Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை! அப்படி என்னதான் உள்ளது ?

தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை! அப்படி என்னதான் உள்ளது ?

தமிழகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு ஈடாக சிறந்து விளங்கும் முருகத்தலங்களில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தென்பழனி என்று அழைக்கப்படுகிறது.

பழமையான முருகன் கோவில்களில் மிகச்சிறப்பான தலம் கழுகு மலை முருகன் கோவிலாகும். இந்த கோவில் கோவில்பட்டிக்கும், சங்கரன் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் ‌மலையை குடைந்து, கோவிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான். இந்த குடவரைக்கோவிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு ஈடாக சிறந்து விளங்கும் முருகத்தலங்களில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தென்பழனி என்று அழைக்கப்படுகிறது. சரி வாருங்கள், அப்படி இங்கே என்ன உள்ளது ? தல சிறப்பு என்ன என்பதை தெரிந்துகொள்ள பயணிப்போம்.

தலவரலாறு

தலவரலாறு


பிரம்மனின் கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும், என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார்.

Ssriram mt

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என ஓர் வரலாறு ஊள்ளது. மேலும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நம்மாழ்வார் கோவில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் இக்கோவில் 89-வது தலமாகும். நவத்திருப்பதிகளில் இத்தலம் 5-வது தலமாகும்.

Ssriram mt

சிற்பங்கள்

சிற்பங்கள்


கழுகுமலைக் கோவில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. கோவிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலி ஏற்படுகிறது.

Ssriram mt

கல்லால் ஆன நாதஸ்வரம்

கல்லால் ஆன நாதஸ்வரம்


இத்திருக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதாக சான்றுகள் உள்ளன.

Ssriram mt

தல அமைப்பு

தல அமைப்பு


திருக்கோவிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியை அடுத்து ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோவில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோவில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார். ஸ்ரீ ராமர், பொன்னீந்த பெருமாள் என தனித் தனியே சன்னதிகள் உள்ளன.

Sethu200

நம்மாழ்வாருக்கு தனிக் கோவில்

நம்மாழ்வாருக்கு தனிக் கோவில்


கோவிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோவில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோவில் மதிலுக்கு வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன.

Ssriram mt

திருவிழா

திருவிழா


ஆனி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் திருஆடிஸ்வாதி, ஆவணி மாதம் திருப்பவுத்திர உற்சவமும், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவமும், திருக்கார்த்திகை தீபத் திருவிழா, மாசி உற்சவமும், வைகுண்ட ஏகாதசி விழா என வருடம் முழுவதும் இத்தலத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

Booradleyp

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருநெல்வேலியில் இருந்து சுமார் 69 கிலோ மீட்டர் தொலைவில் கழுகுமலை அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி நெடுஞ்சுலையில் ராஜவள்ளிபுரம், வானரமுட்டி கடந்தால் இத்தலத்தை அடையலாம். சங்கரன்கோவிலில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும், சிவகாசியில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X