» »டெல்லியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய அந்த 25 இடங்கள் #IndianCities25

டெல்லியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய அந்த 25 இடங்கள் #IndianCities25

Written By: Udhaya

பல அதிசயங்களை தன்னுள் பொதித்திருக்கும் அற்புத பொக்கிஷப்பெட்டி போன்று 'புராதன'த்தையும் 'நவீன'த்தையும் ஒருங்கே கொண்டுள்ள இந்த 'டெல்லி' மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெருநகரங்களில் ஒன்றாக கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஹிந்தியில் 'டில்லி' என்று உச்சரிக்கப்படும் 'டெல்லி' நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி எனப்படும் 'தேசிய தலைநகர பிரதேசம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு பார்க்

நேரு பார்க்


டெல்லி மாநகரில் சாணக்யாபுரி டிப்ளமேடிக் என்க்ளேவ் பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் இந்த நேரு பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஞாபகார்த்தமாக இந்த பூங்காவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டெல்லி நகரத்தின் பசுமைப்பிரதேசங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை வேளைகளில் ‘மியூசிக் இன் தி பார்க்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Unknown

அகரசேன் கி பாவ்லி

அகரசேன் கி பாவ்லி

அகரசேன் கி பாவ்லி டெல்லியிலுள்ள தனித்தன்மையான ஒரு சுவாரசிய கலைச்சின்னமாக வீற்றுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் நவீன கட்டமைப்புகள் மற்றும் இதர பளபளப்புகள் காரணமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் இந்த பழமையான கலைச்சின்னம் இருப்பதே பலருக்கு தெரியாது என்பதுதான் உண்மை.

அகரசேன் கி பாவ்லி இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் ஒரு வரலாற்றுச்சின்னமாகும். கன்னாட் பிளேஸ் எனும் இடத்துக்கு அருகில் ஹெய்லி ரோடில் இது அமைந்துள்ளது.

Souravmishra26

மெஹ்ரௌலி ஆர்க்கியாலஜிகல் பார்க்

மெஹ்ரௌலி ஆர்க்கியாலஜிகல் பார்க்

மெஹ்ரௌலி ஆர்க்கியாலஜிகல் பார்க் என்றழைக்கப்படும் இந்த புராதன ஸ்தலம் தெற்கு டெல்லியில் குதுப் காம்ப்ளக்ஸ் எனும் வரலாற்று ஸ்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் பார்வையாளர்கள் உள்ளே நுழைய முடியாத ஒரு வனப்பகுதியாக இந்த தொல்லியல் ஸ்தலம் அடைந்து கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொன்மையான ஸ்தலத்தில் ஏராளமான நினைவுச்சின்னங்கள் நிரம்பியுள்ளன.

Varun Shiv Kapu

நிஜாமுதீன் தர்க்கா

நிஜாமுதீன் தர்க்கா

நிஜாமுதீன் தர்க்கா ஒரு விசேஷமான சுற்றுலாத்தலம் இல்லையென்றாலும் புகழ் பெற்ற சூஃபி ஞானியான ‘நிஜாமுதீன் ஔலியா'வின் சமாதி வாசல் என்பதால் பிரசித்தி பெற்றுள்ளது. டெல்லியில் நிஜாமுதீன் மேற்குப்பகுதியில் உள்ள இந்த தர்க்கா ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்களை மட்டுமல்லாமல் பிற மதத்தை சேர்ந்த பக்தர்களையும் ஈர்த்துவருகிறது.

Unknown

 ஆசாத் ஹிந்த் கிராம்

ஆசாத் ஹிந்த் கிராம்

இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த ஆசாத் ஹிந்த் கிராம் எனும் சுற்றுலா வளாகத்தை டெல்லி சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உருவாக்கியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த ஸ்தலத்தில் தான் நேதாஜி அவர்கள் இந்திய போராட்ட வீரர்கள் முன்னிலையில் வீர உரை நிகழ்த்திச்சென்றுள்ளார். டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியில், டெல்லியிலிருந்து 2 கி.மீ தொலைவில், 10ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஆஸாத் ஹிந்த் கிராம் அமைந்துள்ளது. பாரம்பரிய கைவினை கலையம்சங்களுடன், வட இந்திய கட்டிடக்கலை பாணியில் இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது

 நேஷனல் ரயில்வே மியூசியம்

நேஷனல் ரயில்வே மியூசியம்

இந்த மியூசியத்தில் ஃபேரி க்வீன் லோகமோட்டிவ், பாடியாலா ஸ்டேட் மோனோரயில், ஃபயர் என்ஜின், க்ரேன் டேங்க், கல்கா ஷிம்லா ரயில் பஸ், ஃபயர்லெஸ் ஸ்டீம் லோகமோட்டிவ், பெட்டி டிராம்வேஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் பார்க்கலாம். இவற்றில், உலகின் பழமையான நீராவி என்ஜின்களில் ஒன்றாக கருதப்படும் ‘ஃபேரி க்வீன்' லோகமோட்டிவ் இயந்திரம் - கின்னஸ் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. இந்த மியூசியத்தின் உள்ளேயே பயணிகளை சுற்றிக் காண்பிப்பதற்காக இயக்கப்படும் சிறு ரயில் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக வசீகரிக்கிறது. திங்கள்கிழமையை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இந்த ரயில் மியூசியம் காலை 10 மணி முதல் 6 மணி வரை திறக்கப்படுகிறது.

Bruno Corpet

 உத்தர குருவாயூரப்பன் கோயில்

உத்தர குருவாயூரப்பன் கோயில்

கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள இந்த ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் கோயில் கிருஷ்ண பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 1963ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் மயூர் விஹார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. டெல்லி மக்கள் விரும்பி விஜயம் செய்யும் கோயில்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள குருவாயூரப்பன் கோயிலைப்போன்றே இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ண பஹவானுக்கு உகந்த பண்டிகை தினங்களில் இந்த கோயிலில் விசேஷ பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

Arjuncm3

மோட் கி மஸ்ஜித்

மோட் கி மஸ்ஜித்


இந்த மசூதியின் கட்டுமானம் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. சிவப்புக்கற்களால் எழுப்பப்பட்டு ஜாலி வேலைப்பாடுகள் கொண்ட ஜன்னல்கள், எண்கோண வடிவில் சமாதி பீடங்கள், விதான வளவு வாசல்கள், குமிழ்கோபுரம் மற்றும் இரண்டு அடுக்குகள் கொண்ட கோபுரங்கள் போன்ற அம்சங்களை இந்த மசூதி உள்ளடக்கியுள்ளது. இங்கு காணப்படும் நுணுக்கமான பூ வேலைப்பாடுகள் அக்கால கலைஞர்களின் திறமைக்கு சான்றாக காட்சியளிக்கின்றன. பொதுவாக அக்காலத்திய டெல்லி நகர இஸ்லாமிய கட்டமைப்புகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய மசூதிகளைப்போல் இல்லாமல், மினாரெட்டுகள், எழுத்துக்குறிப்புகள் மற்றும் அலங்காரங்கள் போன்றவை இடம் பெறாத ஒன்றாக இந்த மசூதி காட்சி அளிக்கிறது. தனித்தன்மையான கலையம்சங்களுடன் வீற்றிருக்கும் இந்த மசூதியை காண வெகு தூரத்திலிருந்தும், உலகில் பல பகுதிகளிலிருந்தும் பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் வருகை தருகின்றனர்.


Nvvchar

 டெல்லி தேசிய வனவிலங்கு பூங்கா

டெல்லி தேசிய வனவிலங்கு பூங்கா


நேஷனல் ஜுவாலஜிகல் பார்க் அல்லது டெல்லி (ஜூ) தேசிய வனவிலங்கு பூங்கா என்று அழைக்கப்படும் இந்த வளாகம் டெல்லி பழைய கோட்டைக்கு அருகில் 214 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சராசரியாக 130 வகையான விலங்கினங்களையும், பறவையினங்களையும் உள்ளடக்கிய 1350 உயிரினங்கள் இந்த பூங்காவில் வசிக்கின்றன. 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த வனவிலங்கு பூங்காவானது ‘டெல்லி ஜூ' என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இதன் பெயர் இந்தியாவின் ஏனைய வனவிலங்கு காட்சிக்கூடங்களும் பின்பற்றும்வகையில் ‘நேஷனல் ஜுவாலஜிகல் பார்க்' (தேசிய வனவிலங்கு பூங்கா) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Ankitshilu

மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பார்க்

மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பார்க்

மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பார்க் எனப்படும் இந்த பூங்கா அன்புக்குரிய துணையோடு ஏகாந்தமாக பொழுதைக்கழிக்க ஏற்ற அழகுஸ்தலமாகும். கிழக்கு டெல்லி பகுதியில் ‘அவுட்டர் ரிங் ரோடு' எனப்படும் வெளிவட்ட சாலையின் பாதையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பூங்கா ரம்மியமான பசுமைச்சூழல் மற்றும் எழிற்காட்சிகள் நிரம்பிய பொழுது போக்கு வளாகமாக பிரசித்தி பெற்றுள்ளது. இதில் ஒரு திறந்தவெளி அரங்கம், உணவு அங்காடி, நீர்வீழ்ச்சி அமைப்பு மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிகள், மரங்கள் மற்றும் மலர்ச்செடிகள் ஆகியவை நிரம்பியுள்ளன.

Manuspanicker

 தேசிய அறிவியல் மையம்

தேசிய அறிவியல் மையம்

நேஷனல் சைன்ஸ் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த தேசிய அறிவியல் மையம் உண்மையில் ஒரு அறிவியல் அருங்காட்சியகமாகும். 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த அறிவியல் மையம் டெல்லியில் பிரகதி மைதான் வாசல் எண்:1 க்கு அருகிலேயே பைரோன் சாலையில் அமைந்துள்ளது. NCSM எனப்படும் ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் சைன்ஸ் மியுசியம்ஸ்' எனும் அரசுக்குழுமத்தின் ஒரு அங்கமாக இந்த அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Biswarup Ganguly

தேசிய நாடகப்பள்ளி

தேசிய நாடகப்பள்ளி


NSD என்றழைக்கப்படும் இந்த நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா அல்லது தேசிய நாடகப்பள்ளி இந்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். 1959ம் ஆண்டு சங்கீத் நாடக அகாடமியால் துவங்கப்பட்ட இந்த நாடகப் பயிற்சிக்கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்ட கல்வி ஸ்தாபனமாக தற்போது வளர்ந்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட பயிற்றுவிப்பு முறைகள், பாடத்திட்ட அமைப்புகள் மூலம் இங்கு மாணவர்கள் நாடகக்கலையின் எல்லா நுணுக்கங்களையும் கற்று தேர வைக்கப்படுகின்றனர்.

Kalpana Naganath

தேசிய அருங்காட்சியகம்

தேசிய அருங்காட்சியகம்

மொகஞ்சதாரோவிலிருந்து எடுக்கப்பட்ட நடன மங்கை சிலை, பழங்குடி கலைப்பொருட்கள் மற்றும் ஆபரணங்கள், குறுஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், சுவரோவியங்கள், ஆடைகள், இசைக்கருவிகள், ஆயுதங்கள் மற்றும் ஜெஹாங்கீர் மன்னரால் கையெழுத்திடப்பட்டுள்ள சில அரிய கலைப்பொருட்கள் என்று ஏராளமான சேகரிப்புகளை இந்த தேசிய அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் காணலாம்.

ஓவியங்கள், ஆபரணங்கள், தொல்லியல், ஆவணங்கள், ஆயுதங்கள் மற்றும் கவசங்கள் என்று முறைப்படி வகைப்படுத்தப்பட்டு இங்கு எல்லா அரும்பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன.

தேசிய அருங்காட்சியகத்தின் பல தளங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் எல்லா அரும்பொருட்களையும் பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nomu420

 ஓல்ட் ஃபோர்ட்

ஓல்ட் ஃபோர்ட்

பிரம்மாண்டமாகவும் உயரமாகவும் காட்சியளிக்கும் சுற்றுச்சுவர்களுடன், இருபுறமும் காவல் கொத்தளங்களை கொண்ட மூன்று நுழைவாயில்களுடன் இந்த புராணா கிலா கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது. முதல் பார்வையிலேயே தனது தோற்றத்தால் நம்மை மெய்சிலிர்க்க வைப்பதுடன் வரலாற்றுக்காலத்தை நோக்கியும் நம் உணர்வுகளை இந்த அதிபிரம்மாண்ட கோட்டை இழுக்கிறது. 18 மீட்டர் (ஏறக்குறைய 60 அடி) உயரத்துடன் 1.5 கி.மீ நீளத்துக்கு இந்த கோட்டையின் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்பீரமான விதான வளைவுக்கூரை அமைப்புடன் கூடிய மூன்று பிரம்மாண்ட வாசல்களை இந்த கோட்டை பெற்றுள்ளது.

Varun Shiv Kapur

கூனி தர்வாசா

கூனி தர்வாசா


மூன்று முகலாய இளவரசர்கள் இந்த நுழைவாயில் ஸ்தலத்தில் மரணமடைந்ததால் இதற்கு குருதி தோய்ந்த வாசல் என்ற பெயர் இடப்பட்டதாக சொல்லப்படுகிறது. பஹதூர் ஷா ஜாஃபர் மன்னரின் புதல்வர்களான மிர்ஸா முகல் மற்றும் கிஜிர் சுல்தான் ஆகியோரோடு பேரனான மிர்ஸா அபு பக்கரும் இந்த இடத்தில் ஆங்கிலேய தளபதியான வில்லியம் ஹட்சன் என்பவரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 1857ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பஹதூர் ஷா மன்னர் ஆங்கிலேயப் படைகளிடம் சரணடைந்தபோது இந்த படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் இந்த நுழைவாயிலின் பெயர்க்காரணத்துக்கு வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன.

Varun Shiv Kapur

இந்தியா கேட்

இந்தியா கேட்

டெல்லி மாநகரின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான தேசியச்சின்னமாக இது கம்பீரமாக வீற்றிருக்கிறது. 42மீ உயரமுள்ள இந்த கலைச்சின்னம் பாரீஸ் நகரிலுள்ள ஆர்ச்-டி-ட்ரையோம்பே எனும் அலங்கார வளைவுக்கட்டுமானத்தின் தோற்றத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய ராணுவத்தின் சார்பாக போரிட்டு முதலாம் உலகப்போரில் இறந்த 70000 வீரர்களின் நினைவாகவும், 1919ம் ஆண்டில் நிகழ்ந்த முன்றாவது ஆங்கிலேயே-ஆப்கானியப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சின்னம் ஆரம்பகாலத்தில் ‘இந்திய போர் நினைவுச்சின்னம்' என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

Anonymous

ISKCON கோயில்

ISKCON கோயில்

புது டெல்லியின் பிரசித்தமான வைணவக்கோயிலாக இந்த ISKCON கோயில் அமைந்துள்ளது. ஷீ ராதா பார்த்தசாரதி மந்திர் என அழைக்கப்படும் இந்த கோயில் கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

புது டெல்லிக்கு கிழக்கே கைலாஷ் பகுதியில் ஹரே கிருஷ்ணா மலை எனப்படும் பசுமையான குன்றின் மீது 1998ம் ஆண்டு இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஷீ ராதா பார்த்தசாரதி மந்திரின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் அச்யுத் கன்விண்டே என்பவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே இதுபோன்ற மிகப்பெரிய கோயில் வளாகம் இதுதான் எனும் பெருமையையும் இந்த ISKCON கோயில் பெற்றுள்ளது.

Krupasindhu Muduli

கௌரி ஷங்கர் கோயில்

கௌரி ஷங்கர் கோயில்


கோயிலின் உட்பகுதியில் சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி சிலைகள் மற்றும் அவர்களது குமாரர்களான கணேஷ் மற்றும் கார்த்திக் சிலைகள் ஆகியன காணப்படுகின்றன.

அபரிமிதமான ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சிவ-பார்வதி சிலைகள் லிங்கத்தின் பின்னால் காட்சியளிக்கின்றன. லிங்கத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வெள்ளிக்கலசத்திலிருந்து தொடர்ந்து நீர் லிங்கத்தின்மீது வழிந்துகொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்கிறது.

சாந்தினி சௌக் பகுதியில் உள்ள இந்த கௌரி ஷங்கர் கோயிலுக்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.
Shamikh Faraz

குருத்வாரா பங்க்ளா சாஹீப்

குருத்வாரா பங்க்ளா சாஹீப்

சிக்கியர்களின் எட்டாவது மதகுருவான குரு ஹர் கிரிஷன் 1664ம் ஆண்டு டெல்லி பகுதிக்கு விஜயம் செய்தபோது இம்மாளிகையில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. அச்சமயம் இப்பகுதியில் அம்மை மற்றும் காலரா போன்ற உயிர்கொல்லி நோய்கள் பரவலாக மக்களை பாதித்திருந்தன. எனவே நோயால் பாதிக்கப்பட்டோர்க்கு இம்மாளிகை வளாகத்தில் இருந்த நன்னீர் கிணற்றிலிருந்து நீரை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சீக்கிய குரு வழங்கியிருக்கிறார்.

Ken Wieland

அரசு சாரா கலாச்சார மையம்

அரசு சாரா கலாச்சார மையம்

1968ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் டெல்லியிலுள்ள அரசு சாரா கலாச்சார மையமாக முதன்மையாக இயங்கி வருகிறது. இது எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள், கலைஞர்கள் மற்றும் வெளியுறவு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் போன்றோர் சர்வதேச நல்லுறவுக்காக ஒன்று கூடி ஆலோசிக்கும் இடமாக திகழ்ந்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு சமூக மக்களிடையே புரிந்துணர்வையும் நட்பையும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஸ்தாபனம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக பல்வேறு கலைந்துரையாடல்கள், சிறப்புரைகள், கலை நிகழ்ச்சிகள், சினிமாத்திரையிடல், இசை நிகழ்ச்சிகள், நிகழ்த்துகலைகள், கண்காட்சிகள் போன்றவை இந்த சர்வதேச நல்லுறவு மையத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

iicdelhi.nic

குருத்வாரா

குருத்வாரா

பல வருடங்கள் கழித்து இந்த சீக்கிய குருவின் தீவிர சீடரான பாபா பாஹேல் சிங் என்பவர் குரு கொல்லப்பட்ட அதே ஸ்தலத்தில் நினைவுச்சின்னமாக இந்த குருத்வாராவை எழுப்பியுள்ளார். டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது. 1930 ம் ஆண்டில் எழுப்பப்பட்ட இந்த குருத்வாராவில் சீக்கிய குரு படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் ஒரு மரத்தின் அடிப்பகுதி இன்றும் காணப்படுகிறது. இந்த குருத்வாராவுக்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை, ஃபெரோஸ் ஷா கொட்லா மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.

Supreet Sethi

 கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்

கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்

கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட் என்று அழைக்கப்படும் இந்த கலைக்காட்சிக்கூடம் அல்லது அருங்காட்சியகம் இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட தனியார் கலைக்கூடம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு இந்திய மற்றும் வெளிநாட்டு படைப்புகள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஓவிய மற்றும் கலைப்பொருள் சேகரிப்பில் ஆர்வம் மிகுந்த திருமதி கிரண் நாடார் அவர்களால் இந்த தனியார் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கலைப்படைப்புகள் மற்றும் சமூகப் பண்பாட்டுக்கூறுகள் ஆகிய இரண்டுக்குமிடையே உள்ள ஆழமான பிணைப்பை வெளிச்சப்படுத்தும் விதத்தில் இந்த கலைக்கூடம் பல்வேறு நூற்பதிப்புகள், கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது மக்களுக்கான கலை நிகழ்ச்சிகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

Official FB

 கல்காஜி ஆலயம்

கல்காஜி ஆலயம்

புகழ்பெற்ற கல்காஜி ஆலயம் இந்தியாவில் அதிக பக்தர்கள் விஜயம் செய்யும் புராதனக்கோயிலாக அறியப்படுகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேரு பிளேஸ் எனும் இடத்திற்கு அருகில் கால்காஜி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் ஸ்தலத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. துர்க்கா மாதாவின் அவதாரமான காளி தேவிக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
wiki

குதுப் வளாகம்

குதுப் வளாகம்


டெல்லியில் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்துள்ள குதுப் வளாகம் என்றழைக்கப்படும் இந்த புராதன வளாகத்தில்தான் உலகப்புகழ்பெற்ற குதுப் மினார் கோபுரம் வீற்றிருக்கிறது. வேறு சில முக்கியமான வரலாற்றுச்சின்னங்களும் ஒருங்கே காணப்படும் இந்த ஸ்தலம் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குத்புதீன் ஐபெக் என்பவரால் வட இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்டு அடிமை வம்சம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் குலாம் வம்ச டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் இந்த வரலாற்றுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நன்கு பராமரித்து பாதுகாக்கப்படும் இந்த குதுப் புராதன வளாகம் டெல்லியில் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

Muhammad Mahdi Karim

கொரோனஷன் பார்க்

கொரோனஷன் பார்க்


கொரோனஷன் பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா புது டெல்லியில் நிரங்காரி சரோவர் தீர்த்தத்துக்கு அருகில் புராரி சாலையில் அமைந்துள்ளது. கரோனேஷன் மெமோரியல் என்றும் அழைக்கப்படும் இந்த பூங்கா ஒற்றை மணற்பாறையால் நினைவுத் தூண் ஒன்றை கொண்டுள்ளது. நவீன இந்தியாவின் தலைநகராக டெல்லி மாறிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் இந்த கரோனேஷன் பார்க் பூங்காவும் ஒரு அங்கமாக விளங்கியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான தகவலாகும். இந்த பூங்கா ஸ்தலத்தில்தான் ஆங்கிலேயர்கள் 1877ம் ஆண்டு ஒரு அரசவைக் கூட்டத்தை நடத்தி விக்டோரியா மஹாராணியை இந்தியாவின் அரசியாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

Nvvchar

Read more about: travel delhi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்