» »வாழ்வுக்கும், மரணத்திற்கும் அடையாளப் பாதையுள்ள கோவிலைப் பற்றி தெரியுமா ?

வாழ்வுக்கும், மரணத்திற்கும் அடையாளப் பாதையுள்ள கோவிலைப் பற்றி தெரியுமா ?

Posted By: Sabarish

Ssriram mt

பிற உயிரிணங்களைப் போல இல்லாமல் மனிதர்களை தனித்துவமாகக் காட்டுவது நம் புதிய கண்டுபிடிப்புகளும், படைப்புகளுமே. அதுமட்டுமின்றி உருவாக்கிய ஒன்றை மேலும், மேலும் மேன்மையடையச் செய்வதிலும் மனிதன் சிறந்து விளங்குகின்றான். இவ்வாறு ஆதிகாலம் தொட்டு மனித இனம் பல்வேறு பரினாமங்களை அடைந்து இன்று ஓர் வளர்ச்சியின் உச்சத்தில் நாம் உள்ளோம் என்றால் மிகையாகாது. அவ்வாறு மனிதன் உருவாக்கியதில் இன்றளவும் அனைவராலும் போற்றப்படுவது கலைநயமிக்க படைப்புகளே.

கலைக் கலஞ்சியம்

கலைக் கலஞ்சியம்

mckaysavage

ஒரு காலத்தில், பாறைகளைக் குடைந்தும், மரக்கட்டைகளாலும் கோவில்களை கட்டிய‌போது, ஒரு மனிதன் புதிய வடிவமைப்பில் கற்களைக் கொண்டு உருவாக்கிய கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில். இன்றும், காஞ்சியில் கைலாச‌நாதர் கோவிலுக்கு நிகரான ஒன்று வேறேதும் உண்டா ?

கைலாச‌நாதர் கோவில்

கைலாச‌நாதர் கோவில்

Keshav Mukund Kandhadai

பல்லவ வம்சத்தில் வந்த ராஜசிம்மாவின் கனவு படைப்பான இந்தக் கைலாச‌நாதர் கோவில் சிற்பக்கலையின் போக்கையே மாற்றியது. இந்தப் பெரும் கோவிலின் ஒவ்வொரு மூலையும் ராஜசிம்மாவிற்கு, கட்டிட கலையின் மேல் எந்தளவிற்கு காதல் இருந்திருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. கோவில் கட்டுமானத்தில் மணற்கற்களை உபயோகப்படுத்தும் வழக்கம் பிரபலமடைந்தது கைலாசநாதர் கோவில் வந்த‌ பின்னர்தான்.

சிவனின் மாளிகை

சிவனின் மாளிகை

Ssriram mt

புராணக் குறிப்புகள், கைலாசமலை சிவனின் மாளிகையை சித்தரித்தது போல, அந்த‌ வடிவில் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் கட்டிய கோவில் இது. தென்னிந்தியாவில் தோன்றிய முதல் கட்டுமான கோவில் கைலாசநாதர் கோவில் ஆகும். கோபுரம், கோவில் வாசல், வெளிப்புறம், கோவில் மண்டபம், மூலஸ்தானம் என்று அனைத்தும் ஒருங்கே கொண்ட முழுமையான கோவிலும்கூட.

தனித்தன்மை

தனித்தன்மை

Ssriram mt

மற்ற கோவில்களைப் போல இக்கோவிலின் வெளிப்புறம் வெறும் சுவரல்ல. சிறு சன்னதிகள் நிரம்பியிருக்கும் வெளிப்புறச் சுவர்! இதனால், கோவிலுக்கு நுழையும் முன்னரே, நீங்கள், உங்கள் கண்களை அகல திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெளிப்புற சன்னதியிலும், சோமஸ்கந்த புராணக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.

மூலஸ்தானம்

மூலஸ்தானம்

Steve Evans

எல்லா சிவாலயங்களைப் போலவே இங்கும், மூலவர் அறையில் கிரானைட் கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் நந்திக்கு நேரெதிராய் வீற்றிருக்கிறது. ராஜசிம்மா, சிவனின் பெரும் பக்தனின் காரணத்தால், நாம் கோவிலின் பல கற்களில், சிவனின் சிற்பத்தை காணலாம். மேலும், பல நந்தி, சிங்கச் சிற்பங்களையும் நாம் காணலாம். புராணக் குறிப்புகள், நந்தியை பல்லவ சாம்ராஜ்யத்தின் சின்னமாக சித்தரிக்கிறது. இதனால், நந்திக்கு, இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதோடு, இன்னும் பிற தெய்வங்களான, விஷ்ணு, பிரம்மா, விநாயக, துர்கா ஆகியவற்றின் சிற்பங்கள் கோவிலின் உள்ளே இருக்கிறது.

துரதிருஷ்டவாதியான ராஜசிம்மா

துரதிருஷ்டவாதியான ராஜசிம்மா

McKay Savage

துரதிருஷ்டவசமாக, ராஜசிம்மாவால் கோவிலின் முழு கட்டுமானத்தையும் பார்க்க முடியவில்லை. அவரது மகனான மகேந்திர வர்மர், தந்தையின் பெரும் படைப்பை, தன் காலத்தில் முடித்து வைத்தார். அக்காலத்தில், கைலாசநாதர் கோவில், கட்டுமானத்தில் ஒரு மைல்கல். இப்படி ஒரு தலைசிறந்த கோவிலை பார்க்கும் ஆவல் யாருக்குத்தான் இருக்காது ?

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

Map

கைலாசநாதர் கோவிலின் உள்ளே இருக்கும் சுற்றுப் பாதை வட்ட வடிவு கொண்டது. அதனூடே ஊர்ந்து சென்று, பல படிகள் ஏறித்தான் வெளியே வர முடியும். இந்த‌ப் பாதை, வாழ்வுக்கும், மரணத்திற்கும் ஒரு அடையாளமாக நம்பப்படுகிறது. பிரசித்திபெற்ற தஞ்சை பிரகதீஸ்வர கோவில் இதன் பாதிப்பில் கட்டப்பட்டது என்றால் நம்பமுடிகிறதா..!! கைலாசநாதர் கோவில், காஞ்சியில் மிகப் பழமை வாய்ந்த கோவிலாக இருந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள மற்ற கோவில்களைப் போல இது அத்தனை பிரசித்திபெற்றது இல்லை. இருப்பினும், நம் தமிழர்களின் கலைநயமிக்க, வரலாற்று சின்னத்தை பார்க்க விரும்பினால் இந்தக் கோவிலுக்கு சென்று வருவது சிறப்பே.

எப்படி அடைவது ?

எப்படி அடைவது ?

Map

சென்னையில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காஞ்சிபுரம். சென்னையில் இருந்து ஏராளமான பேருந்துகள் காஞ்சிக்கு இயக்கப்படுகின்றன. காஞ்சியின் முக்கிய பகுதிகளில் இருந்தும் கைலாசநாதர் கோவிலுக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளது. குறிப்பாக, காஞ்சி ரயில் நிலையத்தின் அருகிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது.