Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஒரு விசயத்துக்காகவே வாகமனுக்கு போய்வரலாம்...!

இந்த ஒரு விசயத்துக்காகவே வாகமனுக்கு போய்வரலாம்...!

கேரளா... ஆண்டுமுழுக்க பேசினாலும் அதன் அழகை சொல்லிமாலாது. அள்ளஅள்ள குறையாத பொக்கிஷம் போல எண்ணற்ற பசுமைப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளம். வீக்கெண்டு விடுமுறைனாலும் சரி, பிக்னிக் முதல் ஹனிமூன் ஆனாலும் சரி. கடற்கரை, மலைப் பிரதேசம், கோட்டை, கோவில் என அனைத்துவிதமான சுற்றுலாத் தலங்களையும் தன்னுள் கொண்டுள்ள மாநிலம் இது.

மலைப்பிரதேசங்கள்

மலைப்பிரதேசங்கள்

கேரளாவில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில், இளைஞர்களையும், மலையேற்ற சாகர விரும்பிகளையும் பெரிதும ஈர்ப்பது மூணார், வயநாடு, வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள். சரி, இவற்றையெல்லாம் கடந்து நாகரீகமடைந்த சீராக வெட்டிய சமவெளிக்காடு போல காட்சியளிக்கும் வாகமனுக்கு நீங்க போனதுண்டா ?

Sajetpa

வாகமன்

வாகமன்

இயற்கை அழகு தவழும் கேரள மாநிலத்தில் இடுக்கி- கோட்டயம் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது வாகமன் என்னும் அற்புதமான மலைப் பிரதேசம். கடல் மட்டத்தில் இருந்து 1,100 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு முதன்முதலில் வந்து குடியேறியது ஆங்கிலேயர்கள் தான். உலகின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான 'நேஷனல் கியோகிராபியால்' இந்தியாவில் இருக்கும் சிறந்த 50 சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக வாகமனையும் தேர்வு செய்துள்ளது.

Anand2202

பசுமைத் தோட்டங்கள்

பசுமைத் தோட்டங்கள்

தேயிலை தோட்டங்கள் பயிரிடுவதற்கு உகந்த சூழலை இவ்விடம் கொண்டிருப்பதால் தேயிலை பயிரிடவும், பிறகு ஆங்கிலேய கிறித்துவ மிஷனரிகளும் வாகமனுக்கு வந்தன. இன்று வாகமன் முழுக்க எங்கு காணினும் பசுமை போர்வை போர்த்தியது போல தேயிலை தோட்டங்கள் இருப்பதை நாம் காணலாம்.

Jaseem Hamza

என்னவெல்லாம் உள்ளது ?

என்னவெல்லாம் உள்ளது ?

சுற்றுவட்டார பகுதிகள் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்திருப்பினும், இன்னும் வணிகமயத்தின் கைகளில் சிக்காமல் தன் இயற்கை அழகை தக்கவைத்திருக்கும் வாகமனில் சுற்றிப்பார்க்க ஏராளமான நல்லநல்ல இடங்கள் இருக்கின்றன. ஊசி மரக்காடுகள், அருவிகள், பசுமையான புல்வெளிகள் போன்றவையும், விதவிதமான ஆர்கிட் மலர்கள் உள்ள தோட்டங்களும் இருக்கின்றன.

Ashwin Kumar

சாகச விளையாட்டுகள்

சாகச விளையாட்டுகள்

கோடை காலங்களில் பாராகிளைடிங், மலையேற்றம், பாறை ஏறுதல் போன்ற சாகச விளையாட்டுகளும் வாகமனில் நடைபெறுகிறது. இங்கிருக்கும் குரிசுமலா என்ற மலை கத்தோலிக்க கிறித்தவர்களின் புனித தலமாக திகழ்கிறது. அதேபோல தாங்கள் மலை என்ற இடம் இஸ்லாமியர்களின் புனித இடமாக இருக்கிறது. இந்த மலையில் 'சூசைட் பாயின்ட்' ஒன்றும் இருக்கிறது. இந்த ஒரு விசயத்துக்காகவே வாகமனுக்கு போய்வரலாம்...!

Kokul Jose

தொட்டு தொட்டு பேசும் தென்றல்...

தொட்டு தொட்டு பேசும் தென்றல்...

வாகமனுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 முதல் 25 டிகிரி வெப்பநிலையே நிலவுவதால் வீசும் காற்று நம் உடலையும், மனதையும் உரையச்செய்யும். கால்களுக்கிடையே மிதக்கும் மேகங்களும், தேயிலை வாசமும்... காதல் கொண்டவராகவும், தேனீர் விரும்பியாகவும் இருந்தால் மனமாற்றம் செய்ய இதைத் தவிர வேறேதும் இடமில்லை. ரம்மியமான காதலை இங்கே அனுபவிக்கலாம்.

Jaseem Hamza

தேவதாரு மரக்காடு

தேவதாரு மரக்காடு

வாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும், சிறிதும் பெரிதுமான அருவிகளும், ஓடைகளுமாய் நிறைந்து காணப்படுகிறது. இதில் கவணிக்கப்படவேண்டிய விசயம், நகரத்தில் வாகன புகையின் மத்தியில் நரக வாழ்க்கை வாழும் நாம் வாகமனின் மாசுகலக்கா காற்றை பல நினைவுகளுடன் சுவாசிக்கலாம்.

Abhinavsharmamr

மர்மலா நீர்வீழ்ச்சி

மர்மலா நீர்வீழ்ச்சி

தனியார் தோட்டத்தினூடே சிறிது தூரம் நடைபயணம் சென்றால் மனதை மூழ்கடுக்கும் மர்மலா நீர்வீழ்ச்சியை அடையலாம். வாகனமனுக்கு உட்பட்ட அடர் வனப் பகுதியில் உருவாகும் நீர் பெருகி மீனாட்சி என்னும் காட்டாறாக உருவாகிறது. நீண்ட தூரம் பயணத்து வரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடுவதற்காகவே உள்ளூர் பயணிகள் சற்று அதிகளவில் அங்கு செல்வர்.

D momaya

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

வாகமன் குமிழியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. குறைவான செலவில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் வார விடுமுறையை சிறப்பாக செலவிட, எங்காவது சுற்றுலா செல்ல விரும்புகிறவர்கள் நிச்சயம் வாகமனுக்கு ஒருமுறை வரலாம்.

Faizalcec

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X