Search
  • Follow NativePlanet
Share
» »சர்தார் சரோவார் அணை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா?

சர்தார் சரோவார் அணை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா?

சர்தார் சரோவார் அணை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா?

By Udhaya

நர்மதா நதியின் மீது கட்டப்பட்ட, சர்தார் சரோவார் அணை, நதியின் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 1163 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கு திரு ஜவர்ஹலால் நேரு அவர்கள் 1961-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால் இறுதியில் இந்த அணைக்கான கட்டுமான பணிகள் 1979 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அணையில் சுற்றுலா வழிகாட்டு மையம் உள்ளது. அந்த மையத்தின் வரவேற்பறையில் இந்த அணையில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஆறு சுற்றுலா இடங்களின் வரைபடம் உள்ளது. அந்த மிக முக்கியமான ஆறு சுற்றுலா தலங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்

ஆறு சுற்றுலா தலங்கள்

ஆறு சுற்றுலா தலங்கள்

தோட்டம், அடித்தளக் கல், படகுச் சவாரிக்கான ஏரி, முதல் பூட்டு வாயில் மற்றும் இயற்கை முகாம்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கான ட்ரெக்கிங் புள்ளி. சர்தார் சரோவார் அணையின் உயரம் சுமார் 128 மீட்டர் ஆகும். அதன் உயரம் மேலும் அதிகரிக்கப்படுகிறது.

Rama's Arrow

வளம்

வளம்

நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய அணையான இது, நர்மதா நதியின் கண்டுபிடிக்கப்படாத நீர் வளங்களை, மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது. இந்த அணை குஜராத் முழுவதற்குமான குடிநீர், நீர்பாசனம் மற்றும் நீர் மின் உற்பத்திக்கு உதவுகிறது.

Clt13

 கெவடியா

கெவடியா

கெவடியா என்பது இந்த அணைக்கு அருகே உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த அணையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பாக கட்டப்பட்ட இந்த காலனி படிப்படியாக அதன் இயற்கை அழகு மற்றும் இங்கே கிடைக்கும் மற்ற சுற்றுலா வசதிகள் காரணமாக ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்து வருகிறது.

Pranav mayani

ஆன்மீக தலங்கள்

ஆன்மீக தலங்கள்


புனித நதியான நர்மதாவுடன் தொடர்புடைய ஆன்மீக தலங்களான ச்சன்தோட், கபிர்வாத் மற்றும் சில சிவன் கோவில்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன. பாஹரூச் மற்றும் ராஜ்பிப்லா போன்ற வரலாற்று நகரங்கள் கூட சர்தார் சரோவார் அணைக்கு மிக அருகே உள்ளன.

YashiWong

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

விஷால் கதர் சுற்றுச்சூழல் முகாம் தளம், ஸமோட்-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம், ஸாகை-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம், ஸர்வானி சுற்றுச்சூழல் முகாம் தளம், மற்றும் கஞ்ஜிதா சுற்றுச்சூழல் முகாம் தளம் மற்றும் இதில் உள்ள ரத்தன்மஹால் ஸ்லோத் கரடிகள் சரணாலயம், டீடியபாத் ரேஞ்ச் மற்றும் அதில் உள்ள ஸ்ஹோல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயம் போன்றவை நர்மதா மாவட்டத்தில் உள்ள இயற்கை சூழல் ஆர்வலர்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும்.

Heartlysrt

Read more about: travel dam gujarat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X