
நாட்டின் கலையம்சம், கலாச்சாரங்கள், உணவு முறை, வரலாறு மிக்க பாரம்பரியம் உள்ளிட்டவற்றின் புகலிடமாக விளங்குவதே இந்த கனவுகளின் இராஞ்சியம். அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள இது ஒருவித வியக்கத்தகுந்த தனி அம்சங்களுடன் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளையும் கவர்ந்திலுக்கும் வகையில் உள்ளது. அப்படி இதனுள் என்னதான் உள்ளது ?. வாருங்கள் இந்த ரகசியத்தை அறிந்துகொள்ள அதனுள்ளே பயணிப்போம்.

எங்கே உள்ளது ?
ஹரியானா மாநிலம், குர்கான் பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றுதான் இந்த கனவுகளின் இராஞ்சியம். குர்கானில் உள்ள தங்க முக்கோணத்தில் இருந்து இதனை எளிதில் அடையமுடியும். ஆக்ரா, டில்லி, ஜெய்ப்பூரில் இருந்து பயணிப்போருக்கு ஏற்ற சாலை வசதிகளை இது கொண்டுள்ளது.

என்னதான் உள்ளது ?
நம் நாட்டிற்கு உரிய கலை அம்சங்கள் பிறநாட்டவரால் கூட பெரிதும் விரும்பத்தக்கது. அத்தகைய கலை, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றின் புகலிடமான காட்சித் தலம் தான் இந்த நவீன தொழில்நுட்பமிக்க பகுதி.
Os Rúpias

கலாச்சார நிகழ்ச்சிகள்
கனவுகளின் இராஞ்சியம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திலுக்கிறது. இந்திய பாரம்பரிய, நவீன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் இங்கே பொழுதுபோக்கு முறையாக வழங்கப்படுவது இதன் கூடுதல் சிறப்பு. அதுமட்டுமின்றி கைவினை அங்காடிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், திருவிழாக்கள், தெரு நடனங்கள், புராண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் கூட இங்கு நிகழ்த்தப்படுவது வழக்கம்.
Nicolas Sanguinetti

நௌடன்கி மஹால்
இந்நிகழ்ச்சிகளின் போது நௌடன்கி மஹாலில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கே பாலிவுட்டை போன்று இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் நடத்தப்படுகின்றன.
Os Rúpias

பறக்கும் பார்கள்
மேடையில் நிகழ்ச்சிகள் நிகழும் போதே பார்வையாளர்களைக் கவரும் தானியங்கி பறக்கும் பார்கள், ஹைட்ராலிக் மேடை மற்றும் மேட்ரிக்ஸ் ஒலி அமைப்பு போன்றவை புதியதோர் அனுபவத்தை வழங்குகிறது. இருக்கும் இடத்திற்கே சரக்கு வந்தா... அதுவும் புதுவிதமா பறந்து வந்தா எப்படி இருக்கும். இங்கே கோவா, கேரளா, ராஜஸ்தானின் அரச வாழ்க்கை போன்ற அனுபவத்தை ஒவ்வொருவரம் பெற்றுச் செல்லலாம்.
Os Rúpias

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்
சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம்
கனவுகளின் இராஞ்சியம் அமைந்துள்ள குர்கானில் ஒரு சில சுற்றுலாத் தலங்களும் உள்ளன. அவற்றுள் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பத்தக்கது சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் தான். சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பறவைகள் என 300-க்கும் மேற்பட்ட பறவையினங்களை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் குறிப்பாக பனிக் காலங்களில் இங்கு வந்தால் சைபீரியா, ஐரோப்பா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் அரிய வகை பறவைகளை காணும் வாய்ப்புகள் உள்ளன.
J.M.Garg