Search
  • Follow NativePlanet
Share
» »சலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..!

சலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..!

திருச்சிக்கு சுற்றுலா என்றாலே நமக்கு நினைவு வருவது பண்டைய கால கோவில்களும், மலைக் கோட்டையுமே. அதனைஹயம் கடந்தால் அடுத்ததாக பெரும்பாலானோருக்கு தெரிந்தது கல்லனை. இவையெல்லாம் தவிர்த்து இந்த முறை திருச்சி செல்லும் போது புதுசா எங்கையாவது சிற்றுலா போகனும்னு ஆசைப்படுற பயணிகளுக்கு ஏற்ற தலங்களும் இங்கே இருக்கு பாஸ். சரி வாங்க, திருச்சியுல எங்கவெல்லாம் ஜாலியா சின்ன டூர் போகலாம்னு பார்க்கலாம்.

பொன்னணியாறு அணை

பொன்னணியாறு அணை

பொன்னணியாறு அணை திருச்சிக்கு தெற்கே மணப்பாறையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பெருமாள் மலை மற்றும் செம்மலை நடுவே கட்டப்பட்டுள்ள இந்த அணை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு மலை ஏறுதல், சுற்றுச்சூழல் முகாம், இயற்கை சிகிச்சை மையம் மற்றும் மீன்பிடிப்பு போன்ற பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.

FlickreviewR

புளியஞ்சோலை

புளியஞ்சோலை

திருச்சியில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடம் புளியஞ்சோலை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்ற மரங்களும் புளியந்தோப்புகளும், சலசலக்கும் சிறு ஓடைகளும் குளுமையான வானிலையும் புளியஞ்சோலைக்கு எழில் சேர்க்கின்றன. இந்த மலைப் பகுதியின் மேலேயே பிரசிதிபெற்ற ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. புளியஞ்சோலையிலிருந்து ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு 5 மணிநேர நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். தூரத்தில் வரும்போதே, சலசலவென்று தண்ணீரின் நம்மை வரவேற்கிறது. சுற்றிலும் மலை, மலை நடுவே குட்டிக் குட்டி பாறைகளின் மீதேறி ஓடும் நதி. மனதைக் கொள்ளை கொள்ளும் சுற்றுலாத் தலமான பூஞ்சோலையில் இந்த இயற்கை இன்பத்தை அனுபவிக்காமல் திருச்சியை விட்டு திரும்புவது துர்தஷ்ட்டம்.

Rajeshodayanchal

அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

திருச்சி அரசு அருங்காட்சியம் 1983ம் ஆண்டு ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1997ல் இது டவுன் ஹால் வளாகத்தில் உள்ள நாயக்கர்களின் ராணி மங்கம்மாள் தர்பார் ஹாலுக்கு மாற்றப்பட்டது. ஏறத்தாழ 2000 பொருட்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இங்கு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காலத்து பொருட்கள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள், கற்சிலைகள், பழங்கால ரூபாய் நோட்டுகள், மன்னர் காலத்திய போர்க் கருவிகள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக இயங்கும் இந்த அருங்காட்சியத்திற்கு குழந்தைகளுடன் தாராளமாகச் சென்று வரலாமே.

Mrsas1

பச்சைமலை

பச்சைமலை

திருச்சி துறையூர் வழியாக 86 கிலோ மீட்டர் பயணித்தால் கொல்லிமலையை ஒட்டிய வனப்பகுதியான பச்சைமலையை அடையலாம். இந்த மலைத்தொடர் பழங்குடியின மக்களின் வாழ்விடமானவும் கலாச்சார உறைவிடமாகவும் இன்று வரை திகழ்வது வியப்பான ஒன்றுதான். இந்த மலைத்தொடர் தென்பரநாடு, கோம்பைநாடு, ஆதிநாடு மற்றும் வன்னாடு போன்ற பல சிறு பகுதிகளை தன்னுள் கொண்டுள்ளது. பச்சை மலைத்தொடர் மலை ஏறுவதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் வன விலங்குகளை ரசிப்பதற்கும் ஏற்ற இடம் என்பதால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச விரும்பிகள் அதிகளவில் சுற்றுலா வருவது வழக்கம். இந்த மலையின் அடிவாரத்தில் மயிலூத்து என்னும் அருவியும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Lavenderguy

நத்தர்ஷாவின் தர்கா

நத்தர்ஷாவின் தர்கா

நத்தர்வலி என்று அழைக்கப்படும் இந்த மசூதி திருச்சியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலையில் மெயின் கார்டு கேட் அருகில் அமைந்துள்ளது. இந்த தர்காவின் அழகிய குவிமாடம் இந்திய சாராசெனிக் கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டு உள்ளது. உலகிலுள்ள சிறந்த இஸ்லாமிய குருமார்களின் பாபா நாதர்வாலிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அவர் சுல்தானாக இருந்த போதும், அல்லாவின் போதனைகளைப் பரப்பிட தன் பதவியைத் துறந்து தன் சகோதரரை சுல்தானாக முடிசூட்டி விட்டு புனித பயணம் மேற்கொண்டார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். திருச்சியில் உள்ள பூந்தோட்டத்தில் தன் புனித சேவையைத் தொடர்ந்தார். இவருடைய உடல் முன்னொரு காலத்தில் ஈஸ்வரன் கோவிலாக இருந்த இடத்தில் ஒரு அறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aavindraa

நிவாசநல்லூர் கோரங்கநாதர் கோவில்

நிவாசநல்லூர் கோரங்கநாதர் கோவில்

பல்லவ மன்னன் கட்டிய நிவாசநல்லூர் கோரங்கநாதர் கோவில் திருச்சிலிருந்து சேலம் செல்லும் வழியில் காவிரிக்கரை ஓரம் அமைந்துள்ளது. இது முற்கால சோழர்களின் கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இந்தக் கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனால் கட்டப்பட்டதாகும். இதனாலேயே இத்தலம் அமைந்துள்ள பகுதி மகேந்திரமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இது 50 அடி உயர இரண்டு விமானங்களைக் கொண்ட கிழக்கு நோக்கி அமைந்த கோவிலாகும். இந்தக் கோவிலின் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல்லவர்களின் கலைநுட்பத்திற்குச் சான்றாக உள்ளது.

Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more