» »பாண்டியன் கட்டிய கடைசிக் கோவில் எது தெரியுமா ?

பாண்டியன் கட்டிய கடைசிக் கோவில் எது தெரியுமா ?

Written By: Sabarish

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் மத்தியில்வரை தமிழகத்தில் மாபெரும் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகிறது. சோழர் காலத்தைப் போலவே பாண்டியர்களும் தங்களுக்கென தனிப் பாணியில் கோட்டைகளையும், கோவில்களையும் கட்டினர். இருப்பினும், பாண்டிய மன்னர்களின் இறுதி கால ஆட்சியின் போது பாண்டியர்களின் கட்டிட நுட்பத்தில் திராவிட கட்டிடக் கலையின் தாக்கம் அதிகரித்தது. அவ்வாறு கடைசி பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இன்று எப்படி, எங்கே உள்ளது என பார்க்கலாம் வாங்க.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விருதுநகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் நத்தம்பட்டி வழியாகப் பயணித்தால் ராஜபாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலை அடையலாம். மதுரையில் இருந்து 93.6 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.

Nicolas Vollmer

ஆதி வழிவிடும் விநாயகர்

ஆதி வழிவிடும் விநாயகர்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ளது ஆதி வழிவிடும் விநாயகர் ஆலயம். இது சுமார் 7 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது.

Ms Sarah Welch

சிறப்பு

சிறப்பு


மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் இக்கோவிலில் வழக்கமாகப் பிற கோவில்களில் கொண்டாடுவதைப் போலவே விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பிள்ளையார்பட்டியைப் போலவே இங்கும் தினமும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது.

Sid Mohanty

தலவரலாறு

தலவரலாறு


தமிழகத்தில் மத்தியில் ஆட்சியினை மேற்கொண்ட பாண்டியர்களின் தேசம் சோழ தேசத்திற்கு தெற்கிலும், சேரதேசத்திற்கு கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும். இந்த பாண்டியதேச பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் காணப்படும். அவ்வாறே இப்பகுதியை ஆட்சிசெய்த கடைசி பாண்டிய மன்னரால் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Saranya Ghosh

பிரசவம் பார்த்த சிவன்..!

பிரசவம் பார்த்த சிவன்..!


இயற்கை சீற்றங்களால் முழுமையாகச் சிதிலமடைந்தது ஆதி வழிவிடும் விநாயகர் கோவில். இக்கோவில் இருந்த காட்டு வழியாகக் கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுகொண்டிருக்கையில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பெண்ணின் கண்முன் அரவது தாய் போன்ற தோற்றத்தில் தோன்றிய சிவன் பெண்ணிற்கு பிரவம் செய்து காத்தார். இதனையறிந்த மக்கள் அந்த சிதிலமடைந்து காணப்பட்ட கோவிலை சீரமைத்தனர்.

G41rn8

நடைதிறப்பு

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலின் நடை திறந்திருக்கும்.

Ajayreddykalavalli

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


விருதுநகர், ராஜபாளையம் பயணிக்கிறீர்கள் என்றால் அருகில் உள்ள கருப்பசாமி கோவில், சாஸ்தா கோவில், சாஸ்தா கோவில் அணை, ஆதி புத்திரகொண்டா, ஐயனார் கோவில் உள்ளிட்டவற்றையும் சுற்றிப் பார்த்து வாங்க.

Arunankapilan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து செங்கோட்டை எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர் கோவில் எக்ஸ்பிரஸ், மும்மை சிஎஸ்எம்டி, சென்னை எக்மோர், தும்பரம் - கொல்லம் சிறப்பு ரயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செல்லை சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ராஜபாளையத்திற்கு செல்லும்.

Scintillatingstuffs

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்