» »காசியில் இருந்து வந்த சிவன் தமிழகத்தில் எங்கே தங்கினார் தெரியுமா ? #Travel2Temple 9

காசியில் இருந்து வந்த சிவன் தமிழகத்தில் எங்கே தங்கினார் தெரியுமா ? #Travel2Temple 9

Written By: Sabarish

உலகிற்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் திகழ்பவன் சிவன். பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இயற்கையை உடலாகக் கொண்டவன். சைவசமயத்தின் முதற் கடவுளாக பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என்றும் அழைக்கப்படுவன். இன்னும் எத்தனையோ பெருமைகளைக் கொண்டுள்ள சிவபெருமான் குடிகொண்டுள்ள இடமாக அறியப்படுவது காசியே. அத்தகைய காசியில் இருந்து தென் தமிழகம் வந்த சிவன் எங்கே குடிகொண்டார் என தெரியுமா ?.

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?


விருதுநகரில் இருந்து ஆமத்தூர் வழியாக சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவகாசியின் மத்தியில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் வெள்ளூர் அருகே உள்ளது.

Ilya Mauter

சிறப்பு

சிறப்பு


சிவகாசிக்கு உட்பட்டு அமைந்துள்ள காசிவிஷ்வநாதர் திருக்கோவிலானது காசியில் இருந்து வந்த சிவன் தங்கிய இடம் என தொன்நம்பிக்கை உள்ளது. சிவன் காசியே பிற்காலத்தில் மருவி சிவகாசி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வடக்கே காசி, தெற்கே தென்காசியும் அமைந்துள்ளது.

Steve Evans

திருவிழா

திருவிழா


வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் திருமஞ்சனம், ஆடி மாதத்தில் விசாலாட்சி அம்மையாருக்கு தபசுத்திருவிழா, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகை திருவிழா உள்ளிட்டு வருடம் முழுக்க பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

Ssriram mt

நடைதிறப்பு

நடைதிறப்பு


காசிவிஷ்வநாதர் திருக்கோவிலில் அன்றாடம் காலை 5.45 மணி முதல் 12.15 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரையுலும் கோவில் நடை திறந்திருக்கும்.

Harizen20

வழிபாடு

வழிபாடு

தொழிலில் நீண்ட காலமாக நஷ்டம் ஏற்படுதல், எதிர்பார்த்த பயணங்கள் திடீரென ரத்தாகுதல் உள்ளிட்ட பிரச்சணையால் மனவேதனை அடைந்துள்ளீர்கள் என்றால் இங்கே சென்று வழிபட்டு வாருங்கள். ஓரிரு நாட்களிலேயே தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதை உணரலாம்.

Raji.srinivas

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டிய யாவும் நிறைவேறியதன் பரிகாரமாக சிவனுக்கு உகந்த நாட்களான பிரதோஷத்தன்று சிவனுக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி புத்தாடைகள் சாற்றப்படுகிறது.

Nsmohan

தலவரலாறு

தலவரலாறு


தென்காசியை ஆட்சி செய்து வந்த மன்னர் அரிகேசரி பராங்குச மன்னன் அங்கு ஒரு சிவன் கோவில் கட்ட நினைத்தார். அதற்காக, காசியில் இருந்து சிவலிங்கத்தை எடுத்துவர முடிவு செய்த மன்னன் மற்றும அவரது மனைவி இருவரும் தேரில் லிங்கத்தை எடுத்து வந்துள்ளனர். அப்போது, காசிக்கும், தென்காசிக்கும் இடையே தேர் பழுதாகி நின்றதை அடுத்து அங்கேயே கோவில் கட்டப்பட்டது. காசிக்கும், தென்காசிக்கும் இடையே இக்போவில் கட்டப்பட்டுள்ளதால் சிவகாசி என அறியப்படுகிறது.

Paramita.iitb

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பொதிகை, திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளது. விருதுநகரில் இருந்து வடகம்பட்டி, காரியாபட்டி வழியாக முடுக்கங்குளத்தை அடையலாம்.

Superfast1111

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்