» »குழந்தை பேறு அருளும் நாகலிங்கப் பூ... சோழர் கோவிலில் இத்தனை மகிமையா..!

குழந்தை பேறு அருளும் நாகலிங்கப் பூ... சோழர் கோவிலில் இத்தனை மகிமையா..!

Written By: Sabarish

விஜயாலயன், முத்தரையர்களை வென்று சோழர்கள் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிய காலம் முதலே சோழர்கள் பல கோவில்களைக் கட்டத்துவங்கி விட்டனர் என்பதை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மூலம் நாம் அறிவோம். ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் ஏனோ பெரியவையாக அமையவில்லை. எனினும் இராஜராஜன் காலத்திலும் அவரது மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் போன்ற அளவிற் பெரிய கோவில்கள் தோன்ற ஆரம்பித்தன. இவற்றில் கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மகுடம் வைப்பது போன்ற உன்னத படைப்பாகும்.

மருத்துவமும், மர்மும் நிறைந்த கோவில்

மருத்துவமும், மர்மும் நிறைந்த கோவில்


இவற்றைப் போலவே சோழர்களால் கட்டப்பட்ட மேலும் பல கோவில்கள் தமிழகத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. அதில், இன்றுளவும் பல்வேறு மர்மங்களும், மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுவது சற்று வியக்கவைக்கும் வகையிலேயே உள்ளது. அவ்வாறான ஒரு கோவிலே தமிழகத்தின் தெற்கே அமைந்துள்ள சிவன் கோவில்.

Dineshkannambadi

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விருதுநகரில் இருந்து அழகபுரி வழியாக சுமார் 72 கிலோ மீட்டர் தொலைவில் ராஜபாளையத்தை அடுத்துள்ள தேவதானத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நச்சாடை தவித்தருளிய சுவாமி திருக்கோவில். விருதுநகர் - சிவகாசி வழியாக 76 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம்.

சிறப்பு

சிறப்பு

தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் கண் கெடுத்தவர், கண் கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் ஒரே குன்றின் மேலே உள்ள கோவிலில் அமைந்துள்ளது. அதனினும் சிறப்பு இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டதாகும்.

Akash.nakka

திருவிழா

திருவிழா

பொதுவாக சிவன் கோவில் என்றாலே சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு வழிபாடும், திருவிழாவும் கொண்டாடப்படும். ஆனால் இக்கோவிலில் வைகாசி மாதத்தில் மாபெரு அளவிலான திருவிழா கொண்டாடப்படுகிறது. தேரோட்டம், தெப்ப உற்சவம், கந்தஷ்டி உள்ளிட்டு விழா நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் இங்கே திரல்கின்றனர்.

Nvvchar

நடைதிறப்பு

நடைதிறப்பு


நச்சாடை தவித்தருளிய சுவாமி கோவில் நடை காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Rasnaboy

வழிபாடு

வழிபாடு

பார்வைக் குறைபாடு, குழந்தை பேறு அற்றவர்கள் இக்கோவிலின் மூலவரான நச்சாடை தவித்தருளிய சுவாமி மற்றும் அம்மனான வீற்றிருக்கும் தவதிருந்த நாயகியை வழிபட பிணி நீங்கி உடல் நலம் பெருகும் என்பது தொன்நம்பிக்கை.

Karthik Easvur

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


நீண்ட ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களும் இத்திருத்தலத்தில் உள்ள நாகலிங்க மரத்தில் மூன்று பூக்களைப் பறித்து மூலவர் பூஜைக்குப் பிறகு பாலில் கலந்து குடிக்க ஓரிரு மாதங்களிலேயே குழந்தை வரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அவ்வாறாக குழந்தை வரம் பெற்றோர் சிவபெருமானுக்கும், நாயகி அம்மனுக்கும் புத்தாடை வழங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Ilya Mauter

திருத்தலச் சிறப்பு

திருத்தலச் சிறப்பு


பஞ்ச பூதங்களாக கருதப்படுவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இவற்றிற்கு உகந்த தலங்கள் காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளகஸ்தி, சிதம்பரம். இந்த பஞ்ச பூத தலங்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசிப்பது கடினம். ஆனால், நச்சாடை தவித்தருளிய சுவாமி கோவிலைச் சுற்றியுள்ள நிலத்திற்குறிய சங்கரன் கோவில், நீருக்குறிய தாருகாபுரம், நெருப்புக்குறிய கரிவலம்வந்தநல்லூர், காற்றுக்குறிய தென்மலை, ஆகாயத்திற்குறிய தேவதானம் என பஞ்ச தலங்களையும் ஒரே நாளில் தரிசித்துவிடலாம்.

Jagadeeswarann99

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விருதுநகருக்கு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மதுரை விமான நிலையம் விருதுநகரின் அருகில் உள்ள விமான நிலையமாகும். விருதுநகரில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் புளிச்சகுளத்தில் உள்ள அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோவிலை அடையலாம்.

SarThePhotographer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்