» »உத்தரகண்ட்டில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய சாகசப் பயணம் #சாகசஉலா 3

உத்தரகண்ட்டில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய சாகசப் பயணம் #சாகசஉலா 3

Written By: Udhaya

இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலம் மிகவும் சிறப்பானது. இந்துக்களின் முக்கிய வழிபடு தளங்கள் நிறைய இந்த மாநிலத்தில்தான் இருக்கிறது. இந்த இடங்களுக்கு செல்வதே ஒரு சாகசப் பயணம்தான். அதை தவிர்த்து நிறைய இடங்கள் சாகசம் செய்வதற்கு தோதுவாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட இடங்களுக்கு பயணிக்கலாமா?

கேம்ப் எனப்படும் முகாமிடுதல்

கேம்ப் எனப்படும் முகாமிடுதல்

உத்தரகண்ட்டில் முகாமிட நீங்கள் யோசித்தீர்கள் என்றால் அதற்கு நிச்சயமாக தகுதியான இடம் ராம்நகர்தான். ராம்கரில் முகாமிடுவது சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்றதாகும். அதற்கு மிகவும் தோதாக அமைந்துள்ளது கோசி ஆறு. பச்சை பசுமையும் ஓவியம் போன்ற இயற்கை அழகும் கொண்ட இந்த இடத்தில் முகாமிடுவது ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். உங்கள் அன்புற்குரியவர்களுடன் பேசி மகிழவும், காதலுக்குரியவர்களுடன் தனிமையில் குதூகலிக்கவும் இந்த இடம் சிறப்பானதாக அமையும்.
J.M.Garg

மலையேற்றம்

மலையேற்றம்


டிரெக்கிங் என்று அழைக்கப்படும் மலையேற்றத்துக்கு சிறந்த இடமாக நாம் தேர்ந்தெடுப்பது கோமுக். கோமுக்கில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடவே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மிக பிரசித்தி பெற்ற மலையேற்றப் பாதையான கங்கோதரி 22 கிமீ பரவி இறுதியில் கோமுக்கில் முடிவு பெறுகிறது. டோப்பவன் மற்றும் நந்தன்வன் பகுதிகளுக்குச் செல்லும் மலையேற்றப் பாதைகளும் கோமுக்கிலிருந்து தொடங்குகின்றன. இந்த பகுதியில் மலையேற்றம் செய்வது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இங்கு அடிக்கடி பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும். எனவே வழிகாட்டிகளின் உதவியோடுதான் சுற்றுலா பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும்.
Kkmd

ஆலியில் ஓர் டிரெக்கிங்

ஆலியில் ஓர் டிரெக்கிங்

கோமும் மட்டுமல்ல ஆலி எனும் இடமும் டிரெக்கிங் செல்வதற்கு பெயர் பெற்ற இடமாகும். ஆலியில் பனிச்சறுக்கு செய்வது தவிர மலையேற்றம் செய்வதும் மற்றுமொரு முதன்மையான சுற்றுலா நடவடிக்கையாக மலையேற்றம் இருக்கிறது. பிரமிக்க வைக்கும் இமயமலைத் தொடர்களில் மலையேற்றம் செய்ய மிகவும் ஏற்ற வகையிலான சரிவுகளை ஆலி கொண்டிருக்கிறது. இங்குள்ள 3 கிமீ நீளமுடைய ஒரு மலையேற்ற பாதையில் சுற்றுலாப் பயணிகள் இமயமலையின் அற்புதமான சுற்றுவட்டக் காட்சிகளை காண இயலும்.

Unknown

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

ரிஷிகேஷில் புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்குகளில் மலையேற்றமும் ஒன்றாகும். தாலிசைன்யில் இருந்து பெளரி வழியாகச் செல்லும் கார்வால் இமாலயத் தொடர் இங்கிருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதையாகும்.

புவானி நீர்குட்டில் இருக்கும் சிறிய மலையேற்றப் பாதையையும் வார இறுதிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பகுதிகளில் மலையேறுவது சுலபமாக இருப்பதால் அவ்வளவாக உடல் வலிமை இல்லாதவர்கள் கூட மலையேற்றத்தில் பங்கு கொண்டு மகிழலாம்.

Amit.pratap1988

 கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்காவில் நீங்கள் செய்யும் யானை சவாரி உங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த யானை சவாரிகள் உங்களை காட்டின் மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகளுக்கும் மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் கானக தாவர இனங்களைப் பார்க்கும் வாய்ப்பினை கொடுக்கும். பழக்கப் படுத்தப்பட்ட யானைகளில் இந்த தேசியப் பூங்காவின் இண்டு இடுக்குகளையும் நன்றாக அறிந்த திறமையான பாகன்கள் உங்களை யானை சவாரிக்கு அழைத்துச் செல்வார்கள். பிஜ்ரானி மற்றும் திக்காலா பகுதிகளில் நியாயமான விலைகளில் யானை சவாரி செய்யும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளான இந்த தேசிய பூங்காவின் குமேரியா மற்றும் ரிங்கோடா ஆகிய இடங்களிலும் சவாரியை நீங்கள் அனுபவித்திட முடியும்.
Vikram Gupchup

பவுரியில் மீன்பிடித்தல்

பவுரியில் மீன்பிடித்தல்

பவுரியில் இருக்கும் முக்கியமான அம்சம் மீன்பிடித்தல் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு பாய்ந்து வரும் நாயர் ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்து மகிழலாம்.

மேலும் இந்த ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடலாம். நாயர் பள்ளத்தாக்கு இயற்கை அழகால் நிறைந்திருக்கிறது. இங்கிருக்கும் சத்புலி பகுதியிலும் மீன்பிடித்தலும், நீச்சலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

Kuarun

ராம்கர் மலையேற்றம்

ராம்கர் மலையேற்றம்

ராம்கரிலுள்ள மலை பகுதிகளில் மலை ஏறுதல் மற்றும் மலை இறங்குதல் போன்ற சாகசங்களில் ஈடுபடலாம். மலை ஏறுவதில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் சரி, இருப்பவர்களுக்கும் சரி, இந்த இடம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

Bhadan

நந்தவன் மற்றும் டோப்பவன்

நந்தவன் மற்றும் டோப்பவன்

நந்தவன் மற்றும் டோப்பவன் ஆகிய பகுதிகள் கங்கோதரி பனியாற்றுக்கு எதிர் திசையில் 6 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்றன. நந்தவன் பகுதியிலிருந்து ஷிவ்லிங், பகிரதி, கேடர் டோம், தலாய் சாகர் மற்றும் சதர்ஸனா போன்ற மலைச் சிகரங்களை மிகத் தெளிவாகக் கண்டு களிக்க முடியும். பனிச்சறுக்கு மூலம் சட்டோபேன்ட், கார்ச்குன்ட், களின்டி கால், மேரு மற்றும் கேடர்டோம் ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த நந்தவன் பகுதியில் கூடாரம் அடித்து தங்குவதுண்டு.

Barry Silver

கார்பெட் தேசிய பூங்காவில் மீன் பிடிப்பு

கார்பெட் தேசிய பூங்காவில் மீன் பிடிப்பு

கார்பெட் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான, பிரபலமான செயலாக மீன் பிடிப்பு விளங்குகிறது. மகாஷியர் வகை மீன்களை பிடிப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்களாக கோசி மற்றும் ராம்கங்கா நதிப்படுகைகள் உள்ளன.

இது மட்டுமல்லாமல், சிறப்பு மகாஷியர் மீன் பிடி சுற்றுப் பயணங்களும் ராம்கங்கா நதியில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஃப்ளை பிஷ்ஷிங் மற்றும் ஸ்பின்னிங் ஆகியவற்றையும் இங்கே பார்வையாளர்கள் அனுபவித்திட முடியும்.

இந்த தேசிய பூங்காவில் ராம்கார்ஹ், பன்சேஸ்வர் மற்றும் பின்சார் ஆகிய இடங்களில் மீன் பிடிப்புகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், மீன் பிடிப்பதற்கான அனுமதியை வனத்துறையிடமிருந்து பெறுவது அவசியம்.
Harnoor1996

கோசி ஆற்றில் மீன் பிடிப்பது

கோசி ஆற்றில் மீன் பிடிப்பது

கோசி ஆற்றில் மீன் பிடிப்பது நல்ல வேடிக்கையாக இருக்கும். இந்த ஆறு மகசீர் என்ற மீனின் இனப்பெருக்க மையமாக விளங்குகிறது. உள்ளூரில் இருக்கும் ஓய்வு விடுதிகள், கோசி ஆற்றில் மீன் பிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறது.

Arjunkhera

மோரியில் முகாமிடுதல்

மோரியில் முகாமிடுதல்

மோரிக்கு வரும் சுற்றுலாபயணிகளின் விருப்பமான செயலாக முகாமிடுதல் உள்ளது. டான்ஸ் நதிக்கரையில், அடர்ந்த பசுமையான காடுகளுடன் அமைந்துள்ள இந்த இடம் முகாம் அமைத்து தங்குவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இங்குள்ள சில விடுதிகளில் முகாம் அமைப்பதற்கு தேவையான வசதிகள் நியாயமான விலைகளில் செய்து தரப்படுகின்றன. போன்பையர் மற்றும் திறந்தவெளி விருந்துகளுடன் இந்த பகுதியின் ஜில்லென்ற இரவுகளை முகாம்களில் கழித்திட முடியும்.
Paxson Woelber

 மோரியில் மலையேற்றம்

மோரியில் மலையேற்றம்


மோரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் பிரபலமான செயலாக மலையேற்றம் உள்ளது. இங்கிருக்கும் ஹர்-கி-டூன் பள்ளத்தாக்கு மற்றும் பிற வழிப்பாதைகள் மலையேற்றத்திற்கு மிகவும் புகழ் பெற்றிருக்கின்றன.

இந்த இடத்தில் நடத்தப்படும் இயற்கை நடைபயணமும் மறக்க இயலாத அனுபவமாக கருதப்படுகிறது. எனினும், சுற்றுலாப் பயணிகள் மலையேற்றத்திற்கு தேவையான உபகரணங்களை கொண்டு வருவது நல்லது.

netlancer2006

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்