்களுமே இமாலயத்தின் அடிவார மலைகளில் அமைந்துள்ளதால் எங்கு பார்த்தாலும் இயற்கை அழகு நிரம்பி வழிகின்றன.

தேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள் மற்றும் தொலைவில் ஜொலிக்கும் பனிச்சிகரங்கள் என்று குதூகலிக்க வைக்கும் அம்சங்களுடன் இயற்கை ரசிகர்களை இந்த சம்சிங் பிரதேசம் வரவேற்கிறது.

மேலும் இந்த மலைநகரத்தை ஒட்டி வளமான வனப்பகுதிகளும் காணப்படுகின்றன. இவற்றில் பலவகை பறவைகள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் வசிக்கின்றன. நேவ்ரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா சம்சிங் நகரத்திலிருந்து 66 கி.மீ தூரத்தில் உள்ளது.

Lip Kee Yap

 சுந்தரவனக் காடுகள்

சுந்தரவனக் காடுகள்

உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இடமாக சுந்தரவனக் காடுகள் இருக்கும். மேலும், இந்த பகுதியில் உள்ள யுனெஸ்கோ-வின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

மிகவும் பெரிய மாங்குரோவ் காடுகளில் ஒன்றான சுந்தரவனக் காடுகள் சுமார் 4200 ச.கிமீ பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த காடுகளில் உலகத்திலேயே மிகவும் மோசமாக, அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான இந்தியப் புலிகளுக்கான காப்பகமும் உள்ளது.

சுந்தரவனக்காடுகளின் சூழலுக்கேற்ப, உப்பு நீரில் வாழ தன்னைத் தயார் படுத்திக் கொண்டு, கம்பீரமாக உலவிக் கொண்டிருக்கும் இந்தியப் புலிகளை காண வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

juggadery

பிந்து

பிந்து

இந்திய எல்லையில் இருக்கும் கடைசி கிராமம் என கருதப்படும் பிந்து, இந்திய-பூட்டான் எல்லையில் உள்ளது. இக்கிராமத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் ஆச்சரியமூட்டுபவையாக உள்ளன. இங்கிருந்து பூடானுக்கு செல்லும் முயற்சியையும் பயணிகள் மேற்கொள்ளலாம். மிகவும் அழகான அவ்விடத்திற்கு செல்லும் வழியெங்கும் பச்சைப் பசேலென்ற தேயிலைத் தோட்டங்களும், அமைதியான கிராமங்களும் அமைந்திருக்கின்றன.

டொடே முதல் டங்க்டா வழியாக நெரொரா பள்ளத்துக்கு பூங்கா வரையிலான சிறிய மலையேற்ற வசதிகளை சில குழுக்கள் இங்கு ஏற்பாடு செய்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் கல்ம்பொங் என்னுமிடத்தில் அவை அமைந்துள்ளது.

juggader

ஜல்லாங்

ஜல்லாங்

பறவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக விளங்கும் இப்பகுதியில் பலவகையான மலைப்பிரதேச பறவைகள் வசிக்கின்றன. லாஃபிங் திரஷ், ரெட்ஸ்டார்ட், பிரவுன் டிப்பர் மற்றும் இதர சில புலம்பெயர் பறவைகளை இங்கு பார்த்து ரசிக்கலாம். இவை தவிர இன்னும் ஏராளமான பறவை இனங்களை நீங்கள் ஜல்லாங் பறவைகள் சரணாலயம் அல்லது கொருமாரா காட்டுயிர் சரணாலயத்திலும் பார்த்து ரசிக்க முடியும். ஜல்தகா ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஒரு நவீன நீர்மின் உற்பத்தி நிலையமும் இந்த ஜல்லாங் நகரத்திலுள்ள முக்கிய அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

Pinakpani

ரிஷ்யப்

ரிஷ்யப்

கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் உள்ள இந்த ரிஷ்யப் மலை நகரத்தில் எல்லாமே வித்தியாசமான சூழலுடன் காட்சியளிக்கின்றன என்பதில் வியப்பொன்றுமில்லை. நகர வாழ்க்கை முறையையே பார்த்து அலுத்துப்போன மனங்களுக்கு இப்பிரதேசத்தின் பரபரப்பற்ற வாழ்க்கை முறை ஒரு ஒத்தடமாக இருக்கக்கூடும். மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் லாவா எனும் இடத்திலிருந்து 4 கி.மீ தூரம் மலையேற்றம் செய்து இந்த ரிஷ்யப் மலைவாசஸ்தலத்தை அடைய வேண்டியுள்ளது. இந்த மலையேற்ற பயணம் ஒன்றே உங்கள் சுற்றுலா அனுபவத்தை பூர்த்தி செய்ய போதுமானது என்றால் அது மிகையில்லை.

Dycvoelectecr

 மூர்த்தி

மூர்த்தி

காலிம்பாங் மலைகளின் வழியே ஓடி வரும் மூர்த்தி எனும் ஆற்றின் பெயரால் அழைக்கப்படும் அழைக்கப்படும் இந்த சுற்றுலாத்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் வட பகுதியில் அமைந்துள்ளது. வனப்பிரதேசத்தின் நடுவே ஒரு ஓய்வு மாளிகையில் தங்கும் அனுபவத்தை பயணிகள் இந்த மூர்த்தி ஸ்தலத்தில் பெறலாம். இந்த காட்டுச்சுற்றுலா ஸ்தலம் மேற்கு வங்காள மாநில அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. தற்போது சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக புதிய தங்கும் விடுதி வளாகமும் வனத்துறையால் கட்டப்பட்டுவருகிறது

Dycvoelectecr

புருலியா

புருலியா

புருலியாவில் இருக்கும் பல சுற்றுலா தலங்களை விட இங்கு கங்சபடி அணைக்கு அருகில் இருக்கும் மான் பூங்கா மற்றும் அஜோத்யா மலைகள் தான் புருலியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்கி வருகின்றன. இந்த நகரத்தின் காட்சி பரப்பை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஷ்யாம் ராய் கோவில் மற்றும் பிஹாரிநாத் மலை போன்ற இதர ஈர்ப்புகளும் புருலியாவில் உள்ளன. ஜாய்சந்தி பஹர் என்ற மற்றொரு இடம் மலை பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இதுவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கும்.

பீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா? # காட்டுயிர்சுற்றுலா 10

Pinakpani

Read more about: travel forest summer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more