Search
  • Follow NativePlanet
Share
» »ஆயிரம் ஆண்டு பழமையான ஆழ்வான் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

ஆயிரம் ஆண்டு பழமையான ஆழ்வான் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

இந்தியா முழுவதிலும் விஷ்ணு திருத்தலங்கள் உள்ளன. இவற்றை விடுத்து மேலும் பல பகுதிகளில் ஆழ்வார்க்கு பிரசிதிபெற்ற கோவில் உள்ளது. அப்படியொரு கோவில் குறித்தும், எங்கே, எப்படியுள்ளது என்பதையும் வாங்க பார்க்க

Shinekarthikeyan

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாக போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில் சூரியனோடு தொடர்புடைய தெய்வமாக விஷ்ணு போற்றப்படுகிறார். இவரை முதற் கடவுளாக வழிபடும் சமயம் வைணவ சமயம் ஆகும். இந்தியா முழுவதிலும் இந்த விஷ்ணு திருத்தலங்கள் உள்ளன. இவற்றை விடுத்து மேலும் பல பகுதிகளில் ஆழ்வார்க்கு பிரசிதிபெற்ற கோவில் உள்ளது. அப்படியொரு கோவில் குறித்தும், எங்கே, எப்படியுள்ளது என்பதையும் வாங்க பார்க்கலாம்.

புராண அபிமான தலங்கள்

புராண அபிமான தலங்கள்

PC : Bjørn Christian Tørrissen

பன்னிரு ஆழ்வார்களால் போற்றப்பெற்ற திருத்தலங்கள் 108. இவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. மற்றதாக 108 திவ்ய தேசங்கள் அன்றி மற்ற புராண அபிமான தலங்களும் பல உள்ளன. வேத காலத்திற்குப் பின்னர் இவரது வழிபாடு மூன்று பெயர்களின் செயல்பாட்டில் இருந்தது. மனித கடவுள் என்ற நிலையில் வாசுதேவனாகவும், சூரியக்கடவுள் என்ற நிலையில் விஷ்ணுவாகவும், பிரபஞ்சக்கடவுள் என்ற நிலையில் நாராயணனாகவும் இவர் வழிபடப்பட்டு வருகிறார். இதில், ஒன்றுதான் கேரளாவில் உள்ள பழமையான விஷ்ணு கோவில்.

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?

PC : L. Shyamal

வயநாடு பகுதியில் பிரம்மகிரி மலைக்கு அருகில் அமைந்துள்ளது திருநெல்லி கோவில். விஷ்ணு பகவானுக்கான பழமையான கோவில்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. வயநாடு பகுதியிலிருந்து 900 மீட்டர் தூரத்தில் உள்ள எழில் நிறைந்த சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகள் சூழ, பசுமை நிறைந்த காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த கோவில் உலகப் புகழ் பெற்றதாவும் உள்ளது.

அப்படி என்ன சிறப்பு ?

அப்படி என்ன சிறப்பு ?

Map

திருநெல்லியில் நான்கு புறங்களிலும் மலைகள், நடுவே விஷ்ணு என இதன் இருப்பிட முக்கியத்துவத்தின் காரணமாக இந்துக்கள் மத்தியில் இது முக்கியமான ஆன்மீகத் தலமாக உள்ளது. கோவிலைச் சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுவதால் இதனைச் சென்றடைவது சற்றே மலைக்க வைக்கும் கடின பயணமாகத்தான் இருக்கும்.

வரலாறு அற்றது

வரலாறு அற்றது

PC : Augustus Binu

இந்த விஷ்ணு கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த பதிவுகள் ஏதும் இல்லை. எனினும் இது மிகப் புராதானமான பழமை வாய்ந்தது எனும் கருத்துகள் நிலவுகின்றன. 962 - 1019-ம் ஆண்டிலேயே இக்கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே தென்னிந்தியா முழுக்க பக்தர்கள் மத்தியில் பூஜிக்கப்பட்ட ஒரு கோயில் தலமாக இது விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்து போன நூற்றாண்டுகளின் ஊடாக நீண்ட காலம் பயணித்து இன்றும் நம் மத்தியில் வீற்றிருக்கும் இந்தக் கோவிலின் தரிசனம் நம் உணர்வுகளை தீண்டி சிலிர்க்க வைக்கிறது.

அருகில் என்னவெல்லாம் உள்ளது ?

அருகில் என்னவெல்லாம் உள்ளது ?

PC : neelimala hills

வயநாட்டில் அமைந்துள்ள திருநெல்லி பகுதியைச் சுற்றிலும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதில், பூக்கோட் ஏரி, பாணாசுர சாகர் அணை, நீலிமலா மலைக்காட்சி தளம், குருவா டிவீப், ஃபாண்டம் ராக் போன்றவை தவறவிடக் கூடாத தலங்களாகும்.

பூக்கோட் ஏரி

பூக்கோட் ஏரி

PC : Irshadpp

பூக்கோட் ஏரி நன்னீர் ஏரி வயநாடு பகுதியில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றாகும். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இதன் எழில்கொஞ்சும் அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் வரவது வழக்கம். அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் இந்த ஏரி கேரளாவில் பிக்னிக் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் புகழ் பெற்றுள்ளது. அப்புறம் என்னங்க, நீங்க புதுமணத் தம்பதியா இருந்தா இங்க ஒரு சின்ன ஹணிமூன் போய் பாருங்களேன்.

பாணாசுர சாகர் அணை

பாணாசுர சாகர் அணை

PC : Vaibhavcho

பாணாசுர சாகர் அணை கல்பெட்டா நகரிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில், கபினி ஆற்றின் துணை ஆறு ஒன்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய ‘கரைத்தடுப்பு அணை' எனும் பெயரைப் பெற்றுள்ள பாணாசுர சாகர் அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கரைத்தடுப்பு அணை எனும் பெருமையையும் பெற்றுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மலையேற்றத்தில் ஈடுபட விரும்பும் சாகசப்பயணிகள் இந்த அணைப் பகுதியிலிருந்துதான் தங்கள் பயணத்தை துவங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலிமலா மலைக்காட்சி தளம்

நீலிமலா மலைக்காட்சி தளம்

PC : neelimala hills

வயநாடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பயணப்படும் தலங்களில் நீலிமலா மலைக்காட்சி தளமும் ஒன்றாகும். சாகசப்பொழுதுபோக்கு விளையாட்டு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றது. மலைக்காட்சி தளத்தை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதையின் வழியே ஏறும்போது ரம்மியமான இயற்கைக் காட்சிகளை நாலாபுறமும் பார்த்து ரசிக்கலாம். நேரம் இருப்பின் கூடாரம் அமைத்து தங்குவதற்கும் இம்மலைப்பகுதி ஏற்றதாக உள்ளது.

குருவா டிவீப்

குருவா டிவீப்

PC : Rameshng

குருவா டிவீப் எனும் அழகிய ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. வயநாட் பகுதியின் முக்கிய ஆறாக இந்த கபினி ஓடுகிறது. பல அரிய வகைப் பறவைகளும் இந்த குருவா தீவுத்திட்டினை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. மருத்துவ குணங்கள் கொண்ட விசேஷமான மூலிகைச்செடிகள், ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் போன்றவற்றை இங்கு பயணிகள் காணலாம். இயற்கையின் செழிப்பை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் ரசனை உள்ளம் படைத்தவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும்.

ஃபாண்டம் ராக்

ஃபாண்டம் ராக்

PC : Sreejith K

‘ஃபாண்டம் ராக்' எனும் இந்த சுற்றுலா அம்சம் வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். ஃபாண்டம் ராக் என்பது இயற்கையாகவே மண்டையோட்டு வடிவத்தில் உருவாகியிருக்கும் ஒரு பாறை அமைப்பாகும். உள்ளூர் மக்கள் இதனை சீங்கேரி மலா அல்லது தலைப்பாறை என்று அழைக்கின்றனர். ஃபாண்டம் ராக் தலத்துக்கு அருகிலேயே கல்பெட்டா மற்றும் சுல்தான் பேட்டரி போன்ற இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களும் காணப்படுகின்றன. இந்த இரண்டு இடங்களும் ரம்மியமான இயற்கை எழில் காட்சிகள் பரந்து காட்சியளிக்கின்றன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X