» »கோவாவில் இருக்கும் மிகவும் அழகான ரகசியமான இடத்தில் இருக்கும் கடற்கரையை பற்றி தெரியுமா?

கோவாவில் இருக்கும் மிகவும் அழகான ரகசியமான இடத்தில் இருக்கும் கடற்கரையை பற்றி தெரியுமா?

Written By: Staff

கோவாவை பொறுத்தவரை அங்குள்ள மக்கள் சில இடங்களை சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லாதவாறு பார்த்துக்கொள்வார்கள். நாமாக வழி கண்டுபிடித்து சென்றால் மட்டுமே கோவாவில் இருக்கும் சில ரகசியமான சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல முடியும். சுற்றுலா வழிகாட்டிகளோ, உள்ளூர் மக்களோ அப்படி ஓரிடம் இருப்பதாகவே காட்டிக்கொள்ளமாட்டார்கள். அந்த இடங்களின் அழகை சுற்றுலாப்பயணிகள் கெடுத்துவிடுவார்கள் என்பதே இப்படி செய்யக் காரணம் ஆகும்.

அதுபோல அதிகம்பேருக்கு தெரியாத கடற்கரையான 'Butterfly beach' என்னும் பட்டாம்பூச்சி கடற்கரையை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.    

எங்கே அமைந்திருக்கிறது?:

எங்கே அமைந்திருக்கிறது?:

கோவாவின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றான பலோலம் கடற்கரையில் இருந்து 6கி.மீ தொலைவில் இந்த Butterfly beach அமைந்திருக்கிறது.

கோவாவின் தலைநகரான மார்கோவில் இருந்து 37கி.மீ தொலைவில் இது உள்ளது.

Nicolas Mirguet

எப்படி அடைவது?:

எப்படி அடைவது?:

இந்த கடற்கரையை பலோலம் கடற்கரையில் இருந்து கப்பல் மூலமாகவும், அடர்ந்த காடுகள் வழியே ட்ரெக்கிங் செய்வதம் மூலம் மட்டுமே சென்றடைய முடியும்.

இந்த பகுதியில் அடர்த்தியான காடுகள் நிறைந்திருப்பதால் பட்டர்பிளை கடற்கரைக்கு செல்ல சாலைகள் கிடையாது.

Gili Chupak

கடற்கரையின் சிறப்புகள்:

கடற்கரையின் சிறப்புகள்:

இந்த கடற்கரையை ஒட்டியுள்ள கடல் மிகவும் ஆழமானதாகும். எனவே கடற்கரைக்கு மிக அருகே வரை டால்பின்கள் வருகின்றன.

கோவாவில் டால்பின்களை கண்டுரசிக்க மிகச்சிறந்த இடமென்று இதனை சொல்லலாம்.

Gili Chupak

கடற்கரையின் சிறப்புகள்:

கடற்கரையின் சிறப்புகள்:

கோவாவின் மற்ற கடற்கரைகளில் இருப்பது போல ரிசார்டுகளோ, கடைகளோ எதுவும் இங்கே இல்லை. எனவே இங்கே செல்லும்போதே குடிநீர், தேவையான அளவு உணவு மற்றும் நொறுகுத்தீனிகள் போன்றவற்றை எடுத்துச்செல்வது நல்லது.

Mathanki Kodavasal

கடற்கரையின் சிறப்புகள்:

கடற்கரையின் சிறப்புகள்:

மற்ற கோவா கடற்கரைகளை காட்டிலும் இங்கே கூட்டம் வெகுகுறைவாகத்தான் இருக்கும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ சென்று எவ்வித தொந்தரவும் இல்லாமல் ஒரு நாளை கொண்டாட பட்டர்பிளை கடற்கரை அற்புதமான ஓரிடமாகும்.

Gili Chupak

கடற்கரையின் சிறப்புகள்:

கடற்கரையின் சிறப்புகள்:

தேனிலவு கொண்டாட கோவாவில் இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது.

எனவே அடுத்த முறை கோவா சென்றால் நிச்சயம் படகு பயணம் மூலமோ ட்ரெக்கிங் மூலமோ இந்த கடற்கரைக்கு சென்று கொண்டாடி மகிழுங்கள். படகில் செல்ல ஒருவருக்கு கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படுகிறது.

Gili Chupak

எங்கே தங்குவது?:

எங்கே தங்குவது?:

பட்டர்பிளை கடற்கரைக்கு அருகில் உள்ள பலோலம் கடற்கரைக்கு அருகே ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் ரிசாட்டுகள் இருக்கின்றன.

பலோலம் ஹோட்டல் விவரங்களை இங்கே அறிந்துகொள்ளுங்கள்.

Sanjib Mitra