» »கவின்கொஞ்சும் கல்சி!.. சில்லுனு ஒரு படகு சவாரி போலாமா?

கவின்கொஞ்சும் கல்சி!.. சில்லுனு ஒரு படகு சவாரி போலாமா?

Written By: Udhaya

உத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 780 மீ உயரத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலம்தான் கல்சி. ஜான்சர்-பவர் என்ற ஆதிவாசியினரின் வாழ்விடத்தின் நுழைவாயிலாக விளங்கும் கல்சி யமுனா மற்றும் டன் நதிகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. கல்சியில் பல பண்டைய நினைவுச் சின்னங்களும், சாகச விளையாட்டுக்களும் மிகவும் பிரபலம். இந்த இடத்துக்கு போயி ஒரு போட்டிங்க்க போட்டுட்டு வரலாம் வாங்க!

அசோகன் பாறை

அசோகன் பாறை

இங்கிருக்கும் 'அரசாணை தாங்கிய அசோகன் பாறை' இந்திய கல்வெட்டு ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாக இருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. இப்பாறையில் காணப்படும் மவுரிய அரசின் 14-வது அரசாணை, கிமு 253-ஆம் காலத்தில் பொறிக்கப்பட்டது. இதிலுள்ள அரசாணையில் பிராமி எழுத்துருவிலான பிராகிருத மொழியில் அரசனின் சீர்திருத்தங்கள் மற்றும் அறிவுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பத்தடி உயரமும் எட்டடி அகலமும் கொண்ட பிரமாண்டமான கட்டமைப்பை இதில் காணலாம்.

Nipun Sohanlal

 ஆசன் பரேஜ்

ஆசன் பரேஜ்

புலம்பெயர்ந்து வரும் பல்வேறு அரிய பறவைகளின் தங்கும் இடமான ஆசன் பரேஜை இங்கு கண்டு களிக்கலாம். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் இங்கு வரும் பறவைகளை அரிய பறவைகள் என சான்றிதழ் அளித்துள்ளது.

Puneetcps

 என்னெல்லாம் இருக்கு

என்னெல்லாம் இருக்கு

மல்லார்ட் என்ற காட்டு வாத்து, சிவப்பு முகம் கொண்ட ஆண் வாத்து, சிவப்பு நிற வாத்துவகை, தண்ணீர் கோழி, பெரிய நீர் காகம், உண்ணிக்கொக்கு, வாலாட்டுக்குறுவி, குளநாரை, மீன்பிடி கழுகுகள், சேற்றுப் பூனைப் பருந்து, பெரிய புள்ளிகளுடைய கழுகு, கடற் பறவை மற்றும் வன்பாலை போன்ற அரிய வகைப் பறவைகளை பறவை விரும்பிகள் கண்டு ரசிக்கலாம்.

T. R. Shankar Raman

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

அக்டோபர் - நவம்பர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் புலம் பெயர்ந்து வரும் பதினொறு வகை பறவைகளையும், நீர்ப்பறவைகளும் இங்கு ஒன்றாக காணலாம்.

Araghu

விகாஸ்நகரம்

விகாஸ்நகரம்

கல்சியின் விகாஸ்நகரம் ஒரு சிறந்த கடைவீதி. தோனி, படகுசவாரி, பனிச்சறுக்கு, மெத்தூர்தி, கப்பல் போன்ற கேளிக்கைகளுக்கு கல்சியில் சிறந்த இடமாக விளங்கும் இடம் டக்பதர். இவ்விடத்தின் சுத்தமான யமுனா நதியில் கட்டுமர பயணமும் மேற்கொள்ளலாம். இங்கு செப்டம்பர்-அக்டோபர் மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா செல்பவர்கள் நன்னீர் வகை மீன்களை பிடிக்க தனியார் ரிசார்ட் உரிமையாளர்களும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

Юрий Рудницкий

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


திமிலி பாஸ், கட்டா பத்தர் மற்றும் சக்ரத்தா போன்ற இடங்களும் கல்சியில் பார்க்கக் கூடிய இடங்களாகும். டெகர்டன் விமான நிலையத்திலிருந்து கல்சிக்கு விரைவு விமான போக்குவரத்து உள்ளது. புது டில்லி போன்ற அருகாமை நகரங்களிலிருந்தும் பேருந்துகள் கல்சிக்கு இயக்கப்படுகின்றன. கல்சிக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் கோடை காலமே சிறந்தது.

Galib106

Read more about: travel india summer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்