Search
  • Follow NativePlanet
Share
» »ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

By Staff

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

இந்தியாவில் இருக்கும் ஒரே பாலைவனமான தார் பாலைவனம் அமைந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஆகும். இங்கே தண்ணீருக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ பழமையான கோட்டைகளுக்கும், நகரங்களுக்கும் பஞ்சமே இல்லை எனலாம். அதனால் தான் இந்தியாவில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக ராஜஸ்தான் திகழ்கிறது.  ராஜஸ்தானில் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் செல்லும் ஐந்து மிக வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.   

புந்தி:

புந்தி:

நீல நிறத்தில் மட்டுமே வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மிக குறுகலான வீதிகள், திரும்பும் இடமெங்கும் காணக்கிடைக்கும் கோயில்கள், பெரும் வரலாற்று பின்னணி கொண்ட கோட்டைகள், குளங்கள் என ராஜஸ்தானின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் இருக்கும் அத்தனை விஷயங்களும் இந்த நகரத்தில் இருந்தாலும் ஜெய்பூர், உதய்பூர் போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இன்னும் அதிகம் அறியப்படாத ஓரிடமாகவே இருக்கிறது.

புந்தியில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தளங்கள் என்னென்ன தெரியுமா?. அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

Antoine Taveneaux

புந்தி:

புந்தி:

தரகர்க்ஹ் கோட்டை அல்லது நட்சத்திர கோட்டை என அழைக்கப்படும் இந்த இடம் தான் புந்தி நகரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை காலப்போக்கில் கைவிடப்பட்டு, சிதலமடைந்து காணப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகள் சென்று காணும் வகையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அந்தக்காலத்தில் இதனுள் சுற்றியிருக்கும் மலைகளை கடந்து செல்வதற்கு ஏற்றவாறு சுரங்கப்பாதைகள் இருந்திருகின்றன. புண்டி நகரின் அழகை இந்த கோட்டையின் மதில்களில் நின்று ரசிக்கலாம்.

Arian Zwegers

புந்தி:

புந்தி:

ராணிஜி கி பவோரி,1699ஆம் ஆண்டு ராணி நாதவதியால் கட்டப்பட்ட இந்த குளம் 46அடி ஆழத்தில் அமைகப்பட்டுள்ளது. இந்த குளத்தை நோக்கி செல்லும் குறுகிய பாதையில் இரண்டு புறமும் பெரும் வேலைப்பாடுகள் நிறைந்த கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த குளத்தின் நுழைவுவாயிலில் யானை முகம் வடிக்கப்பட்ட நான்கு தூண்கள் உள்ளன. அந்தக்காலத்தில் மகாராணி நீர் எடுக்க வரும் குளமாக இது விளங்கியிருக்கிறது.

Prashant Ram

புந்தி:

புந்தி:

நாவல் சாகர்,நகரின் மையத்தில் சதுர வடிவத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரி தான் இந்த நாவல் சாகர் ஏரியாகும். இதன் மத்தியில் மழைக் கடவுளாக கருதப்படும் வருண பகவானுக்கு பாதி மூழ்கியபடி இருக்கும் கோயில் ஒன்று ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

Lev Yakupov

சாம்பார் ஏரி:

சாம்பார் ஏரி:

ராஜஸ்தான் போன்ற பாலைவன பிரதேசத்தில் ஏரிகள் இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம் ஆகும். அப்படி ராஜஸ்தானில் இருக்கும் அபூர்வமான ஏரிகளில் ஒன்று தான் சாம்பார் ஏரி ஆகும். இந்த ஏரியை சுற்றியிருக்கும் பகுதிகளில் சிறிய அளவு விவசாயம் நடைபெறுகிறது. அதிக உப்புத்தன்மை கொண்ட நீராக இருப்பதால் நூற்றாண்டுகளாக இந்த ஏரியின் அருகே உப்பு தயாரிக்கும் உப்பளங்கள் இயங்கிவருகின்றன.

Nawanshu91

பானஸ்வரா:

பானஸ்வரா:

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பானஸ்வரா என்ற ஊர் மூங்கில்களின் நாடு என்றழைக்கப்படுகிறது. காரணம் ஒரு காலத்தின் இந்தூர் இருக்கும் பகுதி முழுக்க மூங்கில் காடுகள் நிறைந்திருந்ததாம். மேலும் பானஸ்வரா 'நூறு தீவுகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதற்கு காரணம் இங்குள்ள மாஹி நதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் தான். பானஸ்வரா ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 506கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Vedpriyaa

மகான்சர்:

மகான்சர்:

மகான்சர் இங்கே கிடைக்கும் நாட்டு சரக்கு சாரயத்திற்க்காக பெயர்போன ஒரு ஊராகும். மகான்சர் பாரம்பரிய பானம் நம்ம ஊர் கள் போன்ற ஒரு பானமாகும். அது மட்டுமில்லாமல் இங்குள்ள ஹவேளிகளின் சுவர்களில் இராமாயண கதைகள் சித்திரமாக வரையப்பட்டுள்ளன.

கல்தாஜி குரங்கு கோயில்:

கல்தாஜி குரங்கு கோயில்:

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 10கி.மீ தொலைவில் உள்ளது இந்த கல்தாஜி குரங்கு கோயில் மிகவும் பிரபலமான ஆன்மீக ஸ்தலமாகும். ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள கணவாய் ஒன்றின் முகப்பில் 16ஆம் நூற்றாண்டில் திவான் ராய் கிரிபரம் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட கோயிலான இங்கே அதிகளவில் குரங்குகள் வாழ்கின்றன. அதனாலேயே இந்த பெயர் வந்துள்ளது.

China Crisis

இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more