Search
  • Follow NativePlanet
Share
» »அள்ளித் தரும் ஆனி.. எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..!

அள்ளித் தரும் ஆனி.. எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..!

கால நிலைக்கு ஏற்றவாறே வழிபாட்டுத் தெய்வங்களும், அதற்கான விழாக்களும் மாறுபடுகிறது. இது இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையேயான பகிர்வாக உள்ளது. காலத்திற்கு ஏற்றது போல் முன்னோர்கள் பிரிவு பிரிவாக உண்டாக்கியதே வாரங்களும், மாதங்களும். தமிழர் காலக் கணிப்பு முறையின்படி சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு மாதங்களை அவர்கள் வகுத்தனர். இதில் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் தொடங்கி தற்போது நடக்கும் ஆனி என மாதத்திற்கு ஏற்ப சூரியன் பயணிக்கும். தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஆனி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் அவரவர்களின் நட்சத்திரத்திற்கு ஏற்ற கோவில்களுக்குச் செல்வதால் செல்வத்திலும், புகழிலும், மகிழ்ச்சியிலும் புரளப் போறாங்க. சரி, அது எந்த ராசி, அவர்கள் எந்தக் கோவிலுக்கு போக வேண்டும் என பார்க்கலாம் வாங்க.

ஆதிநாராயணப் பெருமாள் கோவில்

ஆதிநாராயணப் பெருமாள் கோவில்

ஆதிநாராயணப் பெருமாள் புத்திக் கூர்மையும், செல்வத்தை நோக்கி பயணிக்கும் மிருக சீரிடி நட்சத்திரக் காரர்களுக்கு ஏற்ற மூல கடவுளாக திகழ்கிறார். மிருக சீரிடம் நட்சத்திரம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களில் இருந்து விடுபடவும், இந்த மாத இறுதியிலேயே செய்த வேலைக்கேற்ற பலன்களை அடைந்து பணச் செழிப்பு மிக்கவராக உருவெடுக்கவும் எண்கண் அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் தலம் சிறப்பு பெற்றதாக உள்ளது.

Adam Jones

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

பிற பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற நிலையில், அமர்ந்த நிலையில் அல்லது ஓய்வெடுக்கும் நிலையில் காட்சியளிப்பார். ஆனால், எண்கண்-யில் சோழர்களால் கட்டப்பட்ட கோவிலில் அருள்பாலிக்கும் ஆதிநாராயணப் பெருமாள் கருடால்வார் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். பெருமாள் அரசனுக்கு அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால் சன்னதியிலும் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். இத்தலத்தின் பெருமாளுக்கு நித்யகருட சேவை சாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காட்சியை வேறெந்தக் கோவிலிலும் காண முடியாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

Ssriram mt

எப்போது, எப்படி செல்ல வேண்டும் ?

எப்போது, எப்படி செல்ல வேண்டும் ?

பொதுவாக கோவில்களில் நடை அதி காலை பொழுது, அந்த சாயும் பொழுது என இரு வேளைகளில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் கோவில் நடை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு சரியான திட்டமிடலுன் இத்தலத்திற்கு செல்ல வேண்டும். திருவாரூர் மாவட்டம், எண்கண் பகுதியில் அமைந்துள்ளது ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவாரூரில் இருந்து திருக்கண்ணமங்கை, வடகண்டம், மங்கல் அய்யம்பேட்டை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். மேலும், கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில், திருச்சேறை, குடவாசல் வழியாக மஞ்சகுடி, சிமிழி சாலையில் சுமார் 28 கிலோ மீட்டர் பயணித்தாலும் எண்கண் பெருமாள் தலத்தை அடைய முடியும். மாநகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் எளிதாக வந்து செல்லும் வகையில் பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார்கள் வசதியும் உள்ளது.

Simply CVR

மாங்கல்யேஷ்வரர் திருக்கோவில்

மாங்கல்யேஷ்வரர் திருக்கோவில்

திருமண வாழ்க்கை முதல் இல்லற வாழ்க்கை வரை மகிழ்ச்யும் சரியான திட்டமிடலும் கொண்டு வாழ்ந்து வரும் உத்திர நட்சத்திரம் கொண்டோர் இந்த ஆனி மாதத்தில் மாங்கல்யேஷ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவதன் மூலம் பொருளாதார ரீதியாகவும், உத்தியோகத் தலத்திலும் மேலோங்கிச் செல்வர். உத்திர நட்சத்திரத்தின் குருவாக திகழும் இடையாற்று மங்கலத்தில் மங்களாம்பிகையுடன் அருள்பாலிக்கும் மாங்கல்யேஷ்வரரை வழிபட்டால் குடம்பத்தில் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வியும், ஆரோக்கியமும் மேன்மையடையும் என்பது நம்பிக்கை.

Venkatx3x

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

இடையாற்று மங்கலத்தில் அருள்பாலிக்கும் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். திருமணத் தடை, நோயில் அவதிப்படுவோர் இத்தலத்தில் மூலவருக்கு அபிஷேக பூஜை செய்வதன் மூலம் தடைகள் நீங்கும். உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட காலம் செழிப்புடன் வாழ இத்தலத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Padmakishore

எப்போது, எப்படி செல்ல வேண்டும் ?

எப்போது, எப்படி செல்ல வேண்டும் ?

அருள்மிகு மாங்கல்யேஷ்வரர் திருக்கோவிலின் நடை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Ssriram mt

பசுபதிகோவில் வரதராஜப் பெருமாள்

பசுபதிகோவில் வரதராஜப் பெருமாள்

கேட்டை நட்சத்திரம், ஜோதிட ராசிச் சக்கரத்தில் கணிக்கப்படுகின்ற 27 நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 18-வது பிரிவாக உள்ளது. இந்நட்சத்திரத்தில் பிறந்தோர் வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் தன்மையைப் பெற்றுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இவ்வாறு, கணிப்புடன் கூடிய திட்டமிடலும், ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் கொள்ளும் கவணமும் இந்நட்சத்திரக்காரர்கள் செழிப்புடன் வாழ வழிசெய்கிறது.இச்சிறப்புகளை மேலும், வலுப்படுத்தவும், எதிர்பாராத வகையில் நேரிடும் துக்க நிகழ்வைத் தடுத்து பொருட்செல்வம் மிக்கவராக அவதரிக்கவும் பசுபதிகோவிலில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாளை வழிபடுவது சிறந்தது.

Ssriram mt

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று வழிபட வேண்டிய தலங்களில் இக்கோவில் முக்கியமானது. கேட்டை நட்சத்திரத்தில் நிலவும் தோஷங்கள் நீங்க மூலவருக்கு வெண்மை நிற ஆடையும், மல்லைகைப் பூமாலை, அதிசரம், வடையும் படைத்து நெய்வேத்யம் செய்து வேண்டுதல் செய்வது சிறந்தது. இம்மாத இறுதிக்குள் இத்தலத்தின் வரதராஜ பெருமாளை வணங்கி மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி கலந்த எண்ணையில் தீபமேற்றி வழிபட்டால் செல்வத்தின் உச்சத்தை அடையக்கூடிய வாய்ப்பு தேடி வந்து சேரும்.

H. Grobe

எப்போது, எப்படி செல்ல வேண்டும் ?

எப்போது, எப்படி செல்ல வேண்டும் ?

அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் நடை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தங்களது பயண நேரத்தை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுச் சென்றால் பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேக பூஜையையும், பிரார்த்தனைகளையும் காணமுடியும்.

Fahad Faisal

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more