Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்டெர்லைட் ஆலையினால இத்தனை இடங்கள் பாதிக்கப்படுதா ?

ஸ்டெர்லைட் ஆலையினால இத்தனை இடங்கள் பாதிக்கப்படுதா ?

சமீப காலமாக தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஓசை இந்த ஸ்ர்லைட்டுக்கு எதிரானது என நாம் அறிவோம். மண்ணின் வளங்களைப் பிரிப்பது மட்டுமின்றி, பல்வேறு நோய்களை இம்மண்ணில் வசிக்கும் நம் சக மனிதர்களுக்கு வித்திடும் இந்த ஆலையை மூட வலியுறுத்தி மாநிலமெங்கிலும் போராட்டம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைக்கவுள்ள ஆலைக்கு எதிராக ஒட்டுமொத்த மாநிலமும் எழுகின்றது என்றால் அப்படி அந்த ஆலையினால் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும் என நீங்கள் அறிவீர்களா ?.

தூத்துக்குடி

தூத்துக்குடி

தமிழகத்தில் தென்கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் ஒன்று தூத்துக்குடி. தென்னிந்தியாவில் பிரபலமான துறைமுக நகரம் இது. இந்திய அளவில் முத்துவிற்கும் பிரபலமாக தூத்துக்குடி உள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கே திருநெல்வேலி மாவட்டமும் மற்றும் அதன் கிழக்கில் ராமநாதபுரமும் விருதுநகரும் அமைந்துள்ளன.

Ramkumar

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

தூத்துக்குடி நகரம் பல பூங்காக்களுக்கு பெயர்பெற்றது. அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் ராஜாஜி பூங்கா, துறைமுகம் பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை. இதனையடுத்து கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும்.

Vkraja

முக்கிய சுற்றுலாத் தலங்கள்

முக்கிய சுற்றுலாத் தலங்கள்

தூத்துக்குடியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், மானப்பாடு, கழுகுமலை, ஒட்டபிடாரம், எட்டயபுரம், கொற்கை ஆதிச்ச நல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்கி, நவ திருப்பதி போன்ற பல முக்கியச் சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இதில், மலையை குடைந்து கட்டிய ஜெயின் கோவில் அமைந்துள்ள கழுகு மலை, கொற்கை குளம் போன்றவை பிரபலமான சுற்றுலாத் தலங்கள்.

Booradleyp

நவ திருப்பதி

நவ திருப்பதி

நவ திருப்பதி கோவில்கள் என்பவை 9 கோவில்களை உள்ளடக்கியது. இவை விஷ்னு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும். இக்கோவில்கள் தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன. இவை 108 திவ்ய தேசங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்கதாகவும் விலங்குகிறது. இந்த 9 கோவில்களுக்கான பயணம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து ஆழ்வார்திரு நகரில் நிறைவு பெறுகிறது.

Ssriram mt

கொற்கை

கொற்கை

திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி இடையே அமைந்துள்ள ஒரு கிராமம் கொற்கை. இக்கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் கொற்கை குளமானது அமைந்துள்ளது. பாண்டிய பரம்பரையின் ஆட்சியின் போது கொற்கை கிராமமானது மிகவும் பிரபலமான துறைமுகமாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம்

சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம்

சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் ஆய்வுகளை ஊக்குவிக்க நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்திய கடலோர வாழ் மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே பவழப்பாறைகள் மறுசீரமைப்பு, போன்ற பணிகள் நடைபெறுகிறது.

tuticorin-rc-cmfri

மணப்பாடு கடற்கரை

மணப்பாடு கடற்கரை

மணப்பாடு கடற்கரை மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள தேவாலயமானது திருச்செந்தூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் கன்னியாக்குமரியில் இருந்து 70 கிலோ மிட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 1581 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம், புனித சிலுவை தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள சிலுவையின் குறுக்கு கட்டைகள் ஜெருசலேம் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று கூறப்படுகிறது.

Sa.balamurugan

நேரு பூங்கா

நேரு பூங்கா

நேரு பூங்கா நகரத்தின் வடக்கு பகுதியில் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. முன்பு இப்பூங்கா கோட்ஸ் இந்தியா-வினால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இதை நகராட்சி பராமரித்து வருகிறது. தற்போது இது நேரு பூங்கா, ராஜாஜி பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூங்கா உள்ளூர் வாசிகள் மத்தியில் பிரபலமானது. ஏனெனில் இங்கு ஒரு பெரிய நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது.

Ersivakm

என்னவாகும் ?

என்னவாகும் ?

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாம் பிற மாவட்ட, மாநில மக்களை தூத்துக்குடி வசம் ஈர்க்கும் சுற்றுலாத் தலங்கள் மட்டுமே. இதைத் தவிர இன்னும் எத்தனை எத்தனையோ பல வரலாற்றுத் தலங்களும், வாழவேண்டிய மக்களும் தூத்துக்குடியில் நிறைந்து காணப்படுகின்றனர். ஸ்டெர்லைட் போன்ற உயிர்க்கொல்லி ஆலைகளை நிறுவுவதன் மூலம் அப்பகுதி முழுவதும் சிதைக்கப்படும் என ஆய்வியல் வல்லுனர்களால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அம்மக்களுக்கான வாழ்வாதாரத்தை நிலைநாட்ட ஒன்றிணைவோம்.

Begoon

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

மாநிலத்தின் மற்ற எல்லா பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் விமான நிலையம் உள்ளது. தூத்துக்குடியில் அடிமைந்துள்ள ரயில் நிலையம் தென் இந்தியாவின் பல நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் இருந்து தமிழகத்தின் மற்ற மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்படுகின்றன.

Trinidade

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more