» »தெலுங்கானாவின் மேடக்கில் தித்திக்கும் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 17

தெலுங்கானாவின் மேடக்கில் தித்திக்கும் பயணம் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 17

Written By: Udhaya

ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மேடக் என்னும் நகரம். இதன் வேறு பெயர்களான சித்தாபுரம் மற்றும் குல்ஷனாபாத் ஆகிய பெயர்களிலும் பிரபலமாக அறியப்படுகிறது. வரலாற்றில் முக்கியமான சில தகவல்களை கொண்ட இந்த பகுதிகள் முகலாய, இந்திய வரலாற்றின் சுவடுகளாக இன்றும் காட்சியளிக்கிறது.

மேடக் மாவட்டத்தின் தலைமையிடமாக திகழும் மேடக் நகரம் காகதீயர் பேரரசின் காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தது. அப்போது காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க நகரை சுற்றி ஒரு குன்றின் மீது மேதுகுர்துர்காம் எனும் கோட்டையை எழுப்பினார். இந்தக் கோட்டை உள்ளூர் மக்களால் மேதுகுசீமா என்று அழைக்கப்படுவதோடு, மேடக் நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது. இதுபோல் நிறைய இடங்கள் இந்த பகுதியில் காணப்படுகின்றன. பயணிக்கலாமா?

திருவிழாக்கு பெயர்போன மேடக்

திருவிழாக்கு பெயர்போன மேடக்

மேடக் நகரில் மிகுந்த உற்சாகத்தோடும், விமர்சையாகவும் கொண்டாப்படும் திருவிழாக்கள் அருகாமை நகரங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதுமட்டுமல்லாமல் ஆந்திராவின் அனைத்து பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுவதால் திருவிழாக்களுக்காகவே மேடக் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. அதிலும் குறிப்பாக தெலங்கானா பகுதியின் திருவிழாவாக கருதப்படும் பாதுகம்மா பாதுகா எனும் திருவிழா பெண்களினால் மட்டும் மேடக் நகரில் கொண்டாடப்படும். இந்தத் திருவிழா பாதுகம்மா என்று தெலங்கானா மக்களால் வணங்கப்படும் கௌரி மாதாவை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி சமயத்தில் நடத்தப்படும்.

J.M.Garg

சுற்றுலாவில் திளைக்கலாம் வாங்க

சுற்றுலாவில் திளைக்கலாம் வாங்க

மேடக் மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. மேடக் நகரில் அமைந்திருக்கும் சாய் பாபா கோயில் பாபாவின் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதோடு மேடக் நகருக்கு அருகில் உள்ள கொட்டம் குட்டா எனும் சிறிய கிராமத்தில் அழகிய கோயில்களும், எழில் கொஞ்சும் ஏரிகளும் அமைந்துள்ளன. இவைதவிர ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களின் வேட்டை பகுதியாக இருந்து வந்த போச்சாரம் காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

Varshabhargavi

கட்டாயம் காணவேண்டியவை

கட்டாயம் காணவேண்டியவை

மேடக் நகருக்கு வரும் பயணிகள் மஞ்சிரா ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள நிஜாம் சாகர் அணையையும், சிங்கூர் அணையையும் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. மேலும் மேடக் நகருக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் மஞ்சிரா வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயமும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இந்த சரணாலயம் முதலைகளுக்காக நாடு முழுவதும் பிரபலமாக அறியப்படுவதுடன், ஏராளமான புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாகவும் இருந்து வருகிறது.

Fazilsajeer

ஆன்மீகத்தில் அருளும் மேடக்

ஆன்மீகத்தில் அருளும் மேடக்

மேடக் நகரிலும் அதை சுற்றிலும் ஸ்ரீ சரஸ்வதி க்ஷேத்ரமு கோயில், வேலுபுகொண்ட ஸ்ரீ தும்புருநாத தேவாலயம், எடுப்பாலய துர்கா பவானி குடி போன்ற சரித்திர சிறப்பு வாய்ந்த கோயில்கள் சில இருக்கின்றன. இந்த கோயில்களாலும், இங்கு நடத்தப்படும் திருவிழாக்களாலும் மேடக் நகரம் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதோடு, மேடக் நகரம் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருவதற்கும் இந்தக் கோயில்களே முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

Myrtleship

எடுப்பாலய துர்கா பவானி குடி

எடுப்பாலய துர்கா பவானி குடி

இந்த இடத்தில்தான் மஞ்சிரா நதி ஏழு ஓடைகளாக பிரிந்து பின்பு மீண்டும் மற்றொரு பகுதியில் இணைகின்றன. இதன் காரணமாகவே 'ஏழு ஓடைகள்' என்று பொருள்படும்படி தெலுங்கு மொழியில் 'எடுப்பாலய' என்று இவ்விடம் அறியப்படுகிறது. எடுப்பாலய துர்கா பவானி குடி அமைந்திருக்கும் இடத்தில்தான் மகாபாரத காலத்தில் அர்ஜுனனின் கொள்ளுப்பேரன் ஜானமேயன் சர்பயாகம் நடத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் சிவராத்திரியின் போது நடத்தப்படும் ஜதரா எனும் திருவிழாவிற்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள்.
en.wikipedia.org

போச்சாரம் சரணாலயம்

போச்சாரம் சரணாலயம்

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும், மேடக் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் போச்சாரம் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களின் வேட்டை பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் சரணாலயமாக மாற்றப்பட்டதோடு அருகில் உள்ள போச்சாரம் ஏரியின் பெயரிலேயே போச்சாரம் சரணாலயம் என்றும் அழைக்கப்பட துவங்கியது.
wikimedia.org

கண்டு ரசிக்க

கண்டு ரசிக்க

போச்சாரம் சரணாலயத்தில் காட்டுப் பூனை, ஓநாய், சிறுத்தை, மான் போன்ற விலங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பிராமினி வாத்துகள், நீண்ட அலகு நாரைகள் உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாகவும் போச்சாரம் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. இந்த சரணாலயத்துக்கு நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

J.M.Garg

மேடக் கோட்டை

மேடக் கோட்டை

மேடக் கோட்டை காகதீயர்கள் மற்றும் குதுப் ஷாஹி காலகட்டத்தில் அதிகாரமிக்க பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் கோட்டை வளாகத்துக்குள்ளேயே குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் மசூதி ஒன்றை கட்டியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்போது அந்த 17-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த மிகப்பெரிய பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வரலாற்றுச் சிறப்பு மட்டுமின்றி தொல்பொருள் முக்கியத்துவத்தையும் மேடக் கோட்டை பெற்றிருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.

Varshabhargavi

 பப்பிகொண்டலு

பப்பிகொண்டலு

மேடக் நகருக்கு வெகு அரகில் அமைந்திருக்கும் பப்பிகொண்டலு அல்லது பப்பி குன்று, அதன் இயற்கை அழகில் காஷ்மீருக்கு இணையானது. இந்தப் பகுதியில் கோதாவரி ஆற்றினால் பிரிந்து கிடக்கும் மலைத்தொடர்களின் காரணமாக தெலுங்கு மொழியில் 'பிரிவினை அல்லது பிரித்தல்' என்று பொருள்படும்படி பப்பிகொண்டலு என்று இந்த மலைப்பகுதி அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலிருந்து பார்க்கையில் இந்த மலைத்தொடர்கள் பெண்ணின் கூந்தலில் காணப்படும் பிரிக்கப்பட்ட பின்னல்களை போல காட்சியளிக்கும்.

aptdc.gov.in

எப்படி செல்வது

எப்படி செல்வது


தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மேடக் பகுதி. இந்த தூரத்தை நாம் அதிகபட்சமாக 2.30 மணி நேரத்தில் கடக்கலாம். ஹைதராபாத்திலிருந்து மேடக் செல்ல இரண்டு வெவ்வேறு வழித்தடங்கள் உள்ளன. சங்காரெட்டி வழியாக ஒரு தடமும், நர்சாபூர் வழியாக இன்னொரு வழியும் உள்ளது. ஹைதராபத்திலிருந்து பேருந்து, வாடகை வண்டிகள் ஆகியவற்றில் எளிதில் பயணிக்கலாம்.

Read more about: travel telangana trekking

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்