Search
  • Follow NativePlanet
Share
» »கனவில் வந்து அம்மன் சொன்னதால் அரிசி வியாபாரி கட்டிய கோயில்!

கனவில் வந்து அம்மன் சொன்னதால் அரிசி வியாபாரி கட்டிய கோயில்!

By Udhaya

தமிழ்நாட்டுல சுத்துரதுக்குன்னே சில சூப்பரான இடங்கல நம்ம முன்னோர்கள் ஆராய்ஞ்சி, போய் வாங்கி வந்து, இந்தந்த இடங்கள் இது இதுக்கு சூப்பர்னு சர்ட்டிபிகேட் குடுக்காத கொறயா செஞ்சி வச்சிருக்காங்க.. தமிழ்நாடு மட்டும் இல்ல இந்தியாவ ரவுண்ட் அடிக்கணும்னாலும், நமக்கு நாலு இடம் தெரிஞ்சிருக்கணுமா இல்லியா... எங்கப்ப்பா.. வீடு விட்டா ஆபிஸ், ஆபிஸ் விட்டா வீடுனு இருக்கோம். இதுல காலேஜ், ஸ்கூல் போற பசங்கலயும் எப்டி டிரிப் கூட்டிட்டு போறது. அதுதான உங்க பிரச்ன.. அதுக்குத்தான் வீக்கெண்ட் இருக்குல.. ஆறு நாளு அசால்ட்டா வேல செஞ்சி அடிச்சுபொறண்டு தூங்குறவங்களுக்கு இல்ல இந்த கட்டுரை. அட.. சன்னுக்கு ஏது சன்டேனு கிளம்பி.. எப்ப கூப்டாலும் ஊர் சுத்த கிளம்பிடுவீங்களா.. அப்ப நீங்க தான் வேணும். வாங்க வாங்க வாங்க.. ஒன்னா வீக்கெண்ட் டூர் போகலாம்.

டெஸ்டினேசன் ஆப் தி வீக் - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இலங்கையில் வாழ்ந்த நாகர் இன மக்களைக் குறிக்கும் சொல்லான "நாகர்" என்ற சொல்லும், நகரம் என்று பொருள்படும், பட்டினம் என்ற சொல்லும், இணைந்து இந்த நகருக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

rajaraman sundaram

 இங்குள்ள சுற்றுலாத் தளங்கள்

இங்குள்ள சுற்றுலாத் தளங்கள்

இங்கு அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். சௌந்தர்யராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காயாரோகணசுவாமி கோவில், ஆறுமுகசுவாமி கோவில், போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கொண்ட நகரமாக இது விளங்குகிறது. வேதாரண்யம் என்ற ஊரில் அமைந்திருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகூரில் 16 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த நாகூர் தர்கா ஆகியவை நாகப்பட்டனத்துக்கு அருகாமையில் உள்ள சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.

Chandrucommon

 நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். ஒரு அரிசி வியாபாரியின் கனவில்வந்த அம்மனின் விருப்பத்தை ஏற்று இக்கோவில் கட்டப்பட்டதாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடி வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்

Saminathan Suresh

 வேதாரண்யம்

வேதாரண்யம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஊர் இதுவாகும். இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தினால்தான் இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தது. பராந்தக சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஒரு சிவன் கோவிலாகும்.

இங்குள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண், ஆயுர்வேத மூலிகைக்காடு, வரலாற்றுப் புகழ்வாய்ந்த கலங்கரை விளக்கம், இராமர் பாதம், எட்டுக்குடி முருகன் கோவில், போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடங்களாகும்.

Marcus334

சௌந்தர்யராஜபெருமாள் கோவில்

சௌந்தர்யராஜபெருமாள் கோவில்

இக்கோவில் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்வாய்ந்த கோவில் ஆகும். இங்கு விஷ்ணுவின் அவதாரமான சௌந்தர்யராஜ பெருமாள் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள விக்கிரகங்கள் தங்கம் மற்றும் மரகதத்தால் இழைக்கப்பட்டுள்ளன. ஆதிசேஷ சுவாமியின் சிலை, நாகதேவதைகளின் சிலைகள், மற்றும் பல தெய்வங்களின் சிலைகள் இக்கோவில் வளாகத்தில் காணப்படுகின்றன. இக்கோவிலின் வாயிலில் 70 அடி உயரமுள்ள இராஜ கோபுரமும், நான்கு தூண்களுடைய மண்டபமும் மிடுக்காக காட்சியளிக்கின்றன.

Ssriram mt

கோடியக்கரை

கோடியக்கரை

கோடியக்கரையானது கோரமண்டல் கடற்கரையோரம் உள்ள கடலை ஊடுறுவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி. வேதாரண்யம் அருகில் அமைந்திருக்கும் கோடியக்கரையில் காணப்படும் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். இவ்வகை காடுகளில் இவையே கடைசியானதும் இறுதியாக எஞ்சியிருப்பதும் ஆகும். கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது.

Ssriram mt

டச்சுக்கோட்டை

டச்சுக்கோட்டை

டச்சுக்கோட்டையானது, நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள தரங்கம்பாடி என்ற ஊரில் அமைந்துள்ளது. 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, டச்சுக்கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாகும். இக்கோட்டை நுண்ணியக் கட்டிடக்கலைக்கு இன்றளவும், புகழ்பெற்று விளங்குகிறது. காலனி ஆதிக்கம் குறித்த வரலாறு மற்றும் கட்டிடக்கலை தொடர்பான ஆர்வம் உள்ளவர்கள் இக்கோட்டையைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.

Gryffindor

Read more about: travel temple beaches nagapatnam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more