» »கக்கூசுக்கு எல்லாமா கண்காட்சி..! தில்லியில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்!

கக்கூசுக்கு எல்லாமா கண்காட்சி..! தில்லியில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்!

Written By:

மலக் கழிவுகளை இயற்கையின் மத்தியில் கழித்து வாழ்ந்த ஆதிமனிதன், காலப்போக்கில் நாகரீக, விஞ்ஞான வளர்ச்சியடைந்து தனக்கென தனிவீடு கட்டி வசிக்க ஆரம்பித்த பின்பு அதே வீட்டில் படுக்கை அறை, உணவு அறை, பூஜை அறை, கழிப்பறை என பிரித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இதனால் இயற்கையில் மலம் கழித்துவந்த மனித இனம் அவசரகாலத் தேவையின் காரணத்தினாலும், நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும் தன் வீட்டிற்குள்ளேயே அனைத்து வேலைகளையும் முடித்துக்கொள்கிறது. நம்நாட்டில் தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி விதவிதமான கடைகள் பல இருந்தாலும், கழிப்பறை மட்டும் நமக்கு வேண்டிய இடத்தில், நாம் தேடும் இடத்தில் இருப்பதில்லை. இதனால் பலர் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு புறப்பட வேண்டிய கட்டாயம். இப்படி, மனிதனின் பரினாமத்துடன் இணைந்தே வளர்ந்து வரும் கழிப்பறைகள் தற்போது எந்த நிலமையில் உள்ளது என ஆராயும் தளம் இதுவல்ல. ஆனால், உலக நாடுகளே உற்று நோக்கும் அளவிற்கு இந்தியாவில் கழிப்பறைக்கான, கழிப்பறைக்கு மட்டுமேயான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா ?.

கழிவறை வரலாறு

கழிவறை வரலாறு


கழிவறைக்கான காட்சியகத்தை பார்வையிடும் முன், அதுகுறித்தான வரலாற்று சற்று அறிந்துவிட்டு செல்வது இன்னமும் மேலானதாக இருக்கும் அல்லவா! உடல் கழிவுகளான மலம், சிறுநீர் ஆகியவற்றை உடலிருந்து அகற்றுவது மனிதனின் அன்றாட தேவைகளில் கட்டாயமான ஒன்று. பிற நாடுகளில் 1800 ஆம் ஆண்டுக்கு முன்பு திறந்தவெளி இடத்தில் மனிதன் கழிவுகளை அகற்றினான். சில நாடுகளில் தொட்டி போன்ற அமைப்பு கழிவறையாக காணப்பட்டது. அதற்குப் பின்னரே தற்போது நாம் பயன்படுத்துவதைப் போல் அமைப்பைக் கொண்ட கழிவறை முறை அறிமுகமானது.

Wolfmann

வகைவகையான கழிவறை

வகைவகையான கழிவறை


பொதுவாக கழிவறைகள் தற்போது பல வகைகளில் காணப்படுகிறது. உலர் கழிப்பறை, உரக் குழிக் கழிப்பறை, ஈரக் கழிப்பறை, குழிக் கழிப்பறை, பிளேர் கழிப்பறை, செப்டிக் டேங்க் கழிப்பறை, உறிஞ்சு குழிக் கழிப்பறை என இன்னும் பலவகைகளில் மாறுபட்டு காணப்படுகிறது. இதில் நாம் பெரிதும் பயன்படுத்துவது குழிக் கழிவறைதான். இது தரையில் அமைக்கப்பட்டுள்ள துளையில் மனிதக் கழிவுகள் சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை ஆகும். தற்போது வெஸ்ட்டர்ன் என்னும் உறிஞ்சு குழிக் கழிப்பறையும் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

vegafish

இதுக்கெல்லாமா மியூசியம்!

இதுக்கெல்லாமா மியூசியம்!


மன்னர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கான மியூசியம், விலங்கியல் மியூசியம், பன்டையகால பொருட்களுக்கான மியூசியம், புத்தக மியூசியம், பூச்சிகளுக்கான மியூசியம், ஓவியங்களுக்கான மியூசியம் என இன்னும் எத்தனை எத்தனையோ மியூசியங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கழிப்பறை மியூசியம் குறித்து யாரேனும் கேள்விப்பட்டது உண்டா?. அப்படி இல்லையென்றால் தொடர்ந்து படித்து அதுகுறித்தான பல தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

Arunvrparavur

கழிப்பறைகள் அருங்காட்சியகம்

கழிப்பறைகள் அருங்காட்சியகம்


சுலப் பன்னாட்டு கழிப்பறைகள் அருங்காட்சியகம் என்பது சுலப் என்னும் சர்வதேச அமைப்பினால் உலக நலவாழ்வு வரலாறு மற்றும் கழிப்பறைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு துவங்கப்பட்ட மியூசியம் ஆகும். இது தில்லியில் அமைந்துள்ளது. உலகில் வினோதமான அருங்காட்சியகங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்த அருங்காட்சியகத்துக்கு மூன்றாவது இடம் என்றால் நமக்கும் கொஞ்சம் பெருமைதானே.

Fubar Obfusco

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்


1992-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் கழிப்பறையின் 4,500 ஆண்டுகால உலக வரலாற்றைத் தாங்கி நிற்கிறது என்றால் மிகையாகாது. அப்படி என்னதான் இங்க இருக்குதுன்னு கேக்குறீங்களா..! இங்கு சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த, கி.மு 3 ஆயிரம் முதல் 20-ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான காலக்கட்டத்தைச் சேர்ந்த நலவாழ்வு கலைப் பொருட்களை காலவரிசைப்படி பண்டைய காலம், இடைக் காலம், நவீன காலம்-ன்னு மூன்று பிரிவுகளாக கழிப்பறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

DeFacto

கழிப்பறைக் கவிதைகள்!

கழிப்பறைக் கவிதைகள்!


சுலப் பன்னாட்டு கழிப்பறைகள் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டவைகளைக் கொண்டு மனித வரலாறு, சமுதாயம், பழக்கவழக்கம், கழிவறை தொடர்புடைய தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவற்றை அறிய முடிகிறது. அடுமட்டும் இல்லைங்க. இந்த அருங்காட்சியகத்துள மரம், இரும்பு, பீங்கான் போன்ற வெவ்வேறு பொருட்களைக் கொண்டு கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்ட அலகிய கழிப்பிட அறை, fவர்ந்திழுக்கும் விக்டோரியா கழிப்பறை உள்ளிட்டவையும் இங்கே நம் பார்வைக்காக வைக்கப்பட்டள்ளன. அதிலும் குறிப்பா, கழிப்பறை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கவிதைகளையும் இங்கே எழுதி வச்சுருக்காங்கன்னா சும்மாவா...

John Hill

கழிப்பறையில இத்தன ஐட்டமா..!

கழிப்பறையில இத்தன ஐட்டமா..!


உலகிலேயே பழமையான நாகரீகத்துல ஒன்றாக உள்ள சிந்து சமவெளி நாகரீக காலத்தில் பயண்படுத்தப்பட்ட வடிகால் கழிப்பறை மற்றும் கழிவுநீர் வெளியேற்று அமைப்பு இங்கு தெளிவா விளக்கப்பட்பட்டுள்ளது. கி.மு. 2500 ஆண்டுகளில் ஹரப்பா, மொகஞ்சதாரோ காலகட்ட கிணறு, குளியல் தொட்டி உள்ளிட்டவைகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படி உள்நாட்டு கழிப்பறைகள் மட்டும் இல்லை. வெளிநாடுகளான பிரெஞ்சில், மன்னர் பதினாறாம் லூயி பயன்படுத்திய வித்தியாசமான கழிப்பிட மாதிரி, அதேப்போல நீர்முழ்கிக் கப்பலில் பயன்படுத்த ஏதுவான அமெரிக்கக் கடற்படை வடிவமைத்த இன்கினோலெட் என்னும் மின்சாரக் கழிப்பிடம் உள்ளிட்டவையும் இங்கே உள்ளது. இதில் ஆச்சரியப்படக்கூடிய விசயம், இன்கினோலெட் கழிப்பிடத்துல கக்கா போய்ட்டு ஒரு பட்டனை அழுத்தினால் கழிவுகள் எல்லாம் எரிந்து சாம்பல் ஆகிவிடுவதுதான்.

Wikipedia

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சுலப் பன்னாட்டு கழிப்பறைகள் அருங்காட்சியகம் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் மகாவீர் என்கிளேவ் பகுதியில் அமைந்துள்ளது. ஜனக்புரி, தார்பி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மூலம் இதனை அடையலாம். ஷாகாபாத் மொகமத்பூர், ரங்புரி உள்ளிட்ட ரயில் நிலையம் இதனருகே உள்ளது. விமான நிலையம் மற்றும், ரயில் நிலையத்தில் இருந்து கழிவறை அருங்காட்சியகத்தை தனியார் வாகனங்கள் மூலம் எளிதில் அடையலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்