Search
  • Follow NativePlanet
Share
» »அந்தமான் அருகே இப்படி ஒரு மர்மம் நிறைந்த திகில் தீவா..!

அந்தமான் அருகே இப்படி ஒரு மர்மம் நிறைந்த திகில் தீவா..!

அந்தமானில் கடற்கரைளும், சதுப்பு காடுகளும் கொண்ட தீவுகள் தெரியும். ஆனால், இவற்றைக் கடந்து மாபெரும் வரலாற்று பின்னனி கொண்ட ஒரு மர்மம் நிறைந்த தீவு இருப்பது தெரியுமா?.

வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும், இந்தியாவிற்கு உரிய அந்தமான் நிகோபார் தீவுகள் 572 வெப்பமண்டல தீவுகளின் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குழுவாகும். இதில் 38 மட்டுமே தற்போது உயிரூட்டத்துடன் உள்ளது. இந்தியாவை விட தென்கிழக்கு ஆசியாவை நெருக்கமாகக் கொண்டு அமைந்திருக்கும் இத்தீவுகள் கடற்கரை, வளர்ந்து வரும் கடல் வாழ்க்கை, பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு காடுகளைக் கொண்டுள்ளது. இது அனைவரும் அறிந்ததே. ஆனால், இவற்றை எல்லாம் கடந்து மாபெரும் வரலாற்று பின்னனியும், பல மர்மங்களையும் உள்ளடக்கிய ஒரு பகுதியும் இத்தீவுடன் ஒட்டியே இருப்பது தெரியுமா?.

காலனித்துவ குடியேற்றம்

காலனித்துவ குடியேற்றம்


அந்தமான் தீவுகளில் ஒன்று ராஸ் தீவு. 19-ஆம் நூற்றாண்டில் போது இந்தியாவில் பிரிட்டிஷ் குடியேற்றத்தின் போது எஞ்சிய இடிபாடுகள் நிறைந்த பகுதி தான் இது. 1940-களில் கைவிடப்பட்ட ராஸ் தீவு தற்போது இயற்கையில் பிடியில் உள்ளது. இன்றும், பிரிட்டிஸ் காரர்களின் லாவிஸ் பங்களாக்கள், ஒரு பெரிய தேவாலயம், கல்லறை போன்றவற்றை காண முடிகிறது.

Kotoviski

தனிமைப்படுத்தப்பட்ட தண்டனை காலனி

தனிமைப்படுத்தப்பட்ட தண்டனை காலனி


1857 ஆம் ஆண்டில், ஒரு எதிர்பாராத இந்திய எழுச்சியின் போது எதிர்வினையாற்றிய பிரிட்டிஷ் பேரரசு, நாட்டில் மக்களைத் திரட்டும் போராட்டத் தலைவர்களை அடக்கவும், அவர்களுக்கு தண்டனை வழங்கவும் காலனித்துவ இடமாக இந்த தீவுகளை தேர்ந்தெடுத்தது. பிரிட்டிஷார்கள் முதன்முதலில் 1858-ஆம் ஆண்டில் 200 இந்திய கைதிகளுடன் வந்து, அவர்களை கடும் சித்ரவை செய்தது. அப்போது தப்பிக்க முயற்சித்த இந்தியாவின் பொதுமக்களும், கிளர்ச்சியாளர்களும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். சிலர் கப்பல்களில் தப்பிக்க முயற்சித்து என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

Mpmanoj

புதிய தொடக்கங்கள்

புதிய தொடக்கங்கள்


சுதந்திர போராட்டத்தின் போது தண்டனைக்குரிய காலனி விரிவடைந்ததால், ராஸ் தீவுக்கு அருகில் இருந்த அண்டை தீவுகளிலும் சிறைச்சாலைகள் கட்டப்பட்டு கைதிகள் அடைக்கப்பட்டனர். இதில், ராஸ் தீவு நிர்வாக தலைமையகமாகவும், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஒரு தனிப்பட்ட குடியிருப்பாகவும் மாறியது. இதன் அருகே இருந்த சில சிறிய தீவுகளில் அவ்வப்போது கடல் நீர் புகுந்து இறப்பு அதிகரித்தாலும், ராஸ் தீவு பாதுகாப்பானதாகவும், அதே சமயம் வசீகரமான இடமாகவும் இருந்தது. இதனால், பிரிட்டிஷார்கள் தங்களுக்கு விருப்பமாக குடியிருப்பு பகுதியாக ராஸ் தீவைத் தேர்வு செய்தனர். இங்கே அவர்களது வழிபாட்டிற்கு என பிரஸ்பைடிரியன் தேவாலயம், நீர் சுத்திகரிப்பு ஆலை, இராணுவ முகாம்கள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவற்றை நிறுவினர். மேலும், புல்வெளி மற்றும் நீதிமன்றங்கள், கிராண்ட் மாளிகைகளும் இங்கே கட்டமைக்கப்பட்டன.

Ashish Shrivastava

இறுதி வெளியேற்றம்

இறுதி வெளியேற்றம்


1938-ல் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், பிரிட்டிஷ்காரர்கள் தண்டனைக்குரிய தீர்ப்பை அமல்படுத்தவில்லை. மீதமுள்ள பிரிட்டிஷ் காவலர்கள் தீவை விட்டு வெளியேறியதால் ஜப்பானிய ஆக்கிரமிப்பு ஏற்பட்டது. பின், யுத்தம் மீண்டும் முடிவுக்கு வந்தபின்னர் தீவுகளை மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவர முயற்சிக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது. அதன் பிறகு 1979-ல் இந்தியக் கடற்படை கைப்பற்றும் வரை தீவு இயற்கையி சீற்றத்தால் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தது.

Adwait

இயற்கையின் கட்டுப்பாட்டில் ராஸ்

இயற்கையின் கட்டுப்பாட்டில் ராஸ்


ராஸ் தீவின் குழப்பம் நிறைந்த இடிபாடுகள் அதன் கடுமையான மற்றும் கொடூரமான காலனித்துவ கடந்த காலங்களில் ஒரு சிறிய பார்வையை வழங்குகிறது. களிமண் கூரைகள், நடமாட்டம் நிறைந்த பஜார், இத்தாலிய ஓடுகள் மற்றும் படிந்த கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவை நீண்ட காலம் கடந்தும் இன்றும் தீவில் காணப்படுகிறது. மூத்த பிரிட்டிஸ் காவலர்களின் பங்களா, துணைக் கூட்டாளர்களின் வேடிக்கை விடுதி, தேவாலயம், குடியிருப்பு சுவர்கள் என தற்போது அனைத்தும் கூரையற்ற எலும்புக்கூடுகளாகவும், மரங்களின் வேர்களாலும் நிறைந்து காணப்படுகிறது.

Tejasi vashishtha

வேட்டை விளையாட்டுகள்

வேட்டை விளையாட்டுகள்


1900-களின் முற்பகுதியில், பிரிட்டிஷ் அதிகாரிகள் வேட்டை விளையாட்டுக்காக அந்தமான் தீவுகளில் பல்வேறு வகையான மான்களை இறக்குமதி செய்தனர். ஆனால், ஆரம்பம் முதலே தீவில் இருந்த விலங்குகளால் அந்த மான்கள் கனிசமாக குறைந்தது. இன்று சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தீவு மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது.

Anshul Arora

கடந்த காலத்தின் ஒரு பார்வை

கடந்த காலத்தின் ஒரு பார்வை


நம் நாட்டினர் மீது மிகப்பெரும் அடக்குமுறையைக் கையான்ட அதிகாரிகளின் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட கேளிக்கை விடுதிகள், நடன மண்டபங்கள், இசைத்தொகுப்புகள் பல இத்தீவில் காணக்கிடைக்கிறது. இந்த உடைந்த விடுதியின் கட்டிடங்கள் யாவும் தற்போது பறவைகளின் கூடாக மாறியுள்ளது. இந்தியாவின் காலனித்துவ கடந்தகால வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம் இங்கே முடிவடைந்து, தண்டிக்கப்பட்ட சுதந்திர தியாகிகளின் நினைவுகள் இன்றும் இங்கே உலாவுகிறது. ரோஸ் தீவு இப்போது இந்திய பெருங்கடலில் மறந்துவிட்ட ஒரு சிறிய துளியாகும். இங்கே பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாவாசிக்கும் நம் கடந்த கால போராட்டங்களையும், இனி பயணிக்கப் போகும் வாழ்க்கைப் பயணத்தையும் கற்றுத் தருகிறது.

Ankur P

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


பேரன் தீவு

அளவில் சிறியதான இந்த பேரன் தீவு போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 84 மைல் வடகிழக்கே அமைந்துள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரே உயிருள்ள எரிமலை இந்த தீவில் உள்ளது. எல்லாவித இயற்கைப் பிரதேசங்களையும் பார்த்துவிட வேண்டும் என்ற மனித இனத்தின் தகிக்கமுடியாத ஆவல்தான் இந்த தீவுப்பகுதியையும் ஒரு சுற்றுலாத்தலமாக அறிய வைத்துள்ளது. பறக்கும் நரி எனப்படும் ராட்சத வௌவால்களும் சில எலி வகைகளும் இந்த தீவில் காணப்படும் இதர உயிரினங்களாகும்.

Arijayprasad

வைப்பர் தீவு

வைப்பர் தீவு


1906ம் ஆண்டில் அந்தமான் செல்லுலர் ஜெயில் கட்டப்படுவதற்கு முன்பு இந்த வைப்பர் தீவு ஒரு முக்கிய சிறைச்சாலைப்பகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்கே அமைந்துள்ள இந்த தீவுக்கு ஃபெர்ரி மூலமாக சென்றடையலாம். ஆங்கிலேய ஆட்சியை அகற்ற போராடியதற்காக பல ராஜவம்சங்களை சேர்ந்த அரசர்களும், சாதாரணமானவர்களுடன் சேர்த்து இந்த தீவில் சிறையிடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு தெளிவான வரலாற்றுக்குறிப்புகள் சான்றுகளாக உள்ளன. சில படகு சேவை நிறுவனங்கள் தீவை சுற்றியுள்ள எழிற்பகுதிகளையும், சிறைச்சாலையின் வெளிப்புறங்களையும் படகிலிருந்தபடி சுற்றிக்காட்டும் ஒருங்கிணைந்த சேவைகளையும் வழங்குகின்றன.

Sanyam Bahga

ஜாலி பாய்

ஜாலி பாய்


ஜாலி பாய் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவு போர்ட் பிளேருக்கு மிக அருகிலேயே உள்ளது. மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க் அல்லது வாண்டூர் நேஷனல் பார்க் எனப்படும் கடல்சார் தேசியப்பூங்காவின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் சில அரிய வகை பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். அது மட்டுமல்லாமல் வைரம் போல் ஜொலிக்கும் தூய மணற்பரப்பு மற்றும் மரகதப்பச்சை படிக நீர்ப்பரப்பு போன்றவற்றை இந்த தீவின் கடற்கரைகள் கொண்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் டால்பின்களையும் இந்த தீவுப்பகுதியில் தரிசிக்க வாய்ப்புண்டு. ஜாலி பாய் தீவில் சொகுசுப்படகுக்கான துறைமுகம் இல்லாததால் தீவுக்கு அருகாமையில் பயணிகள் வேறு சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டு தீவில் இறக்கிவிடப்படுகின்றனர். இந்த சிறு படகுகளின் அடிப்பாக ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் நன்றாக ரசிக்கலாம். ஆழம் குறைவான இந்த கடற்கரைப்பகுதியில்தான் இந்த இரண்டு அம்சங்களும் பளிச்சென்று காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Sthakur88

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X