» »மேட்டூர் அணை கட்டாமல் இருக்க 1 லட்சம் பவுன் நஷ்ட ஈடு கேட்ட விவசாயிகள்! #kaviri

மேட்டூர் அணை கட்டாமல் இருக்க 1 லட்சம் பவுன் நஷ்ட ஈடு கேட்ட விவசாயிகள்! #kaviri

Written By: Udhaya

மேட்டூர் அணை என்பது தமிழகத்தின் வட மாவட்ட விவசாயிகளை வளமாக்கும் காவிரியின் மேல் கட்டப்பட்ட ஒரு அணை ஆகும். இப்போது காவிரி பிரச்சனையில் தமிழகமே பொங்கி எழுந்திருக்கும் இவ்வேளையில் நம்மில் எத்தனை பேருக்கு இந்த காவிரி பற்றிய அதன் மீது கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை பற்றிய வரலாறு தெரியும் என்பது கேள்விக் குறி தான். தமிழர்களாகிய நாம் உணர்ச்சிப் பெருக்கோடு போராடுவதற்கு முன்பு சில வரலாறுகளை நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். காவிரி ஆறு பாசனம் மட்டும் வாழ்வாதாரத்துக்கானது மட்டுமல்ல... சுற்றுலாவுக்கும் தான். ஒக்கேனக்கலில் ஆரம்பித்து வங்கக் கடலில் கலக்கும் வரை பல்வேறு இடங்களில் நமக்கு காவிரி சுற்றுலா அம்சங்களை ஏற்படுத்தி உள்ளது. காவிரியின் முக்கிய அம்சம் மேட்டூர் அணை.

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களுக்கு இந்த புத்தாண்டு வாரி வழங்கப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் எனும் ஊரில் கட்டப்பட்ட அணை ஆதலால் இது மேட்டூர் அணை என்று அழைக்கப் படுகிறது. இந்த அணையைக் கட்டியவர் பெயர் ஸ்டேன்லி.. இவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இதற்கு ஸ்டான்லி என்ற பெயர் வைத்து இம் மாவட்ட மக்கள் போற்றி வருகின்றனர். இந்த அணையை கட்டுவதற்குள் படாத பாடு பட்டிருக்கின்றனர் அக் காலத்து விவசாயிகள். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கும் மைசூர் சமஸ்தானத்தினருக்கும் நடைபெற்ற போராட்டம் பற்றியும், மேட்டூரின் சுற்றுலா பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

உலக சாதனை நிகழ்த்திய மேட்டூர்

உலக சாதனை நிகழ்த்திய மேட்டூர்


மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டிருந்த போது ஒரு சாதனைக்கு சொந்தமாக இருந்தது. இந்த அணை ஆசியாவிலேயே உயரமானதும், உலகிலேயே மிகப்பெரியதுமாகும். இந்த அணையின் அதிகபட்ச உயரம் 214 அடி ஆகும். இதன் அகலம் 171 அடி ஆகும். இதன் அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி. மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ண ராஜா சாகர் அணையிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணையில் 2 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இதில் முதல் நீர்மின் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். இரண்டாவது இந்தியா உருவானபின்பு கட்டப்பட்டது.

Praveen Kumar.R

கட்டுமானம்

கட்டுமானம்

மேட்டூர் அணையை கட்டும் பணி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. உங்களுக்கு புரியும்படியாக விளக்கவேண்டும் என்றால் ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு தளம்போல, இல்லை அதனினும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது.

ஒன்பது ஆண்டுகாலமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களின் வியர்வையில் உருவானது இந்த மேட்டூர் அணை. இந்த அணையை கட்ட உதவியவர் கவர்னர் ஸ்டேன்லி ஆவார். அவரையே கொண்டாடும் அளவுக்கு தமிழக மக்கள் எவ்வளவு பெருந்தன்மை வாய்ந்தவர்கள். ஸ்டான்லி பெயரையே அந்த அணைக்கும் வைத்தனர் மக்கள். பின் இது அந்த ஊரின் பெயரால் மேட்டூர் அணை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

Yuvalatha L

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்


மேட்டூர் அணையின் 124 அடி உயரத்தில் 120 அடி அளவுக்கு நீரைத் தேக்கி வைக்க அனுமதிக்கப்படுகிறது. அதற்குபின் பாசனத்துக்காகவும், உபரியாகவும் நீர் வெளியேற்றப்படும். மேலும் மின்சாரம் தயாரிக்கவும் இந்த நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையைப் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்ட மாக காட்சி அளிக்கும்.

Vijay S

மேட்டூர் அணை கட்டதொடங்கப்பட்ட ஆண்டு

மேட்டூர் அணை கட்டதொடங்கப்பட்ட ஆண்டு

மேட்டூர் அணை கட்ட நிறைய இடங்கள் கைப்பற்றப் பட வேண்டி இருந்தது. அதாவது, மேட்டூர் நீர்த் தேக்கத்தில் தற்போதைய பல இடங்கள் மக்கள் வாழ்ந்த பகுதிகள் தான். நிறைய கோயில்களும் இருந்தன. இந்த அணை கட்டப்பட்டால் நிறைய இடங்களை கைப்பற்ற வேண்டி வரும். அங்கு வாழ்ந்து வந்த மக்கள் நிறைய பேரை ஊரை காலி செய்யச் சொல்லி அனுப்ப வேண்டி இருந்தது. மேட்டூர் அணை வறண்டிருக்கும் போது பாருங்கள் எத்தனை கோயில்கள் இருக்கிறது என்று. ஆனால் அதையும் பொருட்படுத்தாது வாழ்வாதாரத்துக்காக அந்த மக்கள் பலர் தங்கள இடங்களை தியாகம் செய்ய துணிந்து முன் வந்தனர். அரசு இழப்பீடும் வழங்கியது. பின் கட்டுமான பணிகள் தொடங்கின. 1925ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டப்படுகிறது.

Saravankm

மேட்டூர் அணைக்காக உருவாக்கப்பட்டவை

மேட்டூர் அணைக்காக உருவாக்கப்பட்டவை

மேட்டூர் அணை உருவாக்க கற்கள் தேவை. தொலை தூரத்திலிருந்து எடுத்து வரமுடியாத நிலை. இதனால் இரண்டு பெரிய மலைகள் உடைக்கப்பட்டது. கற்பாறைகளை முழுவதுமாக உடைத்து அதை அணை கட்ட பயன்படுத்தினார்கள். மேலும் இதற்கென தனி ரயில் பாதை உருவாக்கப்பட்டு, அதில் பொருள்கள் கொண்டுவரப்பட்டன. மேலும் சாலைகளும் போடப்பட்டது.

Ganeshalan

கொள்ளளவு

கொள்ளளவு

இந்த அணையின் கொள்ளளவு 93.4டிஎம்சி ஆகும். ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கன அடி ஆகும்.

Gopal Venkatesan

1801ம் ஆண்டிலேயே கட்டப்பட வேண்டிய அணை

1801ம் ஆண்டிலேயே கட்டப்பட வேண்டிய அணை

இந்த அணை 1801ம் ஆண்டிலேயே கட்டப்பட திட்டமிடப்படவேண்டியது. ஆனால் பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனி எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது மைசூர் சமஸ்தானம். அந்த காலத்தில் மிகத் தீவிரமாக இந்த திட்டத்தை மைசூர் ஆட்சியாளர்கள் எதிர்த்தனர். பாருங்கள் 1801ம் ஆண்டிலேயே காவிரி பிரச்சனை தொடங்கியிருக்கிறது. இருநூறு ஆண்டுகால பிரச்சனை இது. ஆனால் அதன்பிறகு நடந்தது வேறு..

Pavalarvadi

சி பி ராமசாமி அய்யா

சி பி ராமசாமி அய்யா

திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் ராமசாமி ஐயாவிடம் தஞ்சை நெற்களஞ்சியத்தின் விவசாயிகள் கூட்டாக ஒரு கோரிக்கையை வைத்தனர். அதன்படி நடக்க பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். இதற்கும் மைசூரு ஆட்சியாளர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அணை கட்டாமல் இருப்பதால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விளைச்சல் நிலம் பாழாகிறது என்று அதற்கு நஷ்ட ஈடு கேட்டனர் விவசாயிகள்.

Praveen Kumar.R

 அதிர்ந்தது மைசூர் அரசு...

அதிர்ந்தது மைசூர் அரசு...


அந்த விவசாயிகள் கேட்ட நஷ்ட ஈடு என்ன தெரியுமா? 1 லட்சம் பவுன் தங்கம். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக அந்நாளில் அந்த விவசாயிகள் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டனர். அந்நாட்களில் 1 பவுன் தங்கம் 30ரூபாய் மட்டுமே. இதனால் வழிக்கு வந்தது மைசூர் அரசு. 30 லட்சம் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு பதில், அணை கட்ட சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகுதான் அணை கட்டப்பட்டது. பாருங்கள். ஒரு காலத்தில் வெள்ளத்தை தடுக்க அணை கேட்டோம். இப்போது அணையில் தேக்க அல்ல விவசாயத்துக்கே தண்ணீர் கேட்கிறோம்.

Praveen Kumar

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

மேட்டூர் அணையே சுற்றுலாவுக்கு தகுந்த இடம்தான். இங்கும் பொழுதை கழிக்க மக்கள் நிறைய பேர் வருகை தருகின்றனர். ஆனால் தண்ணீர் இல்லை என்பதால் தமிழ்நாடே வருத்தத்துக்கு உள்ளாகி உள்ளது. மேலும் இதனைச் சுற்றி நிறைய இடங்கள் சுற்றுலா அம்சங்களுடன் திகழ்கின்றன.

45 கிமீ தொலைவில் ஏற்காடு மலை அமைந்துள்ளது

40கிமீ தொலைவில் குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.

76கிமீ தொலைவில் ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

50கிமீ தொலைவில் சேலம் அமைந்துள்ளது.

100கிமீ தொலைவில் கல்ராயன் மலை அமைந்துள்ளது.

Read more about: travel tamilnadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்