» »கோடை காலத்தை குளுகுளுன்னு கழிக்கனுமா, அப்ப இந்த இடத்துக்கு ஒரு ட்ரிப் போங்க...

கோடை காலத்தை குளுகுளுன்னு கழிக்கனுமா, அப்ப இந்த இடத்துக்கு ஒரு ட்ரிப் போங்க...

Written By: SABARISH

கோடை காலத்தை குளுகுளுன்னு கழிக்கனுமா, அப்ப இந்த இடத்துக்கு ஒரு ட்ரிப் போங்க...

பொதுவாகவே, நகரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது கோடை வெப்பத்தில் இருந்து தப்பிப்பதே. அதுவும், அடுத்த இரண்டு மாதம் கழித்து வரப்போகும் கோடைக்கால வெப்பத்தை நினைத்தால் இப்பவே உடல் வாடி விடுகிறது. இதற்கு ஏற்றாற்போல் குழந்தைகளின் பள்ளி விடுமுறையும் வரவுள்ளது. பெரியவர்களே வதைக்கும் வெயிலினால் பாதிக்கப்படும் நிலையில், குழந்தைகள் மட்டும் என்ன செய்வார்கள்.

இப்படிப்பட்ட வெயிலில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களை நோக்கி ஓடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரே மலைக்கு வருடாவருடம் சுற்றுலா செல்வது அந்த பயணத்தையே சலிப்படையச் செய்யும். இதுக்கு பேசாம வீட்டிலேயே இருந்திருக்கலாம் என உங்களது குழந்தையை சொல்ல வைத்து விடாதீர்கள் பெற்றோர்களே. சரி, அப்ப எங்கதான் போறதுன்னு கேக்குறீங்களா ?. வாங்க சொல்றேன்.

நீண்ட தூர பயணம்

நீண்ட தூர பயணம்

SriniG

பெரியவர்களுக்கு நீண்ட தூர பயணம் என்பது சற்று சிரமமான காரியம்தான். ஆனால், குழந்தைகளுக்கு அப்படி இல்லை. எனவே, சரியான வாகனத்தைத் தேர்வு செய்து பயணம் மேற்கொண்டால் பெரியவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் வராது. மேலும், அன்றாட வேலைப் பழுவினால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட தவறிய உங்களுக்கு இந்த நெடுந்தூர பயணம் குடும்ப உறுப்பினர்களுடனான உறவையும் நெருக்கப்படுத்தும்னா பாருங்களேன்.

கோடையில் இருந்து தப்பிக்க எங்கெல்லாம் போகலாம்?

கோடையில் இருந்து தப்பிக்க எங்கெல்லாம் போகலாம்?

Shahnoor Habib Munmun

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஏற்ற இடம் மலைத்தொடர்கள் என அனைவரும் அறிவர். ஆனால், சிறந்த சுற்றுலாத் தலங்கள் நிறைந்த மலையை தேர்வு செய்வது மிக முக்கியம். அதுவும், பசுமை நிறைந்த உள்ளூர் மலைகளைப் போல இல்லாமல், வெள்ளை வெளேறென்ற பணிப் பொழிவு நிறைந்த மலை பகுதிக்கு சுற்றுலா செல்வது புதிய அனுபவத்தைத் தருவது மட்டுமின்றி குழந்தைகள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

பணிகள் நிறைந்த மலைத்தொடர் எங்க இருக்குன்னு தெரியுமா ?

பணிகள் நிறைந்த மலைத்தொடர் எங்க இருக்குன்னு தெரியுமா ?

sahil

தென்னிந்தியாவில் ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், ஆனைமுடி என பல மலைப் பகுதிகள் இருந்தாலும் அங்கு வருடத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பணிப் பொழிவு காணப்படும். ஆனால், வட இந்தியாவில் இமயமலைக்கு உட்பட்ட மலைத் தொடர்களில் வருடம் முழுக்க பணிப் பொழிவும், பணிப் பாறைகளும் நிறைந்தே காணப்படுகிறது. இதுபோன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது வாழ்வில் சிறந்த அனுபவத்தை உங்களுக்கு ஏற்படுத்தும்.

ஜம்மு- காஷ்மீர்

ஜம்மு- காஷ்மீர்

Saurc zlunag

பணிச் சிகரங்களால் சூழப்பட்ட அழகும், ஆபத்தும் நிறைந்த பகுதி இந்த ஜம்மு- காஷ்மீர். இருப்பினும், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இன்னும் தன் பொழிவில் மங்காத பல குடியிருப்புப் பகுதிகளும், சுற்றுலாத் தலங்களும் இந்தப் பகுதியில் உள்ளன. உரிய பாதுகாப்புடன் அப்பகுதிகளுக்குப் பயணிகள் சென்று வருகின்றனர்.

கலாச்சாரம் காக்கும் ஓர் நகரம்

கலாச்சாரம் காக்கும் ஓர் நகரம்

Shalimar gardens

ஜம்மு, காஷ்மீருக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்துமே தொன்மை மாறாத கலாச்சாரத்தை பேணிக்காக்கும் பகுதியாக உள்ளது. இதில், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் லடாக் தொலைதூர மலைத்தொடர் அழகிற்காகவும், கலாச்சாரத்திற்காகவும் புகழ்பெற்றது. லடாக் தற்போது பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆளப்படும் பகுதிகள் முறையே பால்திஸ்தான், அக்சாய் சின் ஆகியவற்றை உள்ளிட்ட பகுதியாக உள்ளதால் புத்தசமயத்தின் கலாச்சாரத்தை நாம் காண முடியும்.

லடாக்- லே

லடாக்- லே

Deeptrivia

லடாக் மாவட்டத்தின் தலைநகரமான லே சுமார் 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லே அரண்மனை மிகபும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக, இங்குள்ள மலையேற்றப் பாதையில் செல்லவே மலை ஏற்ற விரும்பிகள் அதிகளவில் இங்கு பயணிக்கின்றனர். மேலும், இங்குள்ள யுத்த அருங்காட்சியகம், குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம், ஜும்மா மசூதி என வழிபாட்டுத் தலங்களும் ஜோராலா கோட்டை போன்ற சுற்றுலாத் தலங்களும் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.

(A)

(A)

Mufaddal Abdul Hussain

இண்டஸ் நதிக்கரையில் அமைந்துள்ள லடாக் தி லாஸ்ட் ஷங்ரி லா, குட்டி திபெத் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் அருகே அல்ச்சி, நூப்ரா பள்ளத்தாக்கு, லமயுரு, சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, ஹெமிஸ், பன்கொங்க் சோ, சோ கர், கார்கில் போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. பணிகளின் மத்தியில் ஓடும் ஏரிகளும், மனதை மயக்கும் இயற்கை காட்சிகளும் ஒட்டுமொத்த உடலையும் ஈர்த்துவிடும்.

அருகில் என்னனென்ன இருக்கு தெரியுமா?

அருகில் என்னனென்ன இருக்கு தெரியுமா?

ShikaraIV2

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லடாக் பகுதியினைச் சுற்றி ஜம்மு- காஷ்மீருக்கு உட்பட்டு ட்ரக்கிங், ஸ்ரீநகர், தோட்டங்கள், மஹால், கோட்டை, ஏரி, பள்ளத்தாக்கு என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. முறையாக திட்டமிட்டு சென்றுள்ளீர்கள் என்றால் ஒரு வார காலம் இங்கு தங்கி முழுமையாக அனுபவித்து வர ஏற்ற இடமாகும்.

சாடர் ட்ரக்கிங் பாய்ன்ட்

சாடர் ட்ரக்கிங் பாய்ன்ட்

தில்லியில் இருந்து சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவிலும், லடாக்கில் இருந்து 780 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது சாடர் மலை. மலை ஏற்றத்திற்கு ஏற்ற சூழ்நிலையும், பசுமைக் காடுகளும் நகர வாசிகள் மத்தியில் பெரிதும் ஈர்க்கக் கூடிய பகுதியாகும். மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள ஏரி, அருகில் உள்ள சிம்லா, பர்மனா உள்ளிட்ட புகழ்பெற்ற பணிப் பிரதேசங்களையும் இந்தப் பயணத்தில் கண்டு ரசிக்கலாம்.

ஶ்ரீநகர்

ஶ்ரீநகர்

Hazratbal

லடாக்கில் இருந்து சுமார் 815 கிலோ மீட்டர் தொலைவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மிக அழகிய நகரம் ஸ்ரீநகர். ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரில் ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கணைக்கவரும் வகையிலான எண்ணற்ற முகலாய தோட்டங்கள் உள்ளன.

மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மசூதிகளும், கோவில்களும் இந்த பயணத்தை பொழுதுபோக்காக மட்டுமின்றி ஆன்மிகப் பயணமாகவும், கலாச்சாரத்தை அறிந்துகொள்ளவும் உதவும். மேலும், உலகம் முழுவதுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகலாய தோட்டங்களான நிஷாத் பூங்கா, ஷாலிமார் பூங்கா, அச்சாபல் பூங்கா, சஸ்மா சாஹி மற்றும் பாரி மஹால் ஆகியவையும் இந்த நகரத்தில் உள்ளன.

டல்ஹவுசி

டல்ஹவுசி

ஸ்ரீநகரில் இருந்து சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டல்ஹவுசியில் இஸ்காட்டிய மற்றும் விக்டோரிய கலை நுணுக்கங்களுடன் கூடைய பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. பண்டைய இந்து மதத்தின் கலாச்சார அடையாளங்களான கலைகள், கோவில்கள், மற்றும் கைவினை பொருட்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வரும் களஞ்சியமாகவும் கலாச்சார மையமாகவும் இது விளங்குகிறது. புல்வெளிகள், மலைச்சரிவுகள் உள்ளிட்டவை பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை இப்பகுதியை நோக்கி ஈர்க்கிறது.

பூக்கள் அணிவகுக்கும் தோட்டங்கள்

பூக்கள் அணிவகுக்கும் தோட்டங்கள்

Nikhil S

லடாக், ஜம்மு- காஷ்மீர் பகுதியினைச் சுற்றிலும், ஷாலிமர் முகலாயர் தோட்டம், நிஷாந்த் முகலாயர் தோட்டம், சேஸ்மிஷாகி முகலாயர் தோட்டம், பாதம்வாரி தோட்டம், வீர்நாக் முகலாயர் தோட்டம் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சிறந்த பகுதிகளாகும். இவை, உங்களது குழந்தைகளுக்கு பயணத்தால் ஏற்பட்ட சோர்வை நீக்கி உற்சாகம் அடையச் செய்யும்.

பாரி மஹால்

பாரி மஹால்

Basharat Shah

டல்ஹவுசியில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் ஜம்முவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது பாரி மஹால். குன்டிலான் என்றழைக்கப்படும் இந்த மஹால், ஸ்ரீ நகரின் சஸ்ம்-இ-ஷாஹி தோட்டங்களுக்கு மேலே உள்ளது. தால் ஏரிக்கு தென்மேற்காக அமைந்திருக்கும் இந்த தோட்டம் 6 தளங்களைக் கொண்டிருக்கிறது. நீர்த்தொட்டிகள், நீரூற்று, பழங்கள் மற்றும் பூக்களைத் தாய்கிய புல்வெளிப் பரப்புகள் பசுமை போர்த்தி காணப்படும்.

குஃப்ரீ

குஃப்ரீ

MikeLynch

ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குஃப்ரீ ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்தது. இங்குள்ள மலைமீது குதிரைச் சவாரியின் மூலம் உச்சியை அடைவது உற்சாகமான அனுபவமாக இருக்கும். மலையின் உச்சியில் பனி சூழப்பட்ட இமயமலையின் அற்புதமான காட்சி ரம்மியமானதாகும்.

மணாலி

மணாலி

wikipedia

சாடர் மலைப் பகுதியில் இருந்து சுமார் 320 கிலோ மீட்டர் இடர்ந்த மலைகளின் நடுவே உள்ளது மணாலி. இந்தியாவில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. மணாலி அடுத்த ரோதாங் பாஸ் சென்றால் அங்கு பனி படர்ந்த இமய மலையைக் காணலாம். மேலும், மணாலியில் உள்ள பனிக்கட்டிகள் மீது சறுக்கு விளையாடுவது புது அனுபவமாக இருக்கும்.

அமர்நாத் கோவில்

அமர்நாத் கோவில்

Gktambe

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஸ்ரீநகரில் இருந்து 132 கிலோ மீட்டர் பணிகள் நிறைந்த மலை வழியாகச் சென்றால் இந்துக் குடைவரைக் கோவிலான அமர்நாத்தை அடையலாம். அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் உள்ள சிவலிங்க பனிக்கட்டிச் சிலையைக் காண உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்துசெல்வர்.

தவறவிடக்கூடாத முக்கிய இடம்

தவறவிடக்கூடாத முக்கிய இடம்

Wikipedia

காஷ்மீரிலுள்ள குல்மார்க் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்ற இடாகும். சுமார் 8,800 அடி உயரத்தில் ஸ்ரீநகரில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஸ்ரீநகரிலிருந்து காரில் இரண்டு மணி நேரப் பயணத்தில் குல்மார்க்கை அடையலாம். கேபிள் காரும், குளிரான சூழலும், அற்புதமான பனிச் சறுக்குத் தளமும் குல்மார்க் உங்களை வசியம் செய்யும்.

Read more about: ladakh, srinagar