Search
  • Follow NativePlanet
Share
» »சிவனை தரிசிக்கும் சூரியன்... வருடத்தின் ஒரே நாளில் நிகழும் அதிசயம்... #Travel2Temple 8

சிவனை தரிசிக்கும் சூரியன்... வருடத்தின் ஒரே நாளில் நிகழும் அதிசயம்... #Travel2Temple 8

வருடத்தின் ஒரே நாளில் மட்டும் சூரியனின் ஒளி மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமாளின் மீது விழும் அரிய நிகழ்வு நிகழ்கிறது என்றால் நம்ப முடிகிறதா...? வாங்க, அது எந்தக் கோவில், எங்கே உள்ளது என பார்க்கலாம்.

இப்பூவுலகில் ஆங்காங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு அதிசய மிகு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஏன், நம் ஊரிலே கூட இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன. பல சம்பவங்கள் அறிவியல் பூர்வமாக விஞ்ஞாணிகளால் கூட தீர்வுகிடைக்காத வகையில் இன்றளவும் ஓர் மர்மம் நிறைந்த அதிசயங்களாகவே உள்ளன. அந்த வகையில், இங்கே ஓர் கோவிலில் வருடத்தின் ஒரே நாளில் மட்டும் சூரியனின் ஒளி மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமாளின் மீது விழும் அரிய நிகழ்வு நிகழ்கிறது என்றால் நம்ப முடிகிறதா... வாங்க, அது எந்தக் கோவில், எங்கே உள்ளது என பார்க்கலாம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விருதுநகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடுக்கங்குளம் பகுதியில் அமைந்துள்ளது அம்பலவாணர் திருக்கோவில். இங்கே மூலவராக அம்பலவாணரும், அம்மனாக சிவகாமி சுந்தரியும் ருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் உள்ள சிவனின் மீதே வியக்கத்தக்கும் வகையிலாக சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடக்கிறது.

Udayaditya Kashyap

சிறப்பு

சிறப்பு


பாண்டியர் காலகட்டத்தில் கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ள இந்த சிவன் கோவிலில் வருடத்திற்கு ஒரே முறை மகா சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சிவனின் மீது விழுவது தலசிறப்பாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வினைக் காண சுற்றுவட்டாரத்திற் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம்.

Klaus Nahr

திருவிழா

திருவிழா


சிவபெருமானுக்குரிய விரத நாளான மகா சிவராத்திரியன்றும், பிரதோஷம், மார்கழி உள்ளிட்ட விசேச நாட்களிலும் கோவிலின் திருமுழக்கு முழங்க மாபெரும் விழா எழுப்பப்படுகிறது.

Paramita.iitb

நடைதிறப்பு

நடைதிறப்பு


அம்பலவாணர் கோவிலின் நடை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாரை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Dineshkannambadi

வரலாறு

வரலாறு


ராவணனின் மனைவியான மண்டோதரி இளம்வயதில் தனக்கிருந்த திருமணத் தடையை நீக்க முடுக்கங்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு பூஜைகள் செய்தால். அதனைத் தொடர்ந்தே சிவனின் தீவிர பக்தரான ராவணரை திருமணம் செய்யும் பாக்கியம் மண்டோதரிக்கு ஏற்பட்டது என்று புராணக் கதைகளின் வாயிலாக கூறப்படுகிறது.

Ramachandra Madhwa Mahishi

பாண்டியரின் சான்றுகள்

பாண்டியரின் சான்றுகள்


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. அவற்றின் அடையாளமாக கோவிலின் ஒரு பகுதியில் முக்காலப் பாண்டியன் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

Gokulan C G

சிவனை வழிபடும் சூரியன்

சிவனை வழிபடும் சூரியன்


மாசிசிவராத்திரி தினத்தில் வேறெங்கும் நிகழாத அதிசயமாக இங்கு ரியனின் ஒளி சிவனின் மீது படர்கிறது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் ஒன்று மூலவரின் சந்நிதி எதிரே உள்ளது.

Ranju.barman

கல்யாண விநாயகர்

கல்யாண விநாயகர்


கோவிலின் வாசயில் பிற கோவில்களைப் போலவே விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தான் மண்டோதரி தனது திருமணம் சிறப்பாக நடைபெற அருள் பெற்றதால் இந்த விநாயகர் கல்யாண விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சந்நிதிக்கு அருகே சிவகாமி திருக்குளமும் உள்ளது.

Sid Mohanty

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பொதிகை, திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளது. விருதுநகரில் இருந்து வடகம்பட்டி, காரியாபட்டி வழியாக முடுக்கங்குளத்தை அடையலாம்.

Superfast1111

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X