» »ஜுராசிக் காடாக இருந்த அரியலூர்! தோண்டத் தோண்டக் கிடைக்கும் டைனோசர் படிமங்கள்!

ஜுராசிக் காடாக இருந்த அரியலூர்! தோண்டத் தோண்டக் கிடைக்கும் டைனோசர் படிமங்கள்!

Written By: Sabarish

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாபெரும் உயிரினம் டைனோசர்கள். அவை சிறியதாக, பெரியதாக, வலிமையுள்ளதாக என பல வகைகளாய் வாழ்ந்து வந்தன. இன்று நாம் வாழ்ந்து வரும் இதே பூமியில் தான் இந்த மாபெரும் உயிரினமும் வாழ்ந்து வந்துள்ளது. பூமியின் வரலாற்றில் டைனோசர்கள் 200 - 250 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. இவற்றிற்கான பல ஆதாரங்கள் அந்த உயிரினத்தின் படிமங்களாக இன்றளவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொல்லியல் துறையினர் மூலம் கண்டறியப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் மத்தியில் உள்ள அரியலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசர்களின் படிமங்கள் அரியலூர் முன்னொரு காலத்தில் ஜுராசிக் காடாக இருந்ததற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

அரியலூர்

அரியலூர்


தமிழகத்தின் 31-வது மாவட்டம் அரியலூர். முன்னொரு காலத்தில் பெரம்பலூருடன் இணைந்திருந்த இது பொருளாதார அடிப்படையில் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாகக் கிடைப்பதால் தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் இங்கே உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. சிமென்ட் தவிர நிலக்கரியும் இங்கே அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக அரியலூருக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக கிடைக்கிறது. இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதுவெல்லாம் இம்மாவட்டத்தின் புவியியல் அமைப்பைக் கொண்டு தற்போது நடைபெற்று வரும் பணிகளும், விவசாயமும். ஆனால், இங்கே மிகப் பெரிய அளவிலான செம்மண் திட்டுக்களும், சுண்ணாம்புப் பாறைகளும், படிவங்களும் இருக்க என்ன காரணம் என நீங்கள் அறிவீர்களா ?. அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Ssriraman

கடலூராக இருந்த அரியலூர்!

கடலூராக இருந்த அரியலூர்!


அரியலூர் மாவட்டம் ஒரு காலத்தில் கடல் பகுதியாகவே இருந்துள்ளது. இதற்குச் சான்று இன்றளவும் அரியலூருக்கு உட்பட்ட பகுதிகளில் பரவலாக கடல்சார் படிவங்கள் காணப்படுவதே ஆகும். மேலும் கடல் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் இந்தப் பகுதி பெரிய அளவில் உதவி வருகிறது. சமகாலத்தில் கடல் பின்னோக்கிச் சென்ற காரணத்தால் கடல்மட்டம் முழுவதும் நிலப்பரப்பாக மாறியுள்ளது. இதனை, தற்போதும் அரியலூர் பகுதியில் கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் படிவங்கள் மற்றும் எச்சங்களைக் கொண்டு கண்டறிய முடிகிறது.

Brocken Inaglory

இமயமலையும் அரியலூரும்..!

இமயமலையும் அரியலூரும்..!


புவியியல் ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரை அரியலூர் மாவட்டம் ஆய்வுகளின் சொர்க்கபுரியாகும். இமயமலைப் பகுதியும், அரியலூரும் ஒரு காலத்தில் கடலாக இருந்து பின்னர் நிலப் பகுதியாக மாறியதாலே ஆய்வாளர்களின் விருப்பமான பகுதியாக இது திகழ்கிறது. படிமங்களாக மாறிய கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இன்றும் தோண்டத் தோண்டக்கிடைக்கின்றன.

sushmita balasubramani

அரியலூரில் அழிந்த ஜுராசிக் பார்க்!

அரியலூரில் அழிந்த ஜுராசிக் பார்க்!


சுமார் 182 - 46 மில்லியன் ஆண்டுக்கும் இடைப்பட்ட 81 மில்லியன் ஆண்டுக்கு முன்பு அரியலூர் உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்துள்ளன. அப்போதே மாபெரும் உயிரினமான டைனோசர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளது. பின் இக்காலகட்டத்தில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாகக் கடலின் மிகப்பெரிய சீற்றத்தால் இந்தக் காடுகள் மொத்தமுமாக அளிக்கப்பட்டன. அரியலூர் மட்டுமின்றி, நெய்வேலி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகள் மொத்தமும் இந்த கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு அழிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட படிமங்களே இன்றளவும் நெய்வேலியிலும், ஜெயங்கொண்டத்திலும் தோண்டி எடுக்கப்பட்டு வரும் கனிம வளங்கள். கல்லங்குறிச்சியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் டைனோசர்களின் எச்சங்களும், அதன் முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டது இதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.

I, Laikayiu

அருங்காட்சியமாக மாறும் அரியலூர்

அருங்காட்சியமாக மாறும் அரியலூர்


புவியியல் குறித்தான சிறப்புமிக்க பொக்கிஷங்கள் நிறைந்த அரியலூரில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. அதனுடன் சேர்த்து இங்கே கடல் உள்வாங்கியது போல் அமைந்துள்ள 52 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியையும் சுற்றுலாத் தலமாக்குவதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், அதனுடன் இணைந்த இந்தியாவிற்கும் உலக அளவில் புவியியல் ரீதியாக ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Bramfab

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்