Search
  • Follow NativePlanet
Share
» »திராவிட நாட்டில் தனி முத்திரை பதித்த ஆந்திரா... அப்படி அங்க என்னதான் இருக்கு..!

திராவிட நாட்டில் தனி முத்திரை பதித்த ஆந்திரா... அப்படி அங்க என்னதான் இருக்கு..!

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதன் பின் ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்னூல், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், குண்டூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. பிரிக்கப்பட்ட ஆந்திராவிற்கும் தெலங்கானாவிற்கும் ஹைதராபாத் மாநகரமே தலைநகரமாக செயல்படுகிறது. திராவிட நாடு என்ற அடையாளத்தைக் கொண்டுள்ள தென்னிந்தியாவில் ஆந்திரா தனக்கென தனிப் பெருமையையும் கொண்டுள்ளது. அப்படி என்னதான் இங்க அருக்கு தெரியுமா ?.

நல்கொண்டா

நல்கொண்டா

ஆந்திராவில் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில், நல்கொண்டா மாவட்டமும் ஒன்று. கருப்பு மலை என்ற பொருளைத்தரும் ‘நல்ல' மற்றும் ‘கொண்டா' எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர் பிறந்துள்ளது. உள்ளூர் மக்களால் கருப்பு மலை எனப்படும் இந்த நகரம் ஆதியில் ‘நீலகிரி' என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.

Sumanthk

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

நல்கொண்டாவிற்கு உட்பட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்களை காணப்படுகின்றன. அதில், மட்டபள்ளி, பில்லலமரி, ராஜீவ் பார்க், பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள், பனகல் கோவில், நந்திகொண்டா, லதீஃப் ஷேஃப் தர்க்கா, கொல்லன்பாகு ஜெயின் கோவில், ரச்சகொண்டா கோட்டை, மெல்லசெருவு, தேவரகொண்டா மற்றும் புவனகிரி கோட்டை போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் இடம் பெற்றுள்ளன.

Devadaskrishnan

மட்டபள்ளி

மட்டபள்ளி

நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த மட்டபள்ளி கிராமம் கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு நரசிம்மஸ்வாமி கோவிலுக்காக இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியில் நடுவே வீற்றிருக்கும் இந்த கிராமத்தை ஒட்டியே புனிதமான கிருஷ்ணா ஆறு ஓடுவது கூடுதல் சிறப்பாகும். எனவே ஆற்றங்கரை கிராமத்துக்கே உரிய அமைதி இயற்கை எழில் போன்றவற்றை இது வாய்க்கப்பெற்றுள்ளது.

Nvvchar

பில்லலமரி

பில்லலமரி

நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம் பில்லலமரி. காகதீய வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கோவில்களுக்கு இந்த கிராமம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய கிராமத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணியை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த அழகிய கோவில்கள் வீற்றுள்ளன.

Adityamadhav83

ராஜீவ் பார்க்

ராஜீவ் பார்க்

மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் அழைக்கப்படும் இந்த பூங்கா நல்கொண்டா நகரத்திலுள்ள புகழ் பெற்ற பூங்காவாகும். முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் இது உள்ளூர் மக்களாலும் அதிக அளவில் விரும்பி பயணம் செய்யப்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் வீற்றுள்ள இது நன்றாக பராமரிக்கப்பட்டு காண்போரை கவரும் வகையில் உள்ளது.

C.Chandra Kanth Rao

பாணிகிரி பௌத்த தலங்கள்

பாணிகிரி பௌத்த தலங்கள்

நல்கொண்டா நகரத்திலிருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பாணிகிரி பௌத்த தலம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநில அரசின் தொல்லியல் துறையால் இந்த புராதன தலம் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாணிகிரி தலத்தில் ஒரு பெரிய வளாகம் போன்ற கட்டுமானம் காணப்படுகிறது. இதில் ஒரு பெரிய ஸ்தூபி மற்றும் ஸ்தூபங்களை உள்ளடக்கிய இரண்டு பெரிய கூடங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

Adityamadhav83

பனகல் கோவில்

பனகல் கோவில்

பனகல் கோவில் என்றழைக்கப்படும் இந்த பனகல் சோமேஸ்வரா கோவில் பனகல் எனும் கிராமத்தில் வீற்றிருக்கிறது. இந்த கிராமம் நல்கொண்டா நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருந்து 101 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பனகல் கிராமம் உள்ளது. வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இந்த கிராமம் புராதன காலத்தில் காகதீய ராஜ வம்சத்தினரின் தலைநகரமாக செழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதாக சொல்லப்படுகிறது.

Ankur P

நந்திகொண்டா

நந்திகொண்டா

கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த நந்திகொண்டா ஆகும். நாகர்ஜுனசாகருக்கு வெகு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது. விஜயபுரி எனும் சிறுநகரத்திலிருந்து இந்த நந்திகொண்டா கிராமத்திற்கு எளிதாக சென்றடையலாம். புராதன காலத்தில் இஷவாஹு எனும் ராஜவம்சத்தினர் ஆண்ட ராஜ்ஜியமே இந்த விஜயபுரி ஆகும்.

Vinay332211

லதீஃப் ஷேஃப் தர்க்கா

லதீஃப் ஷேஃப் தர்க்கா

நல்கொண்டா பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த லதீஃப் ஷேஃப் தர்க்கா ஆகும். ஒரு முஸ்லிம் யோகிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தர்க்காவிற்கு எல்லா மதப்பிரிவுகளை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். இரண்டு மலைகளைக்கொண்ட ஒரு மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தர்க்கா மலையேற்ற ஆர்வலர்கள் மற்றும் நடைப்பயணிகள் போன்றோரையும் ஈர்க்கிறது.

Bhaskaranaidu

கொல்லன்பாகு ஜெயின் கோவில்

கொல்லன்பாகு ஜெயின் கோவில்

நல்கொண்டா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கொல்லன்பாகு ஜெயின் கோவில் ஹைதராபாத் நகரிலிருந்து 79 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஜைனக்கோவிலான இது ஜைனம் அதிகம் பின்பற்றப்படாத ஆந்திர பூமியில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது.

Prayash Giria

ரச்சகொண்டா கோட்டை

ரச்சகொண்டா கோட்டை

எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டியுள்ளனர். இருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

Ylnr123

மெல்லசெருவு

மெல்லசெருவு

மெல்லசெருவு எனும் இந்த கிராமம் நல்கொண்டா மாவட்டத்தில் நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமம் ஒரு ஓடையின் மூலம் விஜயவாடா நகரத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சுவாரசியமான அம்சமாகும்.

Adityamadhav83

புவனகிரி கோட்டை

புவனகிரி கோட்டை

திரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது.

BALU11

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more