Search
  • Follow NativePlanet
Share
» »அமெசானுக்கே ஈடான இந்தியக் காடு எங்க இருக்கு தெரியுமா ?

அமெசானுக்கே ஈடான இந்தியக் காடு எங்க இருக்கு தெரியுமா ?

அமெசான் காடுகளின் அடர்த்திக்கு ஈடாக நம் நாட்டுக்கே பெருமையளிப்பதாக இருக்கும் இந்தியக் காடு எங்க இருக்குன்னு தெரியுமா ?

மிசோரம் மாநிலம் எல்லா இயற்கை அம்சங்களையும் தன்னுள் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அரிதான தாவர வகைகள், வித்தியாசமான உயிரினங்கள், பிரமிக்க வைக்கும் மூங்கில் காடுகள், சலசலவென்று விழும் அருவிகள், பசுமையான வயல்கள் என்று காணும் இடமெல்லாம் இயற்கையின் ரம்மிய காட்சிகளுடன் இம்மாநிலம் நம் நெஞ்சை அள்ளுகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள் நிரம்பிய இம்மாநிலத்தில் கலடான் எனும் பெரிய ஆறு பூமியை செழிப்பாக்கி ஓடுகிறது. மிசோரம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பலா ஏரி, டம் டில் ஏரி அல்லது கடுகு ஏரி போன்றவற்றை குறிப்பிடலாம். இம்மாநிலத்தின் தலைநகரான அய்சால் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. சரி வாருங்கள், இந்த அய்சால் மற்றும் இதற்கடுத்த சுற்றுலாத் தலங்கள் நிறைந்த சம்பைக்கு சுற்றுலா சென்றால் எங்கெல்லாம் சென்று ரசிக்கலாம் என பார்க்கலாம்.

முர்லன் தேசியப்பூங்கா

முர்லன் தேசியப்பூங்கா


மலை முகடுகள் நிறைந்த இண்டோ- மியான்மர் எல்லையில், சுமார் 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது முர்லென் தேசியப்பூங்கா. மிசோராமின் புகழ்பெற்ற பூங்காக்களில் ஒன்றான இங்கு பல வகையான அருகிவரும் உயிரினங்கள் உள்ளது. தும்குயாய் காம் எனப்படும் பெரிய குகையும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லைங்க, காம்புய் என்ற இந்தியாவின் மிகப்பெரிய செங்குத்துப் பாறையும் இங்கதான் இருக்கு.
இக்காடுகளின் அடர்த்தி அமேஜான் காடுகளுக்கு ஈடாக இருப்பது இந்தியாவிற்கே பெருமையளிப்பதாக உள்ளது. இங்கு 15 வகையான விலங்கினங்களும், 150 வகை பறவை இனங்களும், பல வகை மூலிகளைகளும் இருப்பது இப்பூங்காவின் மேலும் ஒரு சிறப்பாகும்.

A. J. T. Johnsingh

குங்காவ்ர்ஹி புக்

குங்காவ்ர்ஹி புக்


மிசோராமின் மிகப்பெரிய குகைகளில் குங்காவ்ர்ஹி குகை ஒன்றாகும். ஃபர்கான் மற்றும் வாபய் கிராமங்களுக்கு இடையே இந்த குகை அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஆவிகள், குங்காவ்ர்ஹி என்ற ஒரு பெண்ணை கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது. நதிரா என்ற வீரனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை கடத்திய ஆவிகளிடமிருந்து அவன் தன் காதலியை மீட்டான். அதன் பின் இந்தக் குகை அந்த பெண்ணின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சம்பையில் இருந்து சுற்றுலா பேருந்துகள் மூலம் இலக்கை அடையலாம்.

Coolcolney

ஹமூய்ஃபாங்

ஹமூய்ஃபாங்


அய்சால்-யில் அமைந்துள்ள ஹமூய்ஃபாங் எனும் இந்த சிகரம் மிசோரம் பகுதியின் மிக முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது. இந்த மலைப்பகுதி கன்னிமை மாறாத தூய்மையான காட்டுப்பகுதிகளால் நிரம்பியுள்ளது. மிசோ இன தலைவர்களில் கூர்மையான பாதுகாப்பில் இந்தப்பகுதி வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது. இந்த சிகரத்தின் உச்சியில் ஹமூய்ஃபாங் டூரிஸ்ட் ரிசார்ட் விடுதி அமைந்துள்ளது. இது மிசோரம் மாநில சுற்றுலாவளர்ச்சித்துறையின் மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த விடுதியிலிருந்து பயணிகள் சுற்றிலும் பரவிக்கிடக்கும் அற்புதமான இயற்கை எழில் அம்சங்களை பார்த்து ரசிக்கலாம். உயர்ந்தோங்கி நிற்கும் சிகரங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற மலைக்காட்சிகள் போன்றவற்றை இப்பகுதியிலிருந்து பார்த்து ரசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணையில்லை. சிகரத்தை ஒட்டியுள்ள புல்வெளிப்பகுதிகளில் பயணிகள் பிக்னிக் சிற்றுலா மேற்கொண்டு உற்சாகமாக பொழுதுபோக்கலாம். கூடாரத்தங்கல் போன்ற பொழுதுபோக்குகளுக்கும் இப்பகுதி ஏற்றது. வருடந்தோறும் இந்த சிகரப்பகுதியில் அந்தூரியம் திருவிழா மற்றும் தல்ஃபாவாங் எனும் திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சிகரத்தை ஒட்டி அமைந்திருக்கு பழமையான கிராமப்பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்யலாம். ஹமூய்ஃபாங் மலைச்சிகரம் அய்சால் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வாடகைக் கார்கள் மூலம் பயணிகள் இந்த இடத்துக்கு எளிதில் வந்தடையலாம்.

Bodhisattwa

ருங்டில் ஏரி

ருங்டில் ஏரி


அய்சால் மாவட்டத்தில் உள்ள சுவாங்புயிலான் எனும் கிராமத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கம்பீரமான ருங்டில் ஏரி எனப்படும் இரட்டை ஏரி உள்ளது. ஏரிப்பகுதி முழுதும் ரம்மியமான இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பியுள்ளன. ஒரு காலத்தில் இந்த ஏரி தலத்தில் ஏராளமான கௌதாரி பறவைகள் வசித்திருந்தன. இன்றும்கூட பறவை ரசிகர்கள் இந்த ஏரிப்பகுதியில் பலவகையான பறவைகளை பார்த்து மகிழலாம். ருங்டில் ஏரியானது ஒரு சிறிய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டு காட்சியளிக்கும் இரண்டு ஒரே மாதிரியான ஏரிகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. இருப்பினும் பூமிக்கு கீழே இரண்டு ஏரிகளும் இணைந்திருப்பதாகவே கருதப்படுகிறது. ஏரியைச்சுற்றி காணப்படும் வனப்பகுதியில் பசுமை மாறாக்காடுகள் நிறைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் கரடி, மான், புலி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வசிக்கின்றன. இந்த ருங்டில் ஏரிப்பகுதியில் பிக்னிக் மற்றும் கூடாரவாசம் போன்ற பொழுதுபோக்குகளிலும் பயணிகள் ஈடுபடலாம். அய்சால் நகரத்திலிருந்து டாக்சிகள் அல்லது நகரப்பேருந்துகள் மூலம் இந்த ஏரியை வந்தடையலாம்.

Dan Markeye

பரா பஜார்

பரா பஜார்


நேரம் இருந்தால் இந்த பரா பஜார்;ககு தவறாமல் சென்று வரலாம். இந்த பிரசித்தமான மார்க்கெட் பகுதி அய்சால் நகரத்தின் முக்கியமான ஷாப்பிங் மார்க்கெட்டாக அமைந்துள்ளது. நகரத்தின் மிக முக்கியமான மையக்கேந்திரமாக இந்த மார்க்கெட் இயங்குகிறது. குறுகலான சாலைகளை கொண்டுள்ள இந்த மார்க்கெட் பகுதியில் இருபுறமும் சிறு கடைகள் ஏராளமாக காணப்படுகின்றன. இவற்றில் பாரம்பரிய உடைகள், கைவினைப்பொருட்கள், உணவுப்பொருட்கள், தானிய வகைகள் மற்றும் பலவகையான பொருட்கள் விற்கப்படுகின்றன. பரபரப்பான இந்த மார்க்கெட்டின் ஒரு பகுதியில் ஆடைகள் மற்றும் அழகுப்பொருட்கள் போன்ற நாகரிகப்பொருட்களும் மறுபுறத்தின் மீன், இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்கப்படுவதையும் பார்க்கலாம். இங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள் யாவருமே பாரம்பரிய மிசோ உடைகளை அணிந்தவர்களாக காட்சியளிக்கின்றனர். அய்சால் நகரத்தின் கலாச்சார அடையாளங்களை இந்த மார்க்கெட் பகுதியில் பயணிகளால் நன்கு புரிந்து கொள்ள முடியும். அய்சால் நகரத்தின் மையப்பகுதியில் இந்த பரா பஜார் அமைந்துள்ளது. உள்ளூர் டாக்சிகள் மூலம் பயணிகள் இந்த மார்க்கெட்டிற்கு வரலாம்.

Coolcolney

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X